சவுக்கு (இணையதளம்)


சவுக்கு அரசியல் மற்றும் அரசு தொடர்பான கருத்துக்கள் வெளியிடுதல் மற்றும் அநீதிகளை இடித்துரைக்கும் ஒரு தமிழ் இணையத்தளம். தமிழ்நாட்டில் 2008 இல் நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கைதான சங்கர் என்பவர் நடத்தும் இணையத்தளமாகும். 2008 இல் தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதிக்கும் இலஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் உரையை ஏப்ரல் 14, 2008 இல் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ் வெளியிட்டது. அந்த உரையாடலில் திரிபாதி உபாத்யாவிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கணக்கு விபரங்களை வருமானவரித் துறையிடமிருந்து வாங்குமாறு கூறியதாக அந்த செய்தி அறிவித்தது. இப்பிரச்சினையில் தொலைபேசி உரையாடலை செய்தியாளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த சங்கர் திசம்பர் 2008 இல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.[1]

சவுக்கு (இணையதளம்)
வலைத்தள வகைஇணையச் செய்தி ஊடகம்
உரிமையாளர்சவுக்கு சங்கர்
உருவாக்கியவர்சவுக்கு சங்கர்
தோற்றுவித்தவர்சவுக்கு சங்கர்
வெளியீடு2010
தற்போதைய நிலைhttp://savukkuonline.com/ புதிதாக திறக்கப்பட்டது.
உரலிhttp://savukkuonline.com/

முக்கிய அம்சங்கள்/நிகழ்வுகள்

தொகு
  • 2011 இல் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் திமுக தோற்க இருப்பதாக கூறி கவுண்டவுன் தளத்தில் பதிந்தது.
  • தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளின் ஊழல்கள் தொடர்பான கட்டுரைகள்
  • ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே ![2]
  • நக்கீரன் காமராஜ், உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட் மீதான ஊழல் வெளிக்கொணர்ந்தார்.
  • சூலை 2010 இல் வாகன ஓட்டி ஒருவரை அடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.[1]
  • 28.2.14 அன்று சவுக்கு இணையதளத்தை முடக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[3]
  • 6.4.2014 சவுக்கு இணைய தளத்தை மூடுவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.[4]

நீதிமன்றத்தால் முடக்கம்

தொகு
  • 28.2.14 அன்று சவுக்கு இணையதளத்தை பத்து நாட்களுக்குள் மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு இணையதளத்தில் தன்னைப்பற்றி அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டதாக புகார் கூறி சவுக்கு இணையதளத்தை எதிர்த்து சென்னை வழக்கறிஞர் மஹாலக்ஷ்மி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
  • சவுக்கு இணையதளத்தை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக, சவுக்கு இணையதள வடிவமைப்பாளர் முருகையன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
  • சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தினால் சவுக்கு இணையத்தளம் முடக்கம் உத்தரவு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பபட்டது[5]

இணைய தளம் மூடப்பட்டது

தொகு

6.4.2014 தேதியன்று ‘தவிர்க்க இயலாத காரணங்களினால் சவுக்கு இணைய தளம் மூடப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைய தளம் திறக்கப்பட்டது

தொகு

15 மே 2014 தேதியன்று ‘சவுக்கு இணைய தளம் http://savukkuonline.com/6227 We are back’ என்று அறிவித்தது . ஆனால் அந்த இணையதளமும் முடக்கப்பட்டதால் தற்போது http://savukkuonline.com என்ற முகவரியில் இயங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 http://articles.timesofindia.indiatimes.com/2010-07-22/chennai/28293851_1_dvac-shankar-assault[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://savukku.net/home1/91-2010-09-10-07-31-10.html
  3. சவுக்கு இணையதள பத்திரிகை நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம். சத்யம் டிவி, 19 மார்ச் 2014.
  4. "சவுக்கு இணைய தளம் மூடப்படுகிறது". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "சவுக்கு இணையத்தளம் முடக்கம் உத்தரவு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம்". நியூஸ். viruvirupu.com. Archived from the original on 2014-03-06. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுக்கு_(இணையதளம்)&oldid=3929657" இலிருந்து மீள்விக்கப்பட்டது