சவி சர்மா இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த, நவீன இந்திய எழுத்தாளரும், நாவலாசிரியருமாவார். கனவுகள், நட்பு, நம்பிக்கை, காதல் & வாழ்க்கை ஆகிய நேர்மறையான எண்ணங்களை ஊக்கமளிக்கும் , எல்லோருக்கும் ஒரு கதை உள்ளது என்ற ஒரு இலட்சத்திற்கும் அதிகமான விற்பனையான தன்னம்பிக்கை புதினம் இவர் எழுதியதே. மேலும் இவர் "வாழ்க்கை மற்றும் மக்கள்" என்ற தன்னம்பிக்கை ஊக்கமூட்டும் ஊடக வலைப்பதிவின் இணை நிறுவனருமாவார், இந்த வலைத்தளத்தில் நேர்மறை எண்ணம், தியானம், ஈர்ப்பு விதி மற்றும் ஆன்மீகம் பற்றி பெரும்பாலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்,

சவி சர்மா
ஷர்மா போபாலில் நடைபெற்ற அவரது "இது உங்கள் கதை அல்ல" புத்தகத்தின் விளம்பர நிகழ்ச்சியில்
ஷர்மா போபாலில் நடைபெற்ற அவரது "இது உங்கள் கதை அல்ல" புத்தகத்தின் விளம்பர நிகழ்ச்சியில்
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
காலம்2015 ம் ஆண்டு முதல்
வகை
குறிப்பிடத்தக்க படைப்புகள்எல்லோருக்கும் ஒரு கதை உள்ளது
இணையதளம்
savisharma.com

சவி, ஜூலை 18, 1993 அன்று ஹரியானா மாநிலத்திலுள்ள பிவானி மாவட்டத்தில் உள்ள பஹல் என்ற சிறிய நகரத்தில் பிறந்தவர். அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்த இவர், சூரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகப் பட்டப்படிப்பில் சேர்ந்ததோடு பட்டயக் கணக்கியல் படிப்பையும் படிக்க தொடங்கினார். எல்லோருக்கும் ஒரு கதை உள்ளது என்ற புத்தகத்தை எழுதுவதும், அதை வெளியிடுவதையும் உறுதி செய்த அவர் பட்டயக்கணக்கியல் படிப்பை நிறுத்த முடிவு செய்து,[1] அப்புத்தகத்தை வேறெந்த பதிப்பகத்தாரின் உதவியும் இல்லாமல், அவரே சுயமாக வெளியிட்டுள்ளார், ஆச்சர்யமாக இப்புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது அதனடிப்படையில் ஷர்மா, இந்தியாவின் முதல் வெற்றிகரமான பெண் சுய-வெளியீட்டு எழுத்தாளர் என பெயர்பெற்றுள்ளார்.[1][2]

புத்தகங்கள்

தொகு
  • எல்லோருக்கும் ஒரு கதை உள்ளது (2015)
  • இது உங்கள் கதை அல்ல (2017) [3]
  • அனைவருக்கும் ஒரு கதை உள்ளது - 2 (2018)
  • நாங்கள் ஒருபோதும் சொல்லாத கதைகள் (2020) [4]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவி_சர்மா&oldid=3741895" இலிருந்து மீள்விக்கப்பட்டது