சலீம் அலி பழந்தின்னி வெளவால்
சலீம் அலி பழந்தின்னி வெளவால் Salim Ali's fruit bat | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டெரோபோடிடே
|
பேரினம்: | லேட்டிடென்சு
|
இனம்: | லே. சலிமலீ
|
இருசொற் பெயரீடு | |
லேட்டிடென்சு சலிமலீ தொங்லாங்யா, 1972 | |
சலிம் அலி பழந்தின்னி வெளவால் பரம்பல் |
சலீம் அலி பழந்தின்னி வெளவால் (Salim Ali's fruit bat)(லேட்டிடென்சு சலிமலீ) என்பது வெளவால் சிற்றினங்களில் அரிதான ஒன்றாகும். லேட்டிடென்சு ஒற்றைச் சிற்றினம் கொண்ட பேரினமாகும். 1948ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள உயர் அலை அலையான மலைகளில் தாவர உற்பத்தியாளரும் இயற்கை ஆர்வலருமான அங்கசு அட்டன் இதை முதன்முதலில் சேகரித்தார். முதலில் ஒரு குறுகிய மூக்கு பழந்தின்னி வெளவால் (சினோப்டெரசு) என்று தவறாக அடையாளம் காணப்பட்டது. ஆனால் கிட்டி தொங்லாங்யா என்பவர் புதிய சிற்றினமாக இதனை விவரித்தார். பின்னர் 1972-ல் இந்திய பறவையியலாளர் சலீம் அலி அவர்களின் நினைவாகப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
விளக்கம்
தொகுநடுத்தர அளவு நீளமும் வெளிப்புற வால் இல்லாமலும் காணப்படுகிறது. முட்டை வடிவ காதுகள் வட்டமான காது முனைகளுடன், பழுப்பு நிற மயிர்களால் மூடப்பட்ட தலையுடையது. அடிப்பகுதி வெளிர் சாம்பல்-பழுப்பு நிறத்திலும் முடிகளற்ற பழுப்பு நிற இறக்கை சவ்வும் (பெட்டாஜியம்) கொண்டது. இது பதினைந்து அண்ண முகடுகளைக் கொண்டுள்ளது. நீண்ட குறுகிய ராடுட்ரமும், அண்ணம் மிக நீண்டது குறிப்பாக பிந்தைய பல் பகுதியில் காணப்படும். கண்விழியினைச் சுற்றிய போரமினா இல்லை. வெட்டுப் பற்கள் 1 இணை உள்ளன. முதல் முன் கடவாய் பற்கள் மிகச் சிறியவை. இவற்றின் மேற்பகுதியில் உள்ள கீறல்கள் வெட்டுப் பற்களைவிடச் நீளமானது. இதன் உடல் நீளம் 10 செ.மீ. ஆகும். பின் கால் 0.8–1.5 செ.மீ, முன்கை 6.6 செ.மீ. நீளமுடையது[2]
இந்த வெளவால்கள் எலியோகார்பசு ஒப்லாங்கசு (ருத்திராட்சம் அல்லது மணி மரம்) மற்றும் அத்தி வகைகளான பைக்கசு குளுமேரேட்டா (கொத்து அத்தி), பைக்கசு மாக்ரோகார்பா (இந்திய லாரெல் அத்தி) மற்றும் பைக்கசு பெடோமி ஆகியவற்றின் புதிய பழங்களைச் சாப்பிடுவது கவனிக்கப்பட்டது.[3]
பரவல்
தொகுசலீம் அலி பழந்தின்னிவெளவால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள, ஆனைமலை மலைத்தொடரில் 750 மீட்டர் உயரத்தில் சேகரிக்கப்பட்டது.
2002ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் வூரோட்டனின் தனித்த-வால் வெளவால் (ஓட்டோமொப்சு வூரோடோனி) மற்றும் சலீம் அலியின் பழந்தின்னிவெளவால் (லேட்டிடென்சு சலிமலீ) ஆகியவற்றை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I-ல் சேர்த்தது. இதன் மூலம் இந்த இரண்டு உயிரினங்களும் மிக உயர்ந்த பாதுகாப்பு பெறுகிறது. இந்தியாவில் உள்ள மற்ற 112 வகை வெளவால்கள் பாதிக்கப்படவில்லை.[4]
பாதுகாப்பு
தொகுசலீம் அலியின் பழந்தின்னிவெளவால் 1996-ல் மிக அருகிய இனமாக பட்டியலிடப்பட்டது. மேலும் இது 2004 முதல் அருகிய இனமாக கருதப்படுகிறது. இந்த பெயருக்கான அளவுகோல்களை இது பூர்த்தி செய்கிறது, ஏனெனில் இவை 1000க்கும் குறைந்த எண்ணிக்கையிலே காணப்படுகிறது. கூடுதலாக. வேட்டையாடுதல், வாழிட குகைகளின் இழப்பு, காடழிப்பு காரணமாக 2032ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை மேலும் 20% சுருங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Srinivasulu, C.; Srinivasulu, B. (2020). "Latidens salimalii". IUCN Red List of Threatened Species 2020: e.T11374A22103756. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T11374A22103756.en. https://www.iucnredlist.org/species/11374/22103756. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Salim Ali's fruit bat (Latidens salmalii) பரணிடப்பட்டது 2008-12-03 at the வந்தவழி இயந்திரம். ARKive
- ↑ Singaravelan, N.; Marimuthu, G. (2003). "Mist net captures of the rarest fruit bat Latidens salimalii". Current Science 84 (1): 24–26. http://www.iisc.ernet.in/currsci/jan102003/24.pdf. பார்த்த நாள்: 2021-02-16.
- ↑ "No Longer Vermin". Bat Conservation International Newsletter, Vol 2, No. 2 (February 2003)