சல்மா சுல்தான்
சல்மா சுல்தான் (Salma Sultan) (பிறப்பு 16 மார்ச் 1944) ஒரு இந்தியத் தொலைக்காட்சி பத்திரிகையாளரும் இயக்குநரும் ஆவார். 1967 முதல் 1997 வரை தூர்தர்ஷனில் செய்தி தொகுப்பாளராகப் பணியாற்றிய பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கத் தொடங்கினார்.[1] சல்மா தனது தலைமுடியில் இடது காதுக்குக் கீழே உரோசாவை அணிந்துகொண்டு, தனது புடவையை நவீனமான அதே சமயம் பாரம்பரியமான முறையில் கழுத்தில் சுற்றிக் கொள்ளும் போக்கைத் தொடங்கினார். இது பின்னர் கிட்டத்தட்ட அனைத்து பெண் செய்தி வாசிப்பாளர்களாலும் கையாளப்பட்டது.[2][3][4]
சல்மா சுல்தான் | |
---|---|
பிறப்பு | 16 மார்ச்சு 1947 |
தேசியம் | இந்தியா |
கல்வி | இந்திரபிரஸ்தா பெண்களுக்கான கல்லூ |
பணி | தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1967–2005 |
வாழ்க்கைத் துணை | அமீர் கித்வாய் |
பிள்ளைகள் | 2 |
ஆரம்ப வாழ்க்கை
தொகுசல்மா, அறிஞரும், விவசாய அமைச்சகத்தின் செயலாளருமான முகமது அஸ்கர் அன்சாரிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். சல்மாவுக்கு மைமூனா சுல்தான் என்ற மூத்த சகோதரி (போபாலில் இருந்து நான்கு முறை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்) இருந்தார். சல்மாவும் மைமூனாவும் ஆப்கானித்தானின் துரானி பேரரசின் ஆட்சியாளரான ஷா ஷுஜாவின் கொள்ளுப் பேத்திகள். சல்மா மத்திய பிரதேசத்தின் சுல்தான்பூரில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், போபாலில் பட்டப்படிப்பை முடித்தார். தில்லியிலுள்ள இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் தனது 23 ஆவது வயதில் தூர்தர்ஷனில் [5] அறிவிப்பாளருக்கான தேர்வில் கலந்து கொண்டார்.
தொழில்
தொகுசெப்டம்பர் 1959 இல் அதன் செயல்பாடுகளைத் தொடங்கிய[6] தூர்தர்ஷனில் பிரதிமா பூரி மற்றும் கோபால் கவுல் வழக்கமான முகங்களாக இருந்தனர். தூர்தர்ஷன் 1965 இல் 5 நிமிட செய்தித் தொகுப்பைத் தொடங்கியது. சல்மா சுல்தான் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட முதல் செய்தியை தூர்தர்ஷனின் மாலை செய்தியில் 31 அக்டோபர் 1984 அன்று அவர் சுடப்பட்ட 10 மணி நேரத்திற்குப் பிறகு வழங்கினார்.[7]
இயக்குனராக
தொகுஓய்வு பெற்ற பிறகு, சல்மா சுல்தான் தனது தயாரிப்பு நிறுவனமான லென்ஸ்வியூ என்ற நிறுவனம் மூலம் தூர்தர்ஷனுக்காக சமூகத் தலைப்புகளில் தொடர்களை இயக்கத் தொடங்கினார்.[8][9][10][11] பஞ்சதந்திர சே, சுனோ கஹானி, ஸ்வர் மேரே தும்ஹரே மற்றும் ஜல்தே சவா போன்ற இவரது தொடர்கள் கவனத்தை ஈர்த்தன. பஞ்சந்த்ரா சே 1989 இல் மகாபாரதத்திற்குப் பிறகு ஒளிபரப்பப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.[12] பெண்கள் பிரச்சனைகள் குறித்த தொடரான ஜல்தே சவால் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு டிடி நியூஸில் 2004 இல் ஒளிபரப்பப்பட்டது [13]
சொந்த வாழ்க்கை
தொகுசல்மா சுல்தான், இஞ்சினியர்ஸ் இந்தியா (EIL) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த அமீர் கித்வாய் என்பவரை மணந்தார். இவர்களது மகன் சாத் கித்வாய் வருமான வரித்துறை ஆணையராகவும், மகள் சனா நடன அமைப்பாளராகவும் உள்ளனர்.[14][15][16]
சான்றுகள்
தொகு- ↑ "The Doordarshan Divas". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "Metro Plus Madurai / Miscellany : Gracefully yours!". தி இந்து. 25 February 2010. Archived from the original on 15 October 2013. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "The Sultan of news | Culture". Times Crest. 9 October 2010. Archived from the original on 15 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "We the eyeballs : Cover Story". India Today. 24 September 2007. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "Cycling down sepia-toned lanes of Chandni Chowk". The Indian Express. 5 April 1999. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "The Tribune, Chandigarh, India – Himachal PLUS". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "The riots that could not be televised". The Indian Express. 3 November 2009. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "Three Doordarshan-era anchors recall what a dignified era of television news looked like".
- ↑ Rana Siddiqui Zaman (22 February 2010). "Gracefully yours!". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "Age of innocence". The Hindu. 25 October 2009. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "Lost And Found-ANNIVERSARY ISSUE: 30 LOST AND FOUND". இந்தியா டுடே. 3 July 2006. பார்க்கப்பட்ட நாள் 3 July 2006.
- ↑ "The Queen of Roses". தி இந்து. 25 March 2004. Archived from the original on 26 December 2004. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "The Tribune, Chandigarh, India – Punjab". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013.
- ↑ "Lost and found-Thirty newsmakers from the pages of Indian history and where they are now: Cover Story – India Today". இந்தியா டுடே. 3 July 2006. பார்க்கப்பட்ட நாள் 3 July 2006.
- ↑ "She brought 'ghararas' to Ludhiana". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 July 2012. Archived from the original on 16 October 2013. பார்க்கப்பட்ட நாள் 18 July 2012.
- ↑ "Geti wants to design clothes for Aishwarya". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 January 2012. Archived from the original on 16 October 2013. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
வெளி இணைப்புகள்
தொகு- யூடியூபில் Salma Sultan reading news of Indira Gandhi's death
- யூடியூபில் Doordarshan history by Salma Sultan
- யூடியூபில் Panchtantra Se serial episode
- யூடியூபில் Suno Kahani serial episode
- யூடியூபில் Swar Mere Tumhare serial promo
- யூடியூபில் Roshni Ka Safar serial promo
- யூடியூபில் Doordarshan 50 years in 2009