சாகீர் கான் (ஆப்கானித்தான்)

ஆப்கானித்தான் துடுப்பாட்டக்காரர்

ஜாஹிர் கான் (Zahir Khan பஷ்தூ: ظاهر خان  ; பிறப்பு 20 டிசம்பர் 1998) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் . இவர் செப்டம்பர் 2019 இல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[1] இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்ட ம், முதல் தரத் துடுப்பாட்ட ம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார் . 21 நவம்பர் 2015 அன்று 2015–17 ஐ.சி.சி இன்டர் கான்டினென்டல் கோப்பையில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[2] இவர் 2016 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடினார் .[3] அவர் ஆப்கனித்தான் தேசிய அணி தவிர 19 வயதிற்குட்பட்ட ஆப்கானித்தான் அணி, இஸ்லாமாபாத் யுனைட்டட், ஜமைக்கா தல்வாச், காபூல் ஈகிள்ஸ், லங்காசயர், மிஸ் ஐயினாக் பகுதி துடுப்பாட்ட அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகிய அணிகளுக்காகௌம் விளையாடி வருகிறார்.

உள்நாட்டு போட்டிகள்

தொகு

ஆகஸ்ட் 10, 2017 அன்று நடைபெற்ற காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் பேண்ட்-இ-அமீர் பிராந்தியத்திற்காக இவர் பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார்.[4] இந்தத் தொடரில் மொத்தமாக 12 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார்.[5] இவர் செப்டம்பர் 12, 2017 அன்று 2017 ஷ்பகீசா துடுப்பாட்ட லீக்கில் மிஸ் ஐனக் நைட்ஸ் அணிக்காக இருபதுக20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகம்து ஷா அப்தாலி நான்கு நாள் போட்டித் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி 30 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார்.[7]

இருபது20

தொகு

செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் நங்கர்ஹார் அணியில் இடம் பெற்றார்.[8] 2018–19 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்கான வரைவு அணியில் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல் குல்னா டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றார்.[9]

சர்வதேச வாழ்க்கை

தொகு

டிசம்பர் 2017 இல், இவர் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[10] ஜனவரி 2018 இல், 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தத்தில் எடுத்தது.[11][12] டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பெற்றார்.[13]

2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.[14][15]

பிப்ரவரி 2019 இல், ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அதில் அயர்லாந்துத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) மற்றும் இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் இடம் பெற்றார் .[16][17] இவர் மார்ச் 10, 2019 அன்று அயர்லாந்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[18] ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதால் இவர் அயர்லாந்திற்கு எதிரான ஆப்கானிஸ்தானின் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் இவர் விளையாடவில்லை.[19]

குறிப்புகள்

தொகு
  1. "Zahir Khan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
  2. "ICC Intercontinental Cup, Afghanistan v Papua New Guinea at Sharjah, Nov 21-24, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
  3. "Afghanistan U-19s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 January 2016.
  4. "1st Match, Ghazi Amanullah Khan Regional One Day Tournament at Khost, Aug 10, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.
  5. "2017 Ghazi Amanullah Khan Regional One Day Tournament: Most Wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.
  6. "3rd Match, Shpageeza Cricket League at Kabul, Sep 12 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  7. "Records: Ahmad Shah Abdali 4-day Tournament, 2019, Most wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 May 2019.
  8. "Afghanistan Premier League 2018 – All you need to know from the player draft". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
  9. "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Mujeeb Zadran in Afghanistan squad for Under-19 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  11. "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  12. "U19 World Cup stars snapped up in IPL auction". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
  13. "Afghanistan Under-23s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  14. "Afghanistan Squads for T20I Bangladesh Series and on-eoff India Test Announced". Afghanistan Cricket Board. Archived from the original on 29 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  15. "Afghanistan pick four spinners for inaugural Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  16. "Mujeeb left out for Ireland Test, Shahzad out of T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
  17. "No Mujeeb in Tests as Afghanistan announce squads for Ireland series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
  18. "5th ODI (D/N), Ireland tour of India at Dehra Dun, Mar 10 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
  19. "Afghanistan add Zahir Khan and Sayed Shirzad to Test squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.