சமாரியம்(III) சல்பைடு

வேதிச் சேர்மம்

சமாரியம்(III) சல்பைடு (Samarium(III) sulfide) என்பது Sm2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் கந்தகமும் சேர்ந்து இந்த அருமண் சேர்மம் உருவாகிறது. சமாரியம்(III) சல்பைடு சேர்மத்தில் சமாரியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் கந்தகம் -2 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் உள்ளன.

சமாரியம்(III) சல்பைடு
Samarium(III) sulfide
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருசமாரியம் முச்சல்பைடு; சமாரியம் செசுகியுசல்பைடு
இனங்காட்டிகள்
12067-22-0 Y
ChemSpider 145783
EC number 235-076-6
InChI
  • InChI=1S/3S.2Sm/q3*-2;2*+3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166593
SMILES
  • [S-2].[S-2].[S-2].[Sm+3].[Sm+3]
பண்புகள்
Sm2S3
வாய்ப்பாட்டு எடை 396.915 கி/மோல்
தோற்றம் செம்பழுப்பு படிகங்கள்
அடர்த்தி 5.87 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 1,720 °C (3,130 °F; 1,990 K)
Band gap 1.71 எலக்ட்ரான் வோல்ட்டு
+3300.0·10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

சமாரியம் உலோகத்தை கந்தகத்துடன் சேர்த்து சூடாக்குவது சமாரியம்(III) சல்பைடை உருவாக்குவதற்கான ஒரு வழியாகும். ஒரு மெல்லிய படலமாக இதை உருவாக்கும் மற்றொரு வழி சமாரியம்(III) குளோரைடு டார்டாரிக் அமில அணைவுச் சேர்மத்தை சோடியம் தயோசல்பேட்டில் ஊறவைப்பது ஆகும்.[1]

பண்புகள் தொகு

குறைந்த வெப்பநிலை α வடிவம் செஞ்சாய்சதுர படிக அமைப்பில் படிகமாகிறது. a=7.376, b=3.9622 c=15.352 Å என்ற அலகு செல் அளவுரு பரிமாணங்களையும் 448.7 Å3 என்ற பரும அளவையும் இப்படிகம் கொண்டுள்ளது. Sm8S12 என்ற அலகு ஒவ்வொன்றிலும் நான்கு வாய்பாட்டு அலகுகள் உள்ளன. இச்சேர்மத்தின் அடர்த்தி 5.88 கிலோ/லிட்டருக்கு வெளிவருகிறது. திண்மமாக உள்ள போது இரண்டு வகையான சமாரியம் ஒருங்கிணைப்புகள் காணப்படுகின்றன. இருமுனையுடைய முக்கோணப் பிரமிடில் சுற்றி கந்தகத்துடன் எட்டு ஒருங்கிணைக்கப்பட்ட பிணைப்பு, ஏழு மடிப்புகளுடன் மூடிய சிதைந்த எண்முக அமைப்பு என்பன அந்த இரண்டு வகையான சமாரிய ஒருங்கிணைப்புகளாகும். இந்த அமைப்பு மற்ற எளிய அருமண் தனிமங்களின் சல்பைடுகளை போல உள்ளது.[2]

சமாரியம்(III) சல்பைடு 1.7 எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் இடைவெளியைக் கொண்ட ஒரு குறைக்கடத்தி ஆகும்.[3] உயர் பகுதி மின்முனைகளில் ஒரு மெல்லிய படலமாக, சமாரியம்(III) சல்பைடு ஒரு மீமின்தேக்கி மின்கடத்தாப் பொருளாக ஆராய்ச்சியில் உள்ளது. ஒரு கிராமுக்கு 360 பாரட்கள் வரை குறிப்பிட்ட கொள்ளளவும் கொண்டுள்ளது.[4]

தொடர்புடைய சல்பைடுகள் தொகு

சமாரியம் மோனோசல்பைடும் (SmS) கலப்பு இணைதிற Sm3S4 சேர்மமும் இதனுடன் தொடர்புடைய சல்பைடுகளாகும். இவையும் குறைக்கடத்திகளாகும்.[5] KSm2CuS6 என்பது ஓர் அடுக்கு நான்கிணைய சல்பைடு ஆகும்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Kumbhar, V.S.; Jagadale, A.D.; Lokhande, C.D. (July 2013). "Supercapacitive evaluation of soft chemically deposited α-Sm2S3 thin films". Journal of Power Sources 234: 107–110. doi:10.1016/j.jpowsour.2013.01.078. 
  2. Aruga, Atsushi; Tsujimi, Sachiko; Nakai, Izumi (1996). "Crystal Structure of Samarium Sesquisulfide, α-Sm2S3.". Analytical Sciences 12 (1): 151–152. doi:10.2116/analsci.12.151. 
  3. Marin, Chris M.; Wang, Lu; Brewer, Joseph R.; Mei, Wai-Ning; Cheung, Chin Li (June 2013). "Crystalline α-Sm2S3 nanowires: Structure and optical properties of an unusual intrinsically degenerate semiconductor". Journal of Alloys and Compounds 563: 293–299. doi:10.1016/j.jallcom.2013.02.082. 
  4. Ghogare, T.T.; Lokhande, V.C.; Ji, T.; Patil, U.M.; Lokhande, C.D. (June 2020). "A graphene oxide /samarium sulfide (GO/Sm2S3) composite thin film: Preparation and electrochemical study". Surfaces and Interfaces 19: 100507. doi:10.1016/j.surfin.2020.100507. 
  5. Wang, Lu; Marin, Chris; Mei, Wai-Ning; Cheung, Chin (31 May 2015). "Electronic structures of lanthanum, samarium, and gadolinium sulfides". AIMS Materials Science 2 (2): 97–105. doi:10.3934/matersci.2015.2.97. https://digitalcommons.unomaha.edu/physicsfacpub/62/. 
  6. Pomelova, Tatiana A.; Podlipskaya, Tatiana Yu.; Kuratieva, Natalia V.; Cherkov, Alexander G.; Nebogatikova, Nadezhda A.; Ryzhikov, Maxim R.; Huguenot, Arthur; Gautier, Régis et al. (2018-11-05). "Synthesis, Crystal Structure, and Liquid Exfoliation of Layered Lanthanide Sulfides KLn 2 CuS 6 (Ln = La, Ce, Pr, Nd, Sm)" (in en). Inorganic Chemistry 57 (21): 13594–13605. doi:10.1021/acs.inorgchem.8b02213. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:30354089. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.8b02213. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(III)_சல்பைடு&oldid=3940008" இலிருந்து மீள்விக்கப்பட்டது