சலாமிசு காக்டா
இளஞ்சிவப்பு தாய்-முத்து Lilac mother-of-pearl | |
---|---|
மேற்புறத் தோற்றம் (கானா) | |
அடிப்புறத் தோற்றம், உரோபிரி வனம், கானா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | |
பேரினம்: | சலாமிசு
|
இனம்: | ச. காக்டா
|
இருசொற் பெயரீடு | |
சலாமிசு காக்டா (பேப்ரிசியசு, 1793)[1] | |
வேறு பெயர்கள் | |
|
சலாமிசு காக்டா (Salamis cacta) எனும் பட்டாம்பூச்சியானது இளஞ்சிவப்பு தாய்-முத்து அல்லது இளஞ்சிவப்பு அழகு எனப்படுகிறது. இது நிம்பலிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இந்த பட்டாம்பூச்சியானது செனகல், கினியா, சியரா லியோன், லைபீரியா, ஐவரி கோஸ்ட், கானா, டோகோ, பெனின், நைஜீரியா, கேமரூன், எக்குவடோரியல் கினியா, காபோன், காங்கோ குடியரசு, மத்திய ஆபிரிக்க குடியரசு, அங்கோலா, காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, ருவாண்டா, எத்தியோப்பியா, கென்யா, தான்சானியா, மலாவி, மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் காணப்படுகிறது.[2] இந்நாடுகளில் இதன் வாழ்விடங்களாகக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் மனிதர்களின் தொந்தரவிற்கு உள்ளான பகுதிகளிலும் இந்த பட்டாம்பூச்சிகளைக் காணலாம்.
முதிர்வடைந்த பட்டாம்பூச்சிகள் காடுகளின் மேற்பகுதியில் பறந்துகொண்டிருக்கும். அவ்வப்போது வனப்பகுதியின் ஈரமான திட்டுகளில் உறிஞ்சுவதற்கும் அல்லது நிலத்தடியில் தரை இறங்கலாம். சிலநேரங்களில் பிற சிற்றினங்களுடன் வலசை போதலை மேற்கொள்ளும். ஆண்டு முழுவதும் இந்த பட்டாம்பூச்சிகளைக் காணலாம்.
இப்பட்டாம்பூச்சியின் இளம் உயிரிகள் யுரேரா ஹைப்செலோடென்ட்ரான், யுரேரா ட்ரைனெர்விஸ் மற்றும் யுரேரா ஆக்சிடெண்டலிஸ் ஆகியவற்றினை உணவாக உண்ணுகின்றன.
துணைச் சிற்றினங்கள்
தொகு- சலாமிசு காக்டா காக்டா - தென்கிழக்கு செனகல், கினியா, சியரா லியோன், லைபீரியா, ஐவரி கோஸ்ட், கானா, டோகோ, பெனின், நைஜீரியா, கேமரூன், எக்குவடோரியல் கினியா, காபோன், காங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, அங்கோலா, காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, ருவாண்டா, எத்தியோப்பியா, மேற்கு கென்யா, தான்சானியா
- சலாமிசு காக்டா அமனென்சிஸ் வோஸ்ஸெலர், 1907 - கென்யாவின் கடற்கரை, வடகிழக்கு தான்சானியா
- சலாமிசு காக்டா ஈலீனா ஹென்னிங் & ஜோவானோ, 1994 - மலாவி, மேற்கு-மத்திய மொசாம்பிக், கிழக்கு ஜிம்பாப்வே
மேற்கோள்கள்
தொகு- ↑ Salamis cacta, Site of Markku Savela
- ↑ Afrotropical Butterflies: Nymphalidae - Tribe Junoniini