சமணக் கோயில்கள், கஜுராஹோ

சமணக் கோயில்கள், கஜுராஹோ (Jain temples of Khajuraho), சந்தேலர்கள் ஆட்சிக் காலத்தில், தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின், புந்தேல்கண்ட் பிரதேசத்தின் கஜுராஹோ உள்ளிட்டப் பல ஊர்களில் சமண சமயம் செழித்திருந்தது. கஜுராஹோவின் கிழக்கில் சமணர்கள் பெரும்பான்மையின மக்களாக வாழ்ந்தனர். கஜுரஹோ ஊரில் சந்தேலர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட (10 - 11ஆம் நூற்றாண்டு) எண்ணற்ற சமணக் கோயில்கள், பல நிலைகளில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுவருகிறது. சந்தேல ஆட்சிக் காலத்திய பல சமணக் கல்வெட்டுகள் இன்றும் கஜுரஹோவில் காணப்படுகிறது.[1] கந்தாய் கோயில் தவிர மற்ற சமணக் கோயில்கள், 10-11-ஆம் நூற்றாண்டு காலத்தவைகள் ஆகும். இச்சமணக்கோயில்கள் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரிய களங்களில் ஒன்றாகும்.

ரிசபதேவர் கோயில், கஜுராஹோ, மத்தியப் பிரதேசம்

கோயில்கள் தொகு

கஜுராஹோவில் இரண்டு பெரிய சமணக் கோயில்கள் இன்றளவும் நல்ல நிலையில் பராமரிக்கப்படுகிறது.

பார்சுவநாதர் கோயில் தொகு

பார்சுவநாதர் கோயிலை கட்டிய சந்தேல மன்னர் தங்காவின் 954ம் ஆண்டுக் கல்வெட்டில், இக்கோயிலின் தோட்டத்திற்கு நிலம் தானமாக அளித்தவரின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.[2]

புகழ் பெற்ற அபூர்வமான 34 சதுர மற்றும் கன சதுர வடிவ யந்திரங்கள் வடிவ மேடை இக்கோயிலில் காணப்படுகிறது. [3]

 
கஜுராஹோ பார்சுவநாதர் கோயிலின் புகழ்பெற்ற சதுர யந்திர மேடை


7 12 1 14
2 13 8 11
16 3 10 5
9 6 15 4
எழுத்துப் பெயர்ப்பு
இந்திய எண்கள்

இச்சதுர மேடையை 34 மந்திர எண்களுடன் கூடியது.






ஆதிநாதர் கோயில் தொகு

ரிசபதேவர் என்ற ஆதிநாதர் கோயிலில் ஒரு சிலையும், 1027ல் இப்பகுதியை ஆண்ட சந்தேல மன்னர் மதனவர்மனின் குறிப்புகளும் உள்ளது.

சாந்திநாதர் கோயில் தொகு

சாந்திநாதர் முதன்மைக் கோயிலில் 15 அடி உயரம் கொண்ட சாந்திநாதரின் சிற்பமும், 1028ம் ஆண்டின் கல்வெட்டுகளும் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் கட்டிட கலைநயத்தில் பல சிறிய கோயில்களுடன் கட்டப்பட்டுள்ளது.

கந்தாய் கோயில் தொகு

கஜுராஹோவின் கந்தாய் கோயில், சந்தேல மன்னரால் 960ல் கட்டப்பட்டு, ரிசபதேவருக்கு அர்பணிக்கப்பட்டது. மேலும் இக்கோயிலில் ஒன்பது கோள்களுக்கும் மற்றும் கோமுக யட்சனின் அழகிய சிற்பங்களும் கொண்டது.

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. B. L. Nagarch, Jaina Inscriptions of Khajuraho, Dr. Hiralal Jain Smriti Granth, 2001
  2. Khajuraho ke Jain Mandir, Niraj Jain, 2000
  3. William Symes Andrews (1908) Magic Squares and Cubes. Open Court Publishing Company

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமணக்_கோயில்கள்,_கஜுராஹோ&oldid=3703974" இலிருந்து மீள்விக்கப்பட்டது