சரஸ்வதி பர்வதம் I
சரஸ்வதி பர்வதம் I (Saraswati Parbat I, இந்தி: सरस्वती पर्वत I) என்பது இமயமலையில் அமைந்துள்ள ஒரு மலைச் சிகரமாகும். இது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவிற்குள் அமைந்துள்ள மலைகளில் 45வது உயரமான மலையாகும். இந்த வகையில் மிக உயரமான மலை நந்தா தேவி ஆகும். சரஸ்வதி பர்வதம் I உலகின் 311வது உயரமான சிகரமாகும். இந்த சிகரமானது 6940 மீட்டர் அல்லது 22769 அடி உயரம் கொண்டது. இது காமெட் ஜாஸ்கர் மலைத்தொடரின் கீழ் வருகிறது. [3] இந்த சிகரத்தை அடைய முதன்முதலில் இந்திய-யப்பானிய பெண்கள் பயணத்தில் சந்தோஷ் யாதவ் தலைமையில், (தலைவர்), ரெய்கோ தெரசாவா (ஜப்பானிய தலைவர்) முயற்சி செய்யப்பட்டது. [4]
சரஸ்வதி பர்வதம் I | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Uttarakhand" does not exist.
| |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,940 m (22,770 அடி)[1] |
புடைப்பு | 871 m (2,858 அடி)[2] |
ஆள்கூறு | 31°01′54″N 79°30′06″E / 31.03167°N 79.50167°E |
புவியியல் | |
அமைவிடம் | உத்தராகண்டம், இந்தியா |
மூலத் தொடர் | Garhwal Himalaya |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | இந்தோ-யப்பானிய பெண்கள் பயணத்தின் முதல் மலை ஏற்றம். 1992 ஆகத்து 18 அன்று சிகரத்தின் உச்சியை அடைந்தனர். |
மலை ஏற்ற வரலாறு
தொகுஇந்த சிகரத்தில் முதன் முதலில் இந்தோ-யப்பானிய பெண்கள் பயணத்தில் 18 ஆகத்து 1992 அன்று ஏறினர். இப்பயணமானது சந்தோஷ் யாதவ், (தலைவர்) மற்றும் ரெய்கோ தெரசாவா (யப்பானியத் தலைவர்) தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. குழுவின் மற்ற உறுப்பினர்களாக ரீட்டா படேல், (மருத்துவர்) அல்பனா பாங்டே, டகாகோ கட்டோ, மயூமி சிராசாவா, எமிகோ யமகுச்சி, யோஷி கமேடா, எரி குசுதா (யப்பானியர்), ஜோதிகா நேகி, பனிதா திமுங்பி, மம்தா தாகூர் (இந்தியர்) ஆகியோர் இருந்தனர். இந்திய அணி 18 ஆகத்து 1992 அன்று மாலை 4 மணிக்கு சிகரத்தின் உச்சியை முதன்முதலில் அடைந்தது. மறுநாள் ஆகத்து 19 அன்று ஜப்பானிய அணியும் உச்சியை அடைந்தது. இவர்கள் உச்சியை அடைய 3 முகாம்களை அமைத்தனர். [4]
அண்டை மற்றும் துணை சிகரங்கள்
தொகுசரஸ்வதி பவதம் I இன் அண்டை அல்லது துணை சிகரங்கள்:
- காமெட், 7,756 மீ ( 25,446 அடி),30°55′12″N 79°35′30″E / 30.92000°N 79.59167°E
- முகுத் பவதம், 7,242 மீ (23,760 அடி),30°56′57″N 79°34′12″E / 30.94917°N 79.57000°E
- அபி கமின், 7,355 மீ (24,131 அடி)30°56′59″N 79°14′30″E / 30.94972°N 79.24167°E
- சாம்ராவ் பர்வதம் I, 6,910 மீ (24,131 அடி)30°59′24″N 79°31′45″E / 30.99000°N 79.52917°E
பனிப்பாறைகளும் ஆறுகளும்
தொகுபால்பாலா பனிப்பாறை . சரசுவதி ஆறு .