சம்பூர் அனல்மின் நிலையம்

சம்பூர் அனல்மின் நிலையம் (Sampur Power Station) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில் சம்பூர் எனுமிடத்தில் அமையப்பெறவுள்ள ஒரு நிலக்கரி அனல் மின் நிலையமாகும் [1]. இந்தியாவின் தேசிய நிலக்கரி மின் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன இந்த அனல் மின் நிலையத்தை அமைத்துவருகின்றன. இதற்குமேல் எந்தவொரு அனல் மின் நிலையத்தையும் இலங்கையில் அமைப்பதில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது[2]. இலங்கையில் அதிகரித்துவரும் மின்சாரத் தேவையினை நிவர்த்தி செய்ய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டம் 1985ம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அரசாங்கப் புள்ளிவிபரத் தகவல்களின்படி இலங்கையின் மின்சாரத் தேவை வருடாந்தம் 8- 9 சதவீதத்தினால் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1985 களிலும் அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட போதும் பல காரணங்களினால் அது தடைப்பட்டது.

சம்பூர் அனல்மின் நிலையம்
Sampur Power Station
நாடுஇலங்கை
அமைவு08°29′10″N 81°18′00″E / 8.48611°N 81.30000°E / 8.48611; 81.30000
நிலைAbandoned
அமைப்புச் செலவுUS$350 million
உரிமையாளர்CEB, NTPC

இரண்டாவது அனல்மின் நிலையம்தொகு

சம்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது இலங்கையின் இரண்டாவது அனல்மின் நிலையமாகும். இலங்கையின் முதலாவது அனல் மின் நிலையம் புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு சீனா அரசாங்கம் உதவி புரிந்து வருகின்றது.

கூட்டு முயற்சிதொகு

சம்பூர் அனல்மின் நிலையத்தினை இலங்கை மின்சார சபையும், இந்தியா என்.ரீ.பீ.சி. கம்பனியும் இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டு ஒப்பந்தம் செப்டம்பர் 6 2011இல் கைச்சாத்திடப்பட்டது.

எதிர்பார்க்கைதொகு

500 மெகா வாற்ஸ்(வாட்) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக சம்பூர் அனல்மின் நிலையத்தை அமைத்தல்.

செலவுதொகு

இந்நிலையத்தின் வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தச் செலவில் இந்தியா இலங்கை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்றுக் கொள்ளவுள்ளன.

இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர் காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. சம்பூர் அனல்மின் நிலையத்திற்கான உபகரணங்களை இந்தியா வழங்கும். 25 வருடங்களுக்கு குறித்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும்.

வேலைத்திட்ட நிறைவுதொகு

இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சம்பூர்தொகு

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நடந்த போரின்போது, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து அரசு கைப்பற்றிய முதல் இடம் சம்பூர் பகுதி. 2006 ஆம் ஆண்டு அந்தப் பகுதியை இலங்கை அரசு கைப்பற்றிய பிறகு, அது உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

எதிர்ப்புகள்தொகு

சம்பூரில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்களது இடங்களில் இந்த மின்நிலையம் வருவதை எதிர்த்து வந்துள்ளனர். ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையான ஒரு விடயமாகவே இருந்துள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய உதவியுடன் அமையவுள்ள சம்பூர் அனல் மின்திட்டத்தினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என உள்ளூர் பழங்குடி மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.[3]

இவற்றையும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

  1. Ministry of Power and Energy (PDF), 2009-07-11 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது, 2010-08-09 அன்று பார்க்கப்பட்டது
  2. No more coal plants, 2010-08-08 அன்று பார்க்கப்பட்டது
  3. சம்பூர் அனல் மின்திட்டத்துக்கு ஆதிவாசிகள் எதிர்ப்பு

வெளியிணைப்புகள்தொகு