சாங்கி, சிங்கப்பூர்

சாங்கி சிங்கப்பூரின் கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு திட்டமிடல் பகுதி ஆகும். மேற்கில் பாசிர் ரிஸ் மற்றும் தெம்பினிஸ், தென்கிழக்கில் சாங்கி கடற்கரை, கிழக்கில் தென்சீனக் கடல் மற்றும் வடக்கில் சிராங்கூன் துறைமுகம் ஆகிய பகுதிகளோடு தன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. சிங்கப்பூரின் இரு நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தீவுப்பகுதிகளைத் தவிர சாங்கி நிலப்பரப்பின் அடிப்படையில் பெரிய திட்டமிடல் பகுதி ஆகும்.[1]

சாங்கி
பெயர் transcription(s)
 • சீனம்樟宜
 • பின்யின்Zhāngyí
 • Hokkien POJChiang-gî
 • மலாய்Changi
 • ஆங்கிலம்Changi
சாங்கி கடற்கரையின் ஞாயிறு மறைவுக்காட்சி
சாங்கி கடற்கரையின் ஞாயிறு மறைவுக்காட்சி
நாடுசிங்கப்பூர்
1°23′28″N 103°59′11″E / 1.39111°N 103.98639°E / 1.39111; 103.98639

இன்று, சாங்கி ஒரு விமானப் போக்குவரத்து நடுவமாக விளங்குகிறது. சாங்கி வானூர்தி நிலையம் மற்றும் சாங்கி விமான தளம் ஆகியவற்றின் தற்போதைய இருப்பிடமாக உள்ளது.[2]

சிங்கப்பூரின் மிகப் பெரிய சிறையான சாங்கி சிறை சாங்கியில் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூர் ஆக்கிரமிக்கப்பட்ட போது, இது ஜப்பானிய போர் கைதிகள் முகாமாகச் செயல்பட்டதால் பிரபலமடைந்தது.[3] சாங்கி சிறைச்சாலை சிங்கப்பூரின் பழமையான பாதுகாப்புக் காவல் செயல்பாட்டு மையமாக புதிய “சாங்கி சிறைச்சாலை வளாகம்” என்ற பெயரில் தொடர்கிறது.

சொற்பிறப்பியல்

தொகு
 
காடின்கோ டி எரிடியா என்பவரால் வரையப்பட்ட 1604 ம் ஆண்டைய சிங்கப்பூர் வரைபடத்தின் கீழ் இடது ஓரத்தில் சாங்கி “டஞ்ஜோங் ரூஸா” (Tanjong Rusa) என்று குறிக்கப்பட்டுள்ளது. வரைபடம் தெற்கிலிருந்து மேல் இடது நோக்கி நோக்குகின்றது

1604 ஆம் ஆண்டு மலாய்-போர்த்துகேய எழுத்தாளரும் நிலப்படமாக்குநருமான காடின்கோ டி எரிடியா என்பவரால் வரையப்பட்ட சிங்கப்பூர் வரைபடத்தில் சாங்கி தஞ்சோங் ரூஸா (Tanjong Rusa) என்ற மலாய் மொழி பெயரால் குறிக்கப்பட்டிருக்கிறது.[4]

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாங்கியின் பெயர் அறியப்பட்டது. 1828 ஆம் ஆண்டில் பிராங்க்ளின் மற்றும் ஜாக்சன் ஆகியோரது வரைபடத்தில் தீவின் கடைக்கோடி தென்கிழக்கு முனை தஞ்சோங் சாங்கி என குறிப்பிடப்படுகிறது. ஜோஹோர் வளைகுடாவை பயன்படுத்தும் கப்பல்கள் சாங்கி வழியாகச் சென்றிருக்கக்கூடும்.[5]

