சலும்பர் (Salumbar), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட சலும்பர் மாவட்டத்தின்[1] நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது உதய்பூருக்கு தென்கிழக்கே 76 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜெய்ப்பூருக்கு தெற்கே 435 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்த இந்நகரத்தின் ஏரியில் ஜக் மந்திர் அரண்மனை உள்ளது.

சலும்பர்
நகரம்
ஜக் மந்திர்
சலும்பர் is located in இராசத்தான்
சலும்பர்
சலும்பர்
இந்தியானின் இராஜஸ்தான் மாநிலத்தில் சலும்பர் நகரத்தின் அமைவிடம்
சலும்பர் is located in இந்தியா
சலும்பர்
சலும்பர்
சலும்பர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°05′N 74°01′E / 24.08°N 74.02°E / 24.08; 74.02
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்சலும்பர் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்3,094 km2 (1,195 sq mi)
ஏற்றம்
262 m (860 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,50,345
 • அடர்த்தி270/km2 (710/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
313027
இடக் குறியீடு02906
வாகனப் பதிவுRJ-58
இணையதளம்https://salumber.rajasthan.gov.in/home/dptHome
சலும்பர் மாவட்ட வரைபடம்

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 20 வார்டுகளும், 3,390 குடியிருப்புகளும் கொண்ட சலும்பர் நகரத்தின் மக்கள் தொகை 16,425 ஆகும். அதில் ஆண்கள் 8,420 மற்றும் 8,005 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.82 % ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 11.17 % மற்றும் 2.59 % ஆக உள்ளனர்.இதன் மக்கள் தொகையில் இந்து சமயத்தினர் 64.85%, இசுலாமியர் 22.66%, சமணர்கள் 12.23% மற்றும் பிறர் 0.25% ஆக உள்ளனர்.[2]

சுற்றுலாத் தலங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலும்பர்&oldid=4117498" இலிருந்து மீள்விக்கப்பட்டது