சலோனி மல்கோத்ரா
சலோனி மல்கோத்ரா, இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண் தொழில் முனைவோரும், வணிக நிர்வாகியுமாவார். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் கிராமப்புறங்களில் வணிக செயல்முறை புற ஒப்படைப்பு மூலம் அலுவலகம் மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கும் தேசிக்ரூ என்ற பிபிஓ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான இவர்,[1] இம்மாநிலங்களின் கிராமப்புற பகுதிகளில் இதை நிறுவி, சிறிய கிராமங்களில் இருந்து அனுபவமற்ற மற்றும் பயிற்சியற்றவர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சேவை பணிக்காக வணிக உலகில் பரவலாகப் பாராட்டப்பட்டுளார்.[2][3]
சலோனி மல்கோத்ரா | |
---|---|
தேசியம் | இந்தியர் |
கல்வி | பொறியாளர், [[புனே பல்கலைக்கழகம் ]] |
பணி | முதன்மை செயல் அலுவலர் |
அமைப்பு(கள்) | தேசிக்ரூ |
அறியப்படுவது | இந்தியாவில் கிராமப்புற வணிக செயல்முறை புறத்திறனீட்ட(BPO)ங்கள் நிறுவுதல். |
தொழில்
தொகுசலோனி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரிப் படிப்பை முடித்துள்ளார். டெல்லியில் உள்ள வெப் சட்னி என்ற ஊடாடும் ஊடக தொடக்க நிறுவனத்தின் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். ஐஐடி மெட்ராஸின் தொலைத்தொடர்பு மற்றும் கணினி வலையமைப்பு குழு (TeNet குழு)மத்தின் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலாவின்[4] வழிகாட்டுதலின்படி, தகவல் தொழிநுட்ப நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
“ | நிச்சயமாக, 'கிராமப்புற' கண்ணோட்டத்தைத் தவிர இது மிகவும் வேறுபட்டதல்ல. இது கிராமப்புறங்களில் உள்ள மக்களுடன் செயல்படும் மற்ற பிபிஓ போன்றது. IT/ITES நிறுவனங்கள், காப்பீடு, புதிய ஊடகம் மற்றும் மொபைல் அடிப்படையிலான வாடிக்கையாளர்களுடன் நாங்கள் வேலை செய்கிறோம். நாங்கள் சுற்றிப் பார்த்தபோது, நிறைய பிபிஓக்கள் கிராமப்புறங்களிலிருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்துவதைக் கண்டோம், மேலும் இங்கு வேலை செய்ய மக்கள் இடம்பெயர வேண்டும் என்பதை உணர்ந்தோம். எனவே, அவர்களுக்கு அவர்கள் இடத்திலேயே வேலை வழங்க முடிவு செய்தோம். | ” |
இவரது நிறுவனமான தேசிக்ரூவின் இந்த புதுமையான அணுகுமுறைக்காக தொழித்துறையினரால் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது [5] தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத்தில் தேசிக்ரூ கிராமப்புற விநியோக மையங்களைக் கொண்டுள்ளது, தற்போது, இங்குள்ள கிராமங்களைச் சேர்ந்த தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.[6] சலோனி, தற்போது தேசிக்ரூவின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக பணிபுரிந்து வருகிறார்.[7]
விருதுகள்
தொகு- 2011 இல் டை ஸ்ட்ரீ சக்தி விருது
- பரிந்துரைக்கப்பட்டது : பிசினஸ் வீக்கின் ஆசியாவின் இளைய தொழில்முனைவோர்
- பரிந்துரைக்கப்பட்டது : MTV யூத் ஐகான் 2008
- பரிந்துரைக்கப்பட்டது : E&Y 2008 ஆம் ஆண்டின் தொழில்முனைவோர்
- இந்திய குடியரசுத் தலைவர் முன்னிலையில் CII மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Saloni Malhotra, DesiCrew". Stree Shakti. Archived from the original on 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Social Entrepreneurship – Interview with DesiCrew (Rural BPO) Founder". PluGGd.in. 28 July 2009. Archived from the original on 6 September 2012. பார்க்கப்பட்ட நாள் 13 May 2010.
- ↑ "In India, Rural Workers Run Call Centers". United States: ABC News. 4 June 2008. பார்க்கப்பட்ட நாள் 13 May 2010.
- ↑ "TENET". www.tenet.res.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.
- ↑ "Aye, aye, C@ptain". பிசினஸ் லைன். 26 October 2007. பார்க்கப்பட்ட நாள் 13 May 2010.
- ↑ "Desi Girl". The Hindu. 29 March 2012. http://www.thehindu.com/life-and-style/metroplus/article3257700.ece. பார்த்த நாள்: 1 July 2012.
- ↑ "Rendeveous with Saloni Malhotra". Indiafusion. 5 March 2011. பார்க்கப்பட்ட நாள் 1 July 2012.[தொடர்பிழந்த இணைப்பு]