சம்பா மோசனம் (நெல்)

சம்பா மோசனம் அல்லது மோசன சம்பா (Samba Mosanam) என்பது ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். பள்ளமானப் பகுதிகளில் பயிரிட ஏற்ற இரகமான இது, 160 நாட்களில் அறுவடை வயதை அடையக்கூடிய இரகமாகும். சேற்று பகுதிகளிலும் செழித்து வளரக்கூடிய இவ்வகை நெல் விதையை, அதிகத் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீர் வருவதற்கு முன்புள்ள எவ்விதமான மண்ணிலும் தெளித்துவிட்டால், மழை பெய்யும்போது குறைந்த ஈரத்திலேயே முளைத்துவிடும்.[2]

சம்பா மோசனம்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
160 - 165 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

வளரியல்பு தொகு

வறட்சியாகவுள்ள ஏரிகள், குளங்கள், மற்றும் கண்மாய்க் கரையோரங்களில் இந்நெல்லைப் பயிரிடலாம். பின்னர் மழைபெய்து தண்ணீரின் அளவு உயரும்போது நீருக்குள்ளேயே கதிர் வளர்ந்து முற்றி, அதிக மகசூல் கொடுக்ககூடியது. அனைத்து நிலைகளையும் எதிர்கொண்டு நல்ல பலனைக் கொடுப்பதால், இதற்குச் சம்பா மோசனம் என்று பெயர் வந்துள்ளது.[2]

சத்துக்கள் தொகு

சம்பா மோசன நெல் எவ்வித உரமுமின்றி இயற்கையாகவே விளைவதால், புரதச் சத்துகள், தாது உப்புகள் நிறைந்தது. இந்நெல்லின் அரிசிச் சோற்றை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும் அதிகரிக்கும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளைத் தரக்கூடியது.[2] இட்லி, தோசை, அவல், கஞ்சி, மற்றும் பலகாரங்கள் போன்ற உணவு வகைகளுக்கும் ஏற்ற இரகமாக விளங்குகிறது.[3]

பருவகாலம் தொகு

மத்திய, மற்றும் 160 நாள் முதல், 165 நாள் வரையிலான நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த சம்பா மோசனம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சம்பா பட்டம் எனப்படும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் இரகமாகும்.[4]

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. Samba Mosanam
  2. 2.0 2.1 2.2 "நம் நெல் அறிவோம்: எதையும் தாங்கும் சம்பா மோசனம்". tamil.thehindu.com (தமிழ்) - September 5, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-16.
  3. "PADDY VARIETIES CONSERVED BY CIKS". ciks.org (ஆங்கிலம்) - 2016. Archived from the original on 2017-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-01-06. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  4. பாரம்பரிய நெல் இரகங்களின் பட்டங்கள்-கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பா_மோசனம்_(நெல்)&oldid=3722489" இலிருந்து மீள்விக்கப்பட்டது