சரஸ்வதி நல்லதம்பி

மாண்புமிகு சரஸ்வதி நல்லதம்பி (ஆங்கிலம்: YB Puan Saraswathy A/P Nallathamby) (பிறப்பு: 1964) என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய அரசியல்வாதி ஆவார்.

சரஸ்வதி நல்லதம்பி
கெமேலா சட்டமன்றத் தொகுதி
ஜொகூர் மாநில சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
பெரும்பான்மை1,611 (2022)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1964
அரசியல் கட்சிமலேசிய இந்திய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

இவர் தற்போது பாரிசான் நேசனல் - மஇகா சார்பில், ஜொகூர் மாநில சட்டமன்றம் (சிகாமட் மாவட்டம்), கெமேலா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றுகிறார் [1]

2022 தேர்தல்

தொகு

கெமேலா சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்களில் 55% விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோர் மலாய்க்காரர்கள் ஆவார்கள். 2022 மலேசியப் பொதுத் தேர்தலில், சரஸ்வதி நல்லதம்பியை எதிர்த்து மலாய் வேட்பாளர்கள் 3 பேர் போட்டியிட்டனர்.

அவர்களில் ஒருவரான பாக்காத்தான் அரப்பான் வேட்பாளர் சுலைமான் முகட் நோர், ஏற்கனவே அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். கெமேலா தொகுதியில் முன்னணி அரசியல்வாமதியாக அறியப்பட்டவர். இருப்பினும், அவரையும் வீழ்த்தி, அந்தத் தொகுதியில் ஒரு தமிழ்ப்பெண்மணி வெற்றி பெற்றது, அந்த வட்டாரத்தில் ஓர் அரசியல் சாதனையாக அறியப்படுகிறது.

33,702 வாக்களர்கள் கொண்ட கெமேலா சட்டமன்றத் தொகுதியில் 18,770 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்தத் தேர்தலில் சரஸ்வதி நல்லதம்பி 7,518 வாக்குகள் பெற்று 1,611 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பொது

தொகு

சரஸ்வதி நல்லதம்பி, மஇகாவின் தேசிய மகளிர் பிரிவின் தலைவியாகப் பொறுப்பு வகிக்கிறார். 2024 சூன் மாதம், கோலாலமபூர்|கோலாலம்பூரில் நடைபெற்ற மஇகாவின் தேசிய அளவிலான தேர்தலில், சரஸ்வதி நல்லதம்பி போடியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

2024-2027 தவணைக்கான பதவிக்கு அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், சரஸ்வதி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.[2] தற்போது ஜொகூர் மாநில மஇகாவின் மகளிர் பிரிவின் தலைவியாகவும் பொறுப்பு வகிக்கிறார்.

வாழ்க்கை

தொகு

கெடா, மலேசிய உத்தாரா பல்கலைக்கழகத்தில் (Universiti Utara Malaysia) (UUM) உளவியல் துறையில் பட்டம் பெற்றவர். மேலும், சிங்கப்பூர் சட்டக் கல்லூரியில் (Singapore Academy of Law) வணிக மேலாண்மையில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Business Management) பெற்றவர் ஆவார்.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.astroawani.com/berita-politik/prn-johor-pengundi-dun-kemelah-perlukan-kasih-sayang-saya-calon-mic-350890
  2. "Saraswathy Nallathamby has been elected uncontested as the president of the MIC National Women's Wing". Vanakkam Malaysia. பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
  3. "Keputusan - Pilihan Raya Umum Malaysia Ke-15". PRU @ Sinar Harian. பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_நல்லதம்பி&oldid=4096629" இலிருந்து மீள்விக்கப்பட்டது