சாங்கியின் சொற்பிறப்பில் மூலங்களின் பல பதிப்புகள் உள்ளன. சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவின் முதல் இயக்குனர் ஹென்றி ரிட்லி, சாங்கால் (மேலும் "செங்காய்" என்று எழுதப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது) என்றழைக்கப்படும் உயரமான மரத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றுள்ளதாகப் பரிந்துரைத்தார் (நியோபாலனோகார்பஸ் ஹெய்மி (Neobalanocarpus heimii) , பாலன்ஸ்காரஸ் ஹெய்மி அல்லது பாலனோ ஸ்கார்பாஸ் என்றும் அழைக்கப்படும்) இத்தாவரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்பகுதியில் பொதுவானதாகக் கானப்பட்டது. அதன் கடினமான தண்டின் குறிப்பிடத்தக்க வலிமை மற்றும் ஆழமான வண்ணத்தால் பொதுவாக கட்டிடங்கள் மற்றும் தளவாடங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.[6] மற்ற ஆதாரங்கள் இப்பகுதியில் கானப்படும் ஒரு பற்றி ஏறும் புதர் தாவரமான சாங்கி உலார் (Hopea sangal)அல்லது செங்கால் அஸிர் (Apama corymbosa) ஆகியவற்றிலிருந்து வந்ததாகக் கூறுகிறது.[7]

1820 முதல் 1830 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் தீவில் ஆரம்பகால ஆய்வுகள் நடத்திய போது, சாங்கிக்கு ஃபிராங்க்ளின் பாயிண்ட் என்றும் அழைக்கப்பட்டது. ​​இந்த ஆரம்ப ஆய்வுகளில் படைத்தலைவர் ஃபிராங்க்ளின் தொடர்பு கொண்டிருந்ததால் இப்பெயர் வந்ததாக அறியப்படுகிறது.[8]

 
சாங்கி முனையின் காட்சித் தொகுப்புகள். 1. சுங்கேய் சாங்கி 2. சாங்கி ஆறு 3. சாங்கி கடற்கரை பூங்கா, 4. சாங்கி கோல்ஃப் கிளப், 5. சாங்கி முனை கடற்கரை நடைபாதை, 6. சாங்கி முனை நீர்வழி முனையம், 7.சாங்கி கிராம உணவகம்

பொருளாதாரம்

தொகு
 
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்
 
வான்வழி நிலையம், பின்னணியில் சிங்கப்பூர் வான்வழியின் கூட்டாண்மை தலைமை அலுவலகம்

சிங்கப்பூர் வான்வழி நிறுவனத்தின் தலைமையிடம் சாங்கியில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் செயல்படுகிறது. சில்க் ஏர் நிறுவன தலைமையிடமும் சிங்கப்பூர் வான்வழிச் சேவையின் சூப்பர்அப் 1இல் ஐந்தாவது மாடியில் இயங்குகிறது. சிங்கப்பூர் வான்வழி சரக்குப் போக்குவரத்தின் தலைமை அலுவலகம் சாட்ஸ் வானூர்திக் கட்டண சரக்கு முனையம் 5 ல் (SATS Airfreight Cargo Terminal 5) அமைந்துள்ளது. ஜெட் ஸ்டார் ஆசியா, ஸ்கூட் மற்றும் வலூ ஏர் ஆகிய வான்வழி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் இயங்கி வருகின்றன. டைகர் வான்வழியின் தலைமை அலுவலகம் சாங்கி மையத் தொழிற்பூங்கா ஒன்றில் அமைந்துள்ள ஹனிவெல் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

கல்வி

தொகு

சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைத்தல் பல்கலைக்கழகம் (SUTD) [9], சிங்கப்பூர் சப்பானியப் பள்ளியின் சாங்கி வளாகம் [10] போன்ற கல்வி நிலையங்கள் சாங்கி பகுதியில் இயங்கி வருகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Key Statistics FY 2014/2015". Singapore Statistics. 2015. Archived from the original on 2016-03-04.
  2. "Regulations" (PDF). Caas.gov.sg. Archived from the original (PDF) on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |3= (help)
  3. "Changi Heritage: Changi and the War". Habitatnews.nus.edu.sg. Archived from the original on 14 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 3 December 2016.
  4. Victor R Savage, Brenda S A Yeoh (2004). Toponymics A Study of Singapore Street Names. Eastern University Press. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-210-364-3.
  5. Vernon Cornelius. "Changi". Singapore Infopedia. National Library Board.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-02. பார்க்கப்பட்ட நாள் 2017-11-05.
  7. name="infopedia"
  8. name="toponym"
  9. https://sutd.edu.sg/About-Us/Contact-Us
  10. "CHANGI CAMPUS." (Archive)The Japanese School Singapore. Retrieved 8 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்கி,_சிங்கப்பூர்&oldid=3929671" இலிருந்து மீள்விக்கப்பட்டது