சரவாக் சுரிலி

சரவாக் சுரிலி[1]
1 - ஆண், 2 - பெண்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
செர்கோபித்திசிடே
பேரினம்:
பிரசுபைடிசு
இனம்:
பி. கிரிசோமெலசு
இருசொற் பெயரீடு
பிரசுபைடிசு கிரிசோமெலசு
முல்லர் & சீஜெலெஜல், 1838
சரவாக் சுரிலி பரம்பல்

சரவாக் சுரிலி (Sarawak surili)(பிரசுபைடிசு கிரிசோமெலசு) என்பது செர்கோபிதெசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை உச்சவுயர்வுட்பால்குடி சிற்றினம் ஆகும். இது தென்கிழக்கு ஆசியத் தீவான போர்னியோவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி.[1] இது கபுவாஸ் ஆற்றின் வடக்கே கலிமந்தான், இந்தோனேசியா, மலேசியா மாநிலங்களான சரவாக் மற்றும் சபா மற்றும் புருணையில் காணப்படுகிறது. இதன் வகைப்பாட்டியல் சிக்கலானது மற்றும் சர்ச்சைக்குரியது.[3] மேலும் இது பி. பெமோராலிசுஅல்லது பி. மெலோபோலசு துணையினமாகக் கருதப்படுகிறது.[1] சரவாக் சுரிலி முன்பு பொதுவாகக் காணப்படும் மந்தியாக இருந்தது. ஆனால் துன்புறுத்தல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக இதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும் 2008ஆம் ஆண்டு வரை 200-500 மந்திகள் ஐந்து இடங்களில் மட்டுமே அறியப்பட்டது.[2] இதன் விளைவாக, இது உலகின் மிக அரிதான விலங்குகளில் ஒன்றாக இருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மிக அருகிய இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100642. 
  2. 2.0 2.1 2.2 Nijman, V.; Hon, J.; Richardson, M. (2008). "Presbytis chrysomelas". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T39803A10268236. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T39803A10268236.en. http://www.iucnredlist.org/details/39803/0. பார்த்த நாள்: 12 January 2018. 
  3. Brandon-Jones, D., Eudey, A. A., Geissmann, T., Groves, C. P., Melnick, D. J., Morales, J. C., Shekelle, M. and Stewart, C.-B. 2004. Asian primate classification. International Journal of Primatology 25(1): 97-164.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்_சுரிலி&oldid=3441694" இலிருந்து மீள்விக்கப்பட்டது