சராபுதீன் அஸ்ரப்
ஷராபுதீன் அஷ்ரப் (பிறப்பு 10 ஜனவரி 1995) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட அணியின் வீரர் . இவர் ஜூலை 2014 இல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார்.இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
உள்ளூர் போட்டிகள்
தொகுஜூலை 2018 இல் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டித் தொடரில் ஐந்து போட்டிகளில் பன்னிரண்டு இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளைக் கைப்பற்றிய அமோ ஷார்க்ஸ் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முன்னணி இருந்தார்.[1] இவர் சகலத் துறையராக செயல்பட்டதற்காக தொடர் நாயகன் விருதினையும் வென்றார்.[2]
செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் இவர் பக்தியா அணியில் இடம் பெற்றார்.[3] 2019 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 11, லக்னோ துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்ட போட்டியில் இவருக்கு மட்டயாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 57 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி 5 இலக்குகளில் வென்றது.[4] 2014 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானித்தான் அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 1, காபூல் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 24 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்து மத்சிவா ஆட்டமிழந்தார். இதில் 3 நான்குகளும் அடங்கும்.பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 33 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 1 ஓவர்களை மெய்டனாக வீசி 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி 8 இலக்குகளில் வெற்றி பெற்றது.[5]
சர்வதேச வாழ்க்கை
தொகுஜூலை 2014 இல் சிம்பாப்வெ துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்காக தனது ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[6] 2019 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 11, லக்னோ துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற மேற்கிந்த்யத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவருக்கு மட்டயாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 57 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் மேஎற்கிந்தியத் தீவுஅள் துடுப்பாட்ட அணி 5 இலக்குகளில் வென்றது.[4] இவர் ஜூலை 9, 2015 அன்று நடைபெற்ற 2015 ஐ.சி.சி உலக இருபது -20 தகுதிப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக பன்னாட்டு இருபது போட்டியில் இவர் அறிமுகமானார்.[7] பிப்ரவரி 2019 இல், இந்தியாவில் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தானின் அணியில் இவர் இடம் பெற்றார், ஆனால் இவர் விளையாடவில்லை.[8][9]
குறிப்புகள்
தொகு- ↑ "2018 Ghazi Amanullah Khan Regional One Day Tournament, Amo Region: Batting and Bowling Averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 July 2018.
- ↑ "Buoyant Bost clinch the title". Afghanistan Cricket Board. Archived from the original on 27 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Afghanistan Premier League 2018 – All you need to know from the player draft". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
- ↑ 4.0 4.1 "Full Scorecard of Afghanistan vs West Indies 3rd ODI 2019 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-19.
- ↑ "Full Scorecard of Zimbabwe A vs Afghanistan 2nd unofficial Test 2014 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-19.
- ↑ "Afghanistan in Zimbabwe ODI Series, 1st ODI: Zimbabwe v Afghanistan at Bulawayo, Jul 18, 2014". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.
- ↑ "ICC World Twenty20 Qualifier, 2nd Match, Group B: Afghanistan v Netherlands at Edinburgh, Jul 9, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
- ↑ "Mujeeb left out for Ireland Test, Shahzad out of T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
- ↑ "No Mujeeb in Tests as Afghanistan announce squads for Ireland series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.