சர்மிளா மந்த்ரே
சர்மிளா மந்த்ரே[3][4] (பிறப்பு 28 அக்டோபர் 1987) ஓர் இந்திய நடிகையும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார், இவர் முதன்மையாக கன்னட படங்களில் பணிபுரிகிறார். இவர் சஜ்னி (2007) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு கிருஷ்ணா என்ற படத்தில் தோன்ரினார் பிரபலமானர். இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு (2018) என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் மந்த்ரே தயாரிப்பாளராகவும் மாறினார்.[5]
சர்மிளா மந்த்ரே | |
---|---|
2013இல் சர்மிளா மந்த்ரே | |
பிறப்பு | அக்டோபர் 28, 1987[1][2] பெங்களூர், கருநாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சர்மிளா மந்த்ரே |
கல்வி | சோபியா உயர்நிலைப்பள்ளி, பெங்களூர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2007–தற்போது வரை |
உறவினர்கள் | சுனந்தா முரளி மனோகர் (அத்தை) |
பிறகு, சங்கட (2009) மற்றும் சுயம்வர (2010) என்ற கன்னடப் படங்களில் நடித்தார். தமிழில் மிரட்டல் (2012) மற்றும் தெலுங்கில் கெவ்வு கேகா (2013) படங்களின் மூலம் அறிமுகமானார். கெவ்வு கேகா படத்திற்காக, இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கானதென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதைப் பெற்றார் . ஆகே (2017) மற்றும் காலிபட்டா 2 (2022) ஆகியவை சர்மிளாவின் மற்ற குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.[6]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுசர்மிளா மந்த்ரே, 28 அக்டோபர் 1987 அன்று [2][7] கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவரது தந்தை தயானந்த மந்த்ரே ஒரு தொழிலதிபரும் மற்றும் தானுந்து பந்தய ஆர்வலரும் ஆவார். இவரது தாத்தா ராமானந்த நாராயணராவ் மந்த்ரே [8] ஒரு திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்ரும் மற்றும் பெங்களூரு சங்கம் டாக்கீஸ் நிறுவனரும் ஆவார். திரைப்பட தயாரிப்பாளரான சுனந்தா முரளி மனோகர் இவரது அத்தையாவார்.[9] பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.[10]
சொந்த வாழ்க்கை
தொகுமந்த்ரே தனது பெயரை ஷர்மிளா மாண்ட்ரேவிலிருந்து ஷர்மிலா மாண்ட்ரே என்று 2013 இல் மாற்றிக்கொண்டார். இது ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று அவர் கூறினார்.
பிற பணிகள்
தொகு2018 இல், சர்மிளா மந்த்ரே புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு (2018) மற்றும் நானும் சிங்கிள்தான் ஆகிய தமிழ் படங்களைத் தனது தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்துள்ளார்.[11][12] தமிழ் படங்களான சண்டக்காரி மற்றும் காதல் கொஞ்சம் தூக்கலா மற்றும் கன்னட படமான தசரா போன்ற படங்களை தனது நிறுவனத்தில் தயாரித்து அதில் இவர் நடித்தும் இருந்தார்.[13][14]
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மிகவும் விரும்பத்தக்க 25 பெண்கள் பட்டியலில் இவரை 2012 இல் 10வது இடத்திலும் 2014 இல் 8வது இடத்திலிலும் சேர்த்தது.[15][16] அதன் 2020 ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க 30 பெண்கள் பட்டியலில், இவர் 20வது இடத்தைப் பிடித்தார்.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sathish Ninasam's birthday wish for Gaalipata 2 actress Sharmiela Mandre is all things beautiful". Zoom TV. 28 October 2020. பார்க்கப்பட்ட நாள் 28 October 2021.
- ↑ 2.0 2.1 SM, Shashiprasad. "Exclusive! Masala on Sharmiela Mandre". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 28 October 2022.
- ↑ "Sandalwood News: Sharmila Mandre is now Sharmiela Mandre!". Times of India. http://m.timesofindia.com/articleshow/19767622.cms.
- ↑ "Sandalwood takes a shine to numerology". Times of India. 29 April 2013. Archived from the original on 15 May 2013. பார்க்கப்பட்ட நாள் 20 May 2013.
- ↑ "Sharmeila Mandre: Mumtaz reincarnated". Deccan Chronicle. 28 October 2015. http://www.deccanchronicle.com/151028/entertainment-sandalwood/article/mumtaz-reincarnated.
- ↑ "I do films out of passion, not for money: Kannada star Sharmiela Mandre". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 20 March 2022.
- ↑ "Team Dasara reveal Sharmiela Mandre's character poster on her birthday, see pic". Times of India. https://m.timesofindia.com/entertainment/kannada/movies/news/team-dasara-reveal-sharmiela-mandres-character-poster-on-her-birthday/articleshow/78909358.cms.
- ↑ "Ramananda Narayanrao Mandre's Sangam Talkies: This theatre is disabled-friendly". Deccan Herald. https://www.deccanherald.com/amp/content/234969/this-theatre-disabled-friendly.html.
- ↑ "Bidding adieu to Sunanda Murali Manohar in Bengaluru". Times of India. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/bidding-adieu-to-sunanda-murali-manohar-in-bengaluru/articleshow/62486699.cms.
- ↑ Hegde, Prajwal. "School identities take back seat". Times of India. https://timesofindia.indiatimes.com/silver-jubilee/school-identities-take-back-seat/articleshow/4821998.cms.
- ↑ "Evanukku Engeyo Matcham Irukku Movie Review: Critic Review of Evanukku Engeyo Matcham Irukku". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/evanukku-engeyo-matcham-irukku/movie-review/66987280.cms.
- ↑ "Dinesh's Naanum Single Dhaan set in London". Archived from the original on 10 August 2019.
- ↑ "Vimal's film with Shriya titled Sandakari My Boss".
- ↑ "I don't want to be a producer who throws money at a project; I am hands on: Sharmiela Mandre". https://m.timesofindia.com/entertainment/kannada/movies/news/exclusive-i-dont-want-to-be-a-producer-who-throws-money-at-a-project-i-am-hands-on-sharmiela-mandre/amp_articleshow/94286608.cms.
- ↑ "Meet the Bangalore Times Top 25 Most Desirable Women 2012". Times of India. https://m.timesofindia.com/entertainment/kannada/movies/news/Bangalore-Times-Top-25-Most-Desirable-Women-2012/articleshow/20138687.cms.
- ↑ "Bangalore Times Most Desirable Women 2014, Asha Bhatt tops the list". Times of India. https://m.timesofindia.com/entertainment/kannada/movies/news/bangalore-times-most-desirable-women-2014/articleshow/46932065.cms.
- ↑ "Meet the beautiful ladies who make up Bangalore Times' 30 Most Desirable Women of 2020". Times of India. https://m.timesofindia.com/entertainment/kannada/movies/news/meet-the-beautiful-ladies-who-make-up-bangalore-times-30-most-desirable-women-of-2020/amp_articleshow/83095404.cms.