சமத்துவ சிலை (இராமானுஜர்)

தெலங்கானாவின், ஐதராபாத் நகரில் இராமானுசருக்கு அமைக்கப்பட்டுள்ள பிருமாண்ட சிலை

| website = www.statueofequality.org }} சமத்துவச் சிலை (Statue of Equality) என்பது வைணவ ஆச்சாரியார் இராமானுஜரின் சமத்துவக் கொள்கையைப் போற்றும்படியாகவும், அவரது ஆயிரமாண்டு பிறந்தநாள் நினைவாகவும் 216அடி உயரத்தில் தெலங்காணா மாநில தலைநகரான ஐதராபாத்தில் நிறுவப்பட்ட சிலையாகும்.

சமத்துவ சிலை
சமத்துவ சிலையின் காட்சி
ஆள்கூறுகள்17°11′10″N 78°20′00″E / 17.1860°N 78.3332°E / 17.1860; 78.3332
இடம்முசிந்தல், ஐதராபாத், தெலங்காணா, இந்தியா
வகைசிலை
கட்டுமானப் பொருள்எஃகுச் சட்டங்கள் மற்றும் பஞ்சலோகம்
உயரம்216 அடி[1]
துவங்கிய நாள்2 மே 2014; 10 ஆண்டுகள் முன்னர் (2014-05-02)[2]
முடிவுற்ற நாள்2018
தொடக்க விழா நாள்5 பெப்ரவரி 2022
அர்ப்பணிப்புஇராமானுஜர்

விளக்கம்

தொகு

சமத்துவச் சிலை (Statue of Equality) இந்தியாவின் தமிழ்நாட்டில் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சாரியார் இராமானுஜரின் சமத்துவக் கொள்கையைப் போற்றும்படியாகவும், இவரது ஆயிரமாண்டு பிறந்தநாள் நினைவாகவும் 216அடி உயரமுள்ள இச்சிலை 2019-இல் தெலங்காணா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் நகரத்தில் சின்ன ஜீயரால் நிறுவப்பட்டது.[3] இச்சிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 5 பிப்ரவரி 2022 அன்று திறந்து வைத்தார்.[4][5][6] 216 அடி உயரம் கொண்ட இராமானுஜர் சிலை, விரிந்த தாமரை வடிவ 54 அடி உயர பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

தியான நிலையில் அமர்ந்திருக்கும் பஞ்சலோக இராமானுஜர் சிலை 120 கிலோ கிராம் தங்கத்தால் மேற்பூச்சு பூசப்பட்டுள்ளது. இது இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்ததை என்பதை நினைவு கூறுகிறது.[7]

இராமானுஜர் கோயில்

தொகு

34 ஏக்கர் பரப்பில் அமைந்த இராமானுஜர் கோயிலின் தரை தளத்தில், 63,444 சதுர அடிப்பரப்பில் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றையும், தத்துவங்களை விளக்கும் சிற்பங்களும், சித்திரங்களும் கொண்டது. 30,000 சதுர அடி கொண்ட இரண்டாம் தளத்தில், இராமானுஜரின் 120 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூன்றாம் தளத்தில் 14,700 சது அடியில் வேத சாத்திரங்களின் மின் நூலகம் மற்றும் ஆய்வு மையம் உள்ளது.[6][8]

மேற்கோள்கள்

தொகு
  1. A 216-foot-tall celebration of Ramanuja
  2. "Statue Of Equality". Jeeyar Educational Trust UK. 16 March 2018. Archived from the original on 16 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
  3. "A towering tribute to Bhakti saint Ramanuja". The Hindu. 10 December 2016. பார்க்கப்பட்ட நாள் 23 May 2017.
  4. "PM Modi inaugurates Statue of Equality in Hyderabad: Key things you need to know" (in en). மின்ட். 2022-02-05. https://www.livemint.com/news/india/pm-modi-inaugurates-statue-of-equality-in-hyderabad-key-things-you-need-to-know-11644065129416.html. 
  5. ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு: சிலையை திறந்துவைத்தபின் பிரதமர் மோடி பேச்சு
  6. 6.0 6.1 Apparasu, Srinivasa Rao (19 November 2017). "Telangana's 216-feet statue of Sri Ramanujacharya to be completed by March". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
  7. Pavan, P. "Hyderabad: Statue of Equality to come up in city, hopes to show new direction in human dignity". Mumbai Mirror. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
  8. Narasimhan, T. E. (25 July 2015). "Towering over the Statue of Liberty". Business Standard India. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.

வெளி இணைப்புகள்

தொகு