சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்

சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம் (Sardar Vallabhbhai Patel National Memorial) வல்லபாய் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி மையமாகும். இந்த நினைவகமானது 1618 மற்றும் 1622 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனையான மோதி ஷாஹி மஹாலில் செயல்பட்டு வருகிறது. இது குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஷாஹிபாக் என்னும் இடத்தில் சிவில் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது. இது நன்கு அமைக்கப்பட்ட தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்
மோதி ஷாஹி மஹால்
Map
நிறுவப்பட்டது7 மார்ச்சு 1980 (1980-03-07)
அமைவிடம்ஷாஹிபாக், அகமதாபாத், குஜராத்
ஆள்கூற்று23°03′40″N 72°35′28″E / 23.061°N 72.591°E / 23.061; 72.591
வகைநினைவகம், பாரம்பரிய மையம்
மேற்பார்வையாளர்ஷாஜஹான்
உரிமையாளர்சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவக சங்கம்

வரலாறு தொகு

இந்த அரண்மனை 1622ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் 1616 ஆண்டு முதல் 1622ஆம் ஆண்டுக்கிடையே உள்ள காலகட்டத்தில் கட்டப்பட்டது. அப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது ஏழை மக்களுக்கு வேலை தருவதற்காக இது கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரச மாளிகையிலிருந்து சிறிது தூரத்தில், சபர்மதி ஆற்றின் கரையில், தனித்தனி தோட்டங்கள், குளியல் மற்றும் நீரூற்றுகளுடன், ஜனனா அல்லது பெண்கள் அரண்மனை இருந்தது. 1638 ஆம் ஆண்டில் அங்கிருந்த ஷாஹி பாக் தோட்டம் மிகப் பெரியதாக இருந்தது, ஒரு பெரிய சுவரால் மூடப்பட்டிருந்தது, அதில் தண்ணீர் நிரம்பிய பள்ளங்கள், ஒரு அழகான வீடு மற்றும் மிகவும் பெரிய அறைகள் இருந்தன. 1666 ஆம் ஆண்டில் தெவனோட் அனைத்து வகையான மரங்களும் நிறைந்த கிங்ஸ் தோட்டத்தைக் அங்கு கண்டார். பாரிஸில் உள்ளதைப் போன்ற வடிவில் ஒரு அவென்யூ வழியாக இந்த சாலை அமைந்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அகமதாபாத் கன்டோன்மென்ட் நிறுவப்பட்டபோது இந்த அரண்மனை பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. பின்னர் தொடர்ந்த அது அரச நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. வில்லியம்ஸ் என்பவரால் 1835 ஆம் ஆண்டுவாக்கில் சில கட்டங்கள் மேலும் கட்டப்பட்டன. அவற்றுள் பல அறைகள் மாடிகள் உள்ளிட்டவை அடங்கும். நீதிமன்றத்தின் அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான குடியிருப்புகள் பின்னர் சேர்க்கப்பட்டன. 1875 ஆம் ஆண்டின் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின்போது, ஆற்றின் தெற்கே நகரை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் வலுவான கல் சுவர் சற்று சேதம் அடைந்தது. தோட்டத்தின் பல பகுதிகள் அப்போது அழிந்துபோயின.

இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து, இந்த அரண்மனை 1960 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை குஜராத் ஆளுநரின் அலுவலகபூர்வ இல்லமான ராஜ் பவன் ஆக செயல்பட்டு வந்தது. குஜராத் அரசு 1975 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேலின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது அவருடைய புகழைப் பறைசாற்றும் வகையில் நினைவுச்சின்னம் மார்ச் 7, 1980 ஆம் நாளன்று நிறுவப்பட்டது.[1][2]

கட்டிடக்கலை தொகு

மோதி ஷாஹி மஹால் முகலாய கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் டக்ளஸ் இது பிற்காலத்தில் தாஜ்மஹால் கட்டுவதற்கு ஷாஜகானை தூண்டியது என்று கூறுகிறார். நான்கு தூண்கள் ஒரு தளம் மற்றும் அரண்மனையின் மைய மண்டபம் ஆகியவை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டு இது அமைந்துள்ளது.[1]

 
அருங்காட்சியகத்திற்கு வெளியே படேலின் சிலை.

காட்சிப் பொருள்கள் தொகு

சர்தார் சரோவர் திட்டம் தொகு

 
படேலின் தனிப்பட்ட கலைப்பொருட்கள்

குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய நர்மதா நதி பள்ளத்தாக்கில் ஒரு பெரிய அணை மற்றும் நீர்மின்சார நிலையங்கள் அமைக்க உருவாக்கப்பட்ட சர்தார் சரோவர் திட்டத்திற்காக ஒரு பெரிய அறையும், மற்றொரு அறையும் தரைதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் ஒரு பெரிய அறை மற்றும் துணை மண்டபம் காணப்படுகின்றன. அறையில் படங்கள், கிராபிக்ஸ், புத்தகங்கள், புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன - அதன் தொடக்க காலம் தொடங்கி, அதன் தொழில்நுட்ப விவரங்கள், கட்டுமானம் உள்ளிட்ட பல விவரங்களோடு தற்போதைய செயல்பாடு குறித்தவையும் அங்கு உள்ளன.

சீரமைப்பு தொகு

2012 ஆம் ஆண்டில் இந்திய அரசு இந்த கட்டமைப்பிற்கு நிதியுதவி அளித்தது. இருந்தபோதிலும் பின்னர் குஜராத் உயர் நீதிமன்றம் புதுப்பித்தல் பணிகளை இடைநிறுத்த உத்தரவிட்டது.[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Mukherjee Parikh, Runa (27 July 2012). "‘Renovation’ ruining Shah Jahan’s palace". The Times of India. TNN (Ahmedabad) இம் மூலத்தில் இருந்து 18 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130618062112/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-27/ahmedabad/32888535_1_shah-jahan-renovation-palace. பார்த்த நாள்: 8 March 2013. 
  2. "HC stays renovation at Shah Jahan Monument". The Indian Express (Ahmedabad). 17 August 2012. http://www.indianexpress.com/news/hc-stays-renovation-at-shah-jahan-monument/989450. பார்த்த நாள்: 8 March 2013. 

வெளி இணைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு