சர்க்கராதேவி கோயில்

சர்க்கராதேவி கோயில் தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிராயின்கீழு நகரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் பத்ரகாளி (துர்கா தேவி). ஆவார். சர்க்கராதேவி கோயில் பல காரணங்களுக்காக குறிப்பிடத்தக்க சிறப்பைப் பெற்றது. கி.பி.1748 இல் திருவிதாங்கூர் பேரரசர் அனிசம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவால் புகழ்பெற்ற காளியூட் திருவிழாவை அறிமுகப்படுத்தியதன் மூலமாக இக்கோயில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அட்டிங்கலில் அவனவஞ்சேரி என்னுமிடத்தில் அமைந்துள்ள நக்ரம்கோடு தேவி கோயிலுக்கும் இக்கோயிலுக்கும் இடையில் சில அடிப்படை தொடர்பு உள்ளது. இது ஒரு யாத்திரைத் தலமாகும். [1]

சர்க்கராதேவி கோயிலுக்கு எதிரே உள்ள புளியமரம்

வரலாறு

தொகு

சிராயின்கீழு வட்டம் நேரடியாக அட்டிங்கல், கேரள ஸ்வரூபம், அட்டிங்கல் ராணிகளின் உடனடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அங்குதான் திருவிதாங்கூர் ராஜாவால் விரிவான வகையில் காளியூட் திருவிழா நடத்தப்பட்டது. அட்டிங்கல் ராணி கொளத்துநாடு அரச குடும்பத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டதன் மூலம் திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் தொடர்புடையவர் ஆவார். வேணாடு மன்னர்கள் காலம் தொடங்கி அண்டை பகுதிகள் மற்றும் கோயில்கள் மற்றும் சில சமயங்களில் முழு வேணாடு மீதும் அவர்கள் பல உரிமைகளை அனுபவித்து வந்தனர். அரியணை ஏறியவுடன் மன்னர் மார்த்தாண்ட வர்மா கூட அட்டிங்கலை திருவிதாங்கூருடன் இணைத்தார். தொடர்ந்து மார்த்தாண்ட வர்மா அட்டிங்கல் 'எஸ்டேட்டின்' நேரடி கட்டுப்பாட்டில் கொணர்ந்தார். பல வகைகளில் ராணிகள் தங்கள் தனித்த நிலையைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். ஆதலால்தான் சிராயின்கீழ் கோட்டத்தில் உள்ள சர்க்கராதேவி கோயிலில் காளியூட் திருவிழாவை அறிமுகப்படுத்த முடிவு செய்தபோது, திருவிதாங்கூர் அரச கருவூலத்திலிருந்து நிதி நேரடியாக வந்தாலும், அவர் பொறுப்பை அட்டிங்கல் ராணிகளிடம் ஒப்படைத்தார் என்பதில் ஆச்சரியமில்லை.

திருவிழாக்கள்

தொகு

காளியூட்டு, மீனபரணி உள்ளிட்ட பல விழாக்கள்இங்கு கொண்டாடப்படுகின்றன.

 
காளியூட்டுத் திருவிழா

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்க்கராதேவி_கோயில்&oldid=3822452" இலிருந்து மீள்விக்கப்பட்டது