மன்சூர் அலி கான் பட்டோடி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

மன்சூர் அலி கான் படோடி (Mansoor Ali Khan Pataudi, சனவரி 5 1941 - செப்டம்பர் 23, 2011.[1]), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 45 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 310 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1961 – 1975 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். இவர் பட்டோடியின் ஒன்பதாவது மற்றும் கடைசி நவாப் ஆக 1971ல் 26வது சட்டதிருத்தம் மூலம் அரசர்களின் உரிமை ஒழிக்கப்படும் வரை இருந்தார். இவர் துடுப்பாட்டம் ஆடத்தொடங்கிய சிறிது காலத்திலேயே மகிழுந்து விபத்தொன்றில் வலது கண் பார்வையை இழந்தார்.[2][3] பெரும்பாலான ஆட்டங்களை இடது கண் பார்வையை கொண்டே ஆடினார். இறக்கும் வரை இவரே இந்தியாவின் குறைந்த வயதில் அணியின் தலைவர் என்ற சிறப்பை கொண்டிருந்தார். இந்தியாவின் முதல் தேர்வுத்துடுப்பாட்ட வெற்றி இவரின் தலைமையில் 1968ல் நியூசிலாந்துக்கு எதிராக பெறப்பட்டது.[4]

மன்சூர் அலி கான் படோடி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 46 310
ஓட்டங்கள் 2793 15425
மட்டையாட்ட சராசரி 34.91 33.67
100கள்/50கள் 6/16 33/75
அதியுயர் ஓட்டம் 203* 203*
வீசிய பந்துகள் 132 1192
வீழ்த்தல்கள் 1 10
பந்துவீச்சு சராசரி 88.00 77.59
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 20 1/0
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
27/- 208/-
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Former India captain MAK Pataudi passes away
  2. 'Captaincy has not changed... only the pressures have...'
  3. Barbadose by dose பரணிடப்பட்டது 2011-09-26 at the வந்தவழி இயந்திரம் SPORTSTAR Vol. 25 :: No. 18 :: May. 04 - 10, 2002
  4. "Legendary cricketer Mansur Ali Khan Pataudi passes away". The Times of India. 22 September 2011. http://timesofindia.indiatimes.com/sports/cricket/top-stories/Mansoor-Ali-Khan-Pataudi-passes-away/articleshow/10079917.cms. பார்த்த நாள்: 22 September 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சூர்_அலி_கான்_பட்டோடி&oldid=3718966" இலிருந்து மீள்விக்கப்பட்டது