சோஹா அலி கான்

இந்திய நடிகர்

சோஹா அலி கான் பட்டோடி (Soha Ali Khan Pataudi பிறப்பு அக்டோபர் 4, 1978) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முதன்மையாக ஹிந்தி திரைப்படத் துறையில் தனது பணிக்காக அறியப்பட்டாலும், பெங்காலி மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சோஹா அலி கான் கெமு
2018இல் ஒரு நிகழ்ச்சியில் சோஹா அலி கான்
பிறப்புசோஹா அலி கான்
4 அக்டோபர் 1978 (1978-10-04) (அகவை 46)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
இலண்டன் பொருளாதாரப் பள்ளி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை
பெற்றோர்மன்சூர் அலி கான் பட்டோடி
ஷர்மிளா தாகூர்
வாழ்க்கைத்
துணை
குனால் கெமு (தி. 2015)
பிள்ளைகள்1
உறவினர்கள்சைஃப் அலி கான் (சகோதரன்) கரீனா கபூர் (நாத்தனார்)

வாழ்க்கை வரலாறு

தொகு

சோஹா அலி கான் 4 அக்டோபர் 1978 இல் பிறந்தார்.[1] நடிகை ஷர்மிளா தாகூர் மற்றும் பட்டோடியின் 9 வது நவாபின் மன்சூர் அலிகான் பட்டோடியின் இளைய மகள் இவர் . இவரது தந்தை மற்றும் தாத்தா, இப்திகார் அலி கான் பட்டோடி இருவரும் இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் அணித் தலைவர்கள். அவரது மூத்த சகோதரர் சைஃப் அலி கான் ஒரு பாலிவுட் நடிகர் மற்றும் அவரது மூத்த சகோதரி சபா அலி கான் , நகை வடிவமைப்பாளர் ஆவார். [சான்று தேவை] பாலிவுட் திரைப்படமான தில் மாங்கே மோரில் (2004) இவர் அறிமுகமானார். இவர் பெங்காலி திரைப்படமான அன்டர் மஹால் (2005) மற்றும் ரங் தே பசந்தி (2006) ஆகிய படங்களில் நடித்தார். அவர் கோயா கோயாக் சந்த் மற்றும் 99 என்னும் 2009 ஆம் ஆண்டு திரைப்படத்தில் தோன்றினார். எம்ரான் ஹஷ்மிக்கு துணையாக தும் மிலே திரைப்படத்தில் நடித்துள்ளார். [சான்று தேவை]

 
கணவர் குணால் கெமுவுடன் கான்.

சோஹா அலி கானுக்கு நடிகர் குணால் கெமுவுடன் பாரிசில் ஜூலை 2014 இல் திருமணம் நிச்சயமானது [2]. திருமணம் மும்பை 25 ஜனவரி 2015 அன்று நடந்தது.[3] 29 செப்டம்பர் 2017 அன்று இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Soha Ali Khan khemu turns 34!". Rediff. 4 October 2012. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
  2. PTI (24 July 2014). "Soha Ali Khan, Kunal Khemu get engaged". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
  3. Prashar, Chandni (25 January 2015). "Soha Ali Khan Marries Kunal Khemu, Saif-Kareena Play Hosts". NDTVMovies.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
  4. "Soha Ali Khan, Neha Dhupia post adorable pics on Inaaya Naumi Kemmu's first birthday. See here". hindustantimes.com. பார்க்கப்பட்ட நாள் 29 September 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோஹா_அலி_கான்&oldid=3295993" இலிருந்து மீள்விக்கப்பட்டது