சல்பமைடு
சல்பமைடு (Sulfamide) என்பது H2NSO2NH2 என்ற மூலக்கூற்று கட்டமைப்பு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி முறையில் இதை சல்பியூரிக் டையமைடு என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். சல்பியூரைல் குளோரைடுடன் அமோனியாவைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் சல்பமைடு உருவாகிறது. 1838 ஆம் ஆண்டு பிரெஞ்சு வேதியியலாளர் என்றி விக்டர் ரெக்னால்டு முதன்முதலில் சல்பமைடைத் தயாரித்தார் [2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சல்பியூரிக் டையமைடு
| |
வேறு பெயர்கள்
சல்பமைடு
சல்பியூரல் அமைடு | |
இனங்காட்டிகள் | |
7803-58-9 | |
ChEBI | CHEBI:29368 |
ChEMBL | ChEMBL355001 |
ChemSpider | 74243 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82267 |
| |
பண்புகள் | |
H4N2O2S | |
வாய்ப்பாட்டு எடை | 96.11 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான செஞ்சாய்சதுர தட்டுகள் |
உருகுநிலை | 93 °C (199 °F; 366 K) |
கொதிநிலை | 250 °C (482 °F; 523 K) (சிதைவடையும்) |
நன்கு கரையும் | |
-44.4•10−6 செ.மீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சல்பமைடு வேதி வினைக்குழு
தொகுகரிம வேதியியலில் சல்பமைடு என்ற சொல் ஒரு வேதி வினைக்குழுவையும் குறிக்கிறது. இக்குழுவில் குறைந்தபட்சம் ஒரு கரிமக்குழு சல்பமைடின் நைட்ரசன் அணுவுடன் இணைந்திருக்கும்.
கந்தக டைஆக்சைடு வாயுவும் அமீன்களையும் வினைபுரியச் செய்து நேரடியாகவும் சீரொழுங்கான சல்பமைடுகளைத் தயாரிக்கிறார்கள் :[3]
இந்த உதாரணத்தில் அனிலின், டிரையெத்திலமீன் மற்றும் அயோடின் ஆகியன வினைபடு பொருட்களாகும். கந்தக டையாக்சைடு தொடர்ச்சியாக: Et3N-I+-I−, Et3N-I+-I3− மற்றும் Et3N+-SO2− போன்ற இடைநிலைகளால் செயலூக்கம் அடைகிறது.
சல்பமைடு வேதி வினைக்குழு மருத்துவ வேதியியலில் பொதுவாகப் பயன்படுத்து வருவது அதிகரித்து வருகிறது [4].
மேற்கோள்கள்
தொகு- ↑ Merck Index, 11th Edition, 8894.
- ↑ Regnault, Victor (1838) "Sur l'acide chlorosulfurique et la sulfamide" (On sulfuryl chloride and sulfamide), Annales de chimie et de physique, series 2, 69 : 170-184; see especially "Action de gaz ammoniac sec sur la liqueur chlorosulfurique" (Action of dry ammonia gas on liquid sulfuryl chloride), pages 176-180.
- ↑ Leontiev, A. V.; Dias, H. V. R.; Rudkevich, D. M. (2006). "Sulfamides and sulfamide polymers directly from sulfur dioxide". Chemical Communications 2006 (27): 2887–2889. doi:10.1039/b605063h.
- ↑ Reitz, A. B.; Smith, G. R.; Parker, M. H. (2009). "The Role of Sulfamide Derivatives in Medicinal Chemistry: A Patent Review (2006 – 2008)". Expert Opinion on Therapeutic Patents 19 (10): 1449–1453. doi:10.1517/13543770903185920. பப்மெட்:19650745.