சாகோஸ் தீவுக்கூட்டம்
சாகோஸ் தீவுக்கூட்டம் (Chagos Archipelago) என்பது இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். இவை முன்னர் எண்ணெய்த் தீவுகள் (Oil Islands) என அழைக்கப்பட்டன. இவை தமிழில் பேகான தீவுகள் என்றும் திவெயி மொழியில் ஃபேகண்தீபு எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 60 சிறு வெப்பவலயத் தீவுகளைக் கொண்ட ஏழு பவளத்தீவுக் கூட்டங்கள் (atolls) உள்ளன.
பேகான தீவுகள் மாலைதீவுகளில் இருந்து தெற்கே 500 கிமீ (300 மைல்கள்) தூரத்திலும், இந்தியாவில் இருந்து தென்மேற்கே 1600 கிமீ (1000 மைல்) தூரத்திலும், தான்சானியாவுக்கும், ஜாவாவிற்கும் இடைநடுவீல் அமைந்துள்ளன.
இப்பகுதி அதிகாரபூர்வமாக பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தைச் சேர்ந்ததாகும். கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கு சாகோசிய மக்கள் வாழ்ந்து வந்தனர். பின்னர் பிரித்தானியரும் அமெரிக்கரும் 1960களில் இவர்களை விரட்டிவிட்டு இங்குள்ள மிகப் பெரிய தீவான டியேகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றை அமைத்தனர்.
புவியியல்
தொகுஇத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 63.17 கிமீ² ஆகும். டியேகோ கார்சியா தீவின் பரப்பு 27.20 கிமீ². இவற்றின் மொத்தப் பரப்பளவு (வளைகுடாக்கள் உள்ளிட்டவை) 15,000 கிமீ² ஆகும்.
இங்குள்ள ஏழு பெரிய தீவுகள்:
- டியேகோ கார்சியா (Diego Garcia)
- எக்மொண்ட் தீவுகள் (Egmont Islands)
- பெரோஸ் கரை (Peros Banhos)
- சாலொமன் தீவுகள், (Salomon Islands)
- பெரும் சாகோஸ் கரை (Great Chagos Bank)
- பிளென்ஹைம் பாறை (Blenheim Reef)
- பேச்சாளர் கரை (Speakers Bank)
வெளி இணைப்புகள்
தொகு- The Chagos Conservation Trust. The Trust is a non political organisation whose aims are to promote conservation, scientific and historical research, and to advance education concerning the archipelago.
- Let Them Return - The Chagos People's Homeland Campaign பரணிடப்பட்டது 2011-07-13 at the வந்தவழி இயந்திரம்