சவிதா சாஸ்திரி

இந்தியாவின் நாட்டியக் கலைஞர்

சவிதா சாஸ்திரி (Savitha Sastry) இவர் ஓர் இந்திய நடன கலைஞம் மற்றும் நடன இயக்குநரும் ஆவார். இவர், பரதநாட்டியத்தின் வல்லுனராக அறியப்படுகிறார். இந்திய புராணங்களையோ அல்லது மதத்தையோ அடிப்படையாகக் கொண்டதல்லாமல், புனைக் கதைகளை [1][2][3][4] இவரது கண்டுபிடிப்புகள் விமர்சகர்களால் 'புது பாதையை உருவாக்குதல்' என்று விவரிக்கப்பட்டுள்ளன.[5] அடிப்படையாகக் கொண்ட கருப்பொருள் அடிப்படையிலான தயாரிப்புகளை நிகழ்த்துவதற்காக பரதநாட்டியத்தின் நுட்பங்களைப் பயன்படுத்தி பாரம்பரிய பாரதநாட்டியத்தின் வடிவத்தை இவர் பரிசோதிக்கத் தெரிந்தவராவார்.[6] இவரது கண்டுபிடிப்புகள் விமர்சகர்களால் 'வழியை உடைத்தல்' என்று விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் ருக்மிணி தேவி அருண்டேல் இவரது காலங்களில் இருந்ததைப் போலவே, இவரும் நடன வடிவத்தின் 'மறுமலர்ச்சி கலைஞராக' கருதப்படுகிறார். [7][8]

சவிதா சாஸ்திரி
பிறப்பு11 திசம்பர் 1969 (அகவை 55)
ஐதராபாத்து
படித்த இடங்கள்
பணிதிரைப்பட நடிகர்
 சவிதா சாஸ்திரி சென்னை இசை அகாதமியில் (2013) 'யுத்' என்ற நிகழ்ச்சியை நிகழ்த்தினார்)

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

சவிதா ஐதராபாத்தில் பிறந்தார். பின்னர் இவரது குடும்பம் தங்கள் சொந்த ஊரான சென்னைக்கு இடம் பெயர்வதற்கு முன்பு மும்பையில் வசித்து வந்தார். மும்பையில் உள்ள சிறீ ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திர் [9] என்ற இடத்தில் குரு மகாலிங்கம் பிள்ளையின் கீழ் பரதநாட்டியத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் அடையார் கே. லட்சுமணன் மற்றும் சென்னையில் உள்ள தனஞ்செயர்களிடம் பயிற்சி பெற்றார். [10] சென்னையில் உள்ள பி. எஸ். மேல்நிலைப் பள்ளியில், பள்ளிப்படிப்பையும், இசுடெல்லா மேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் படித்தார்.

1986 ஆம் ஆண்டில், தனது குரு அடையார் கே. லட்சுமணனின் தயாரிப்பான ஆனந்த தாண்டவம் என்ற தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடனக் கலைஞராக நடித்தார். இவர் அமெரிக்காவில் நரம்பியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பரதநாட்டியம்

தொகு

1980கள், 1990கள் மற்றும் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், சவிதா பெரும்பாலும் பரதநாட்டியத்தின் பாரம்பரிய திறனாய்வுகளுக்கு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இந்த கட்டத்தில் கிருட்டிணா: தி சுப்ரீம் மிஸ்டிக் மற்றும் புருசார்த்தா போன்ற சில முழு நீள விளக்கக்காட்சிகளை இவர் தயாரித்து நடனமாடினார். [11]

  தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சவிதா தனது உயர்நிலைப்பள்ளியின் வகுப்பு தோழரான ஏ. கே. சிறீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிறீகாந்த் இவரது அனைத்து தயாரிப்புகளிலும் பங்குதாரராக உள்ளார். இந்த இணை கூட்டாக தங்கள் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறது. தற்போது இவர்கள் மும்பையில் வாழ்கின்றனர்.

இவரது தயாரிப்புகள் அனைத்தும் இவரது கணவர் ஏ. கே. சிறீகாந்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் தயாரிப்புகளுக்கான ஒலிப்பதிவினை மூத்த கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பேரன் ராஜ்குமார் பாரதி இசையமைத்து வருகிறார். இவை இந்திய துணைக் கண்டம், ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டுள்ளன. மேலும் தயாரிப்புகள் விமர்சன மற்றும் பிரபலமான பாராட்டுகளைப் பெற்றன. சவிதாவின் நடனத்தில் மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால், இவரும் சிறீகாந்தும் நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்களுடன் ஒரு கேள்வி பதில் பாணியில் பார்வையாளர்களுடன் நிகழ்ச்சி பற்றி விவாதிக்கின்றனர். விமர்சகர் இலட்சுமி ராமகிருட்டிணா இந்த குழுப்பணியை "கணவன் - மனைவி இரட்டையர் ஆழ்ந்த தத்துவ எண்ணங்களை வியக்கத்தக்க எளிமை, ஆற்றல், நடை மற்றும் உற்சாகம் மற்றும் நேர்த்தியுடன் வெளிப்படுத்துவதில் பார்வையாளர்களுடன் ஒரு நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்" என்கிறார். [12]

டிஜிட்டல் தயாரிப்புகள்

தொகு

2018 ஆம் ஆண்டு முதல், சவிதாவும் சிறீகாந்தும் தங்கள் தயாரிப்புகளை உலக பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்ல டிஜிட்டல் தளங்களை கொண்டு செல்ல இலவசமாக வெளியிட்டு வருகின்றனர். பிரபலமான இசை காணொலிகளின் அதே வரிகளில், ஒரு தனித்துவமான கதையை விவரிக்கும் குறுகிய பாரமபரிய நடன காணொலிகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவிதா_சாஸ்திரி&oldid=3356903" இலிருந்து மீள்விக்கப்பட்டது