சாஜிதா சுல்தான்
சாஜிதா சுல்தான் அலி கான் படோடி (ஆகஸ்ட் 4, 1915 - செப்டம்பர் 5, 1995) போபாலின் நவாப் ஹமீதுல்லா கான் மற்றும் படோடியின் 8 வது நவாப் இப்திகர் அலிகானின் மகளின் மகள் ஆவார். இவர் சொந்த உரிமையில், 12 வது (கடைசியாக), போபாலின் நவாப் பேகம் என்று அறிவித்துக்கொண்டார். [1]
சாஜிதா சுல்தான் அலி கான் படோடி | |
---|---|
பிறப்பு | அகமதாபாத், போபால், பிரித்தானிய இந்தியா | 4 ஆகத்து 1915
இறப்பு | 5 செப்டம்பர் 1995 போபால், மத்திய பிரதேசம், இந்தியா | (அகவை 80)
புதைத்த இடம் | சைஃபியா மஸ்ஜித், போபால், இந்தியா |
தந்தை | ஹமிதுல்லாஹ் கான் |
தாய் | மைமூனா சுல்தான் |
வாழ்க்கை வரலாறு
தொகுசாஜிதா சுல்தான் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி போபாலின் கஸ்ர்-இ-சுல்தானி அரண்மனையில், போபாலின் கடைசி ஆளும் நவாப் ஹமீதுல்லா கான் மற்றும் அவரது மமனைவி பேகம் மைமூனா சுல்தானுக்குமகளாக பிறந்தார். [1] இவர் பெற்றோர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தவர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி அபிதா சுல்தான் மற்றும் ஒரு தங்கை ரபியா சுல்தான் இருந்தனர். [2] போபாலின் பேகம் சுல்தான் ஜஹான் இவரது பாட்டியாவார் மற்றும் ஷாஜகான் பேகம் இவரது பெரிய பாட்டியாவார். பாகிஸ்தான் தூதர் ஷாஹ்யார் கான், இவரது சகோதரி அபிதா வழி மருமகன் ஆவார்.
குடும்பம்
தொகு1939 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று சாஜிதா 8வது பட்டோடி நவாப் இப்திகார் அலி கான் அவர்களை திருமணம் செய்துகொண்டார். [3] இவர்களுக்கு சலேஹா, சபிஹா, மற்றும் குத்சியா என்ற மூன்று மகள்களும், கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி என்ற ஒரு மகனும் உள்ளனர். [4] நடிகர்கள் சைஃப் அலிகான் மற்றும் சோஹா அலிகான், நகை வடிவமைப்பாளர் சபா அலிகான் மற்றும் கிரிக்கெட் வீரர் சாத் பின் ஜங் ஆகியோர் இவரது பேரன்கள் மற்றும் பேத்திகள் ஆவார். இந்தி திரையுல நடிகை சாரா அலி கான் இவரது பேத்தியாவார்.
1952 ஆம் ஆண்டு ஜனவரி 5 அன்று, இப்திகர் அலி கான் இறந்தார். மன்சூர் தனது தந்தைக்குப் பின் படோடியின் 9 வது பெயரிடப்பட்ட நவாப் ஆனார்.[5]
1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று தனது 80வது வயதில் இறந்தார். மன்சூர் அலி கான் பின்னர் போபால் அவ்கஃப் -இ-ஷாஹி, தற்போது மும்பையில் இவரது சபா அலி கான் பேத்தியோவுடன் சமய சொத்துக்களை காக்கும் அறக் காப்பாளர் ஆனார். [6]
பட்டங்கள் மற்றும் பாணிகள்
தொகு- 4 ஆகஸ்ட் 1915 - 4 பிப்ரவரி 1960: நவாப்ஸாதி மெஹ்ர்-இ-தாஜ் சஜிதா சுல்தான் பேகம் சாஹிபா
- 23 ஏப்ரல் 1939 - 27 டிசம்பர் 1969: நவாப் சஜிதா சுல்தான் பேகம் சாஹிபா, படோடியின் பேகம்
- 4 பிப்ரவரி 1960 - 28 டிசம்பர் 1971: இவரது உயர்நிலை நவாப் மெஹ்ர்-இ-தாஜ் சஜிதா சுல்தான் பேகம் சாஹிபா, தார்-உல்-இக்பால்-இ-போபாலின் நவாப் பேகம் [1]
பிள்ளைகள்
தொகுபெயர் | பிறப்பு | இறப்பு | மனைவி | அவர்களின் குழந்தைகள் |
---|---|---|---|---|
சலேஹா சுல்தான் | 14 ஜனவரி 1940 | 19 ஜனவரி 2020 | பஷீர் யார் ஜங் | அமர் பின் ஜங் சாத் பின் ஜங் [1] ஓமர் பின் ஜங் ஃபைஸ் பின் ஜங் |
நவாப் மன்சூர் அலிகான் | 5 ஜனவரி 1941 | 22 செப்டம்பர் 2011 | ஷர்மிளா தாகூர் | சைஃப் அலிகான் சபா அலிகான் சோஹா அலிகான் [7] |
சபிஹா சுல்தான் | 30 மார்ச் 1942 | அர்ஜுமான் அலிகான் | ஜியா சுல்தான் சாமியா சுல்தான் [8] | |
குத்சியா சுல்தான் | 15 மார்ச் 1946 | 5 நவம்பர் 1989 [9] | குலாம் ஃபரிதுதீன் ரியாஸ் | இப்திகாருதீன் ரியாஸ் சாரா சுல்தான் |
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Bin Jung, Saad (20 November 2012). Subhan and I: My Adventures with Angling Legend of India. New Delhi: Roli Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351940326.
- ↑ Mirza, Priya (4 June 2019). "The remarkable Begums who defied patriarchal norms to rule Bhopal for more than a century". Dawn Media Group.
- ↑ Pataudi, Sher Ali Khan. The Elite Minority: Princes of India. Lahore: S.M. Mahmud & Co.
- ↑ Sultaan, Abida. Memoirs of a Rebel Princess. Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195799583.
- ↑ Ali, Ashfaq (1969). Bhopal: Past and Present: A Brief History of Bhopal from the Hoary Past upto the Present Time. Jai Bharat Publishing House. p. 140.
- ↑ "Saif Ali Khan anointed Nawab of Pataudi". தி இந்து. PTI (The Hindu Group). 31 October 2017. https://www.thehindu.com/news/national/other-states/saif-ali-khan-anointed-nawab-of-pataudi/article2585515.ece. பார்த்த நாள்: 12 January 2019.
- ↑ Gupta, Ameeta (28 August 2007). "To Saif with love: Soha & Saba".
- ↑ Ayub, Jamal (14 April 2014). "Sharmila helps bury Pataudi family feud". Bennett, Coleman & Co. Ltd..
- ↑ Riaz, Ghulam Fariduddin. Shade in Passing: And Other Poems. Sang-e-Meel Publications.