சாசாங்க் மணி திரிபாதி
சாசாங்க் மணி திரிபாதி (Shashank Mani Tripathi)(பிறப்பு சூலை 25,1969) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்றத்தின் 18ஆவது மக்களவை பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜாக்ரிதி யாத்திரை மற்றும் ஜாக்ரிதி வணிக நடுவம்-பூர்வாஞ்சல் (ஜே. இ. சி. பி.) ஆகியவற்றின் நிறுவனர் ஆவார்.[1] [2][3] இவர் முன்னாள் தியோரியா மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரகாசு மணி திரிபாதியின் மகன் ஆவார்.
சாசாங்க் மணி திரிபாதி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 09 சூன் 2024 | |
முன்னையவர் | இரமாபதி இராம் திரிபாதி |
தொகுதி | தியோரியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 சூலை 1969 தேவரியா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | கவுரி |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
பெற்றோர் | பிரகாசு மணி திரிபாதி (தந்தை) சாசி (தாய்) |
வாழிடம்(s) | வில்-பார்பூர் தாசில், தியோரியா மாவட்டம், தேவரியா |
முன்னாள் கல்லூரி | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி |
தொழில் | அரசியல்வாதி, ஆசிரியர் (படைப்பு), தொழிலதிபர் |
இணையத்தளம் | Official Website |
இளமையும் கல்வியும்
தொகுசாசாங்கின் கல்வி பயணம் கோல்வின் வட்டத்தில் உள்ள கல்லூரியில் (இலக்னோ) தொடங்கியது. இங்கு அவர் விளையாட்டு மற்றும் தடகளத்தில் ஜஹாங்கீராபாத் தங்கப் பதக்கத்தை வென்றார். இவரது அசாதாரணமான திறமை காரணமாக இவர் மதிப்புமிக்க தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்தார். இங்கு இவர் விளையாட்டு செயல்பாட்டு வாரியங்களின் துணை பொதுச் செயலாளராக இருந்தார். இவரது தலைமையின் கீழ், இந்தியத் தொழில்நுட்பக் கழகம், தில்லி, தொழில்நுட்பக் கழகங்களுக்கு இடையேயான வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் தொடக்க வெற்றியைப் பெற்று வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்தது.[4]
தொழில்
தொகுசாசாங்க் மணி ஜாக்ரிதி யாத்திரை மற்றும் ஜாக்ரிதி வணிக நடுவம்-பூர்வாஞ்சல் (ஜே. இ. சி. பி.) ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் தியோரியா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "देवरिया में अटल कम्युनिटी इनोवेशन सेंटर का हुआ उद्घाटन:बिना उद्यमिता के गरीबी मिटाना संभव नहीं- डॉ. चिन्तन वैष्णव". https://www.bhaskar.com/local/uttar-pradesh/deoria/news/it-is-not-possible-to-eradicate-poverty-without-entrepreneurship-dr-chintan-vaishnav-130302696.html.
- ↑ Pham, Dinh-Long (4 September 2019). "Jagriti Yatra: 500 youth, 1 train & masala chai every day". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 July 2023.
- ↑ "Women-led Businesses Fostering the Growth of Entrepreneurship in India - Shashank Mani". https://www.aninews.in/news/business/business/women-led-businesses-fostering-the-growth-of-entrepreneurship-in-india-shashank-mani20230109153633/.
- ↑ "Shashank Mani". https://newsroompost.com/author/shashank.