சாதாரண சளியும் துத்தநாகமும்

துத்தநாக குறைநிரப்பிகள் (Zinc supplements) என்பவை சளி சிகிச்சைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் உணவுசேர்க்கைப் பொருட்களின் குழுவகை ஆகும். பெரும்பாலும் துத்தநாக அசிட்டேட்டும் துத்தநாக குளுக்கோனேட்டு லோசெங்கசும் குறை நிரப்பியாகப் பயன்படுத்தப்படுகின்றன.[1] சளிக்கான அறிகுறிகள் தோன்றிய பெரியவர்கள் 24 மணி நேரத்திற்குள் ஒரு நாளைக்கு 75 மி.கி அளவுக்கு மேல் துத்தநாக குறை நிரப்பிகளைப் பயன்படுத்தினால் 1 நாளில் சளி குறைவதாக நிருபிக்கப்பட்டுள்ளது.[1][2] வாய் வழியாக துத்தநாக குறைநிரப்பிகளை எடுத்துக் கொண்டால் மோசமான சுவை மற்றும் குமட்டல் போன்ற பாதகமான விளைவுகள் தோன்றும்.[1][2] துத்தநாகம் கொண்ட குறைநிரப்பிகளை தெளிப்பான்கள் வழியாக நாசிக்குள் தெளிப்பதன் மூலம் பயன்படுத்த நினைத்தால் டு வாசனை உணர்வை இழக்க நேரிடும்.[1] இதன் விளைவாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு துத்தநாக குறைநிரப்பி நுகர்வோருக்கு 2009 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் துத்தநாகம் பயன்படுத்துவதை நிறுத்துமாறு எச்சரித்தது.[1]

50 மி.கி. துத்தநாக குளுக்கோனேட்டு மாத்திரைகள்

மனிதர்களிடத்தில் சாதாரண சளி தோன்றுவதற்கு பொதுவான ஒரு காரணியாக இருப்பது மனித ரைனோ வைரசு எனப்படும் வைரசு நோய்க்கிருமியாகும்.[3] சளிக்கான அறிகுறிகளின் தீவிரத்தன்மையையும் சளியின் கால அளவையும் துத்தநாகம் குறைக்கும். நாசி அழற்சி அல்லது வீக்கத்தை அடக்குதல், நாசி சளிச்சுரப்பியில் ரைனோவைரசை ஏற்கும் பிணைப்புகளை தடுத்தல் மற்றும் ரைனோவைரசு பெருக்கத்தை தடுத்தல் போன்றவை இக்கருதுகோளுக்கான அடிப்படைக் காரணங்களாகும்.[1]

சாதாரண சளி உண்டாக்கும் வைரசுகளில் துத்தநாகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல ஆண்டுகளாக ஆய்வகங்களில் அறியப்படுகிறது.[4] சளியை ஏற்படுத்தும் ஆர்டரிவிரிடே மற்றும் கொரோனாவிரிடே குடும்ப வைரசு இனங்களின் பெருக்கத்தை துத்தநாக அயனிகள் தடுக்கின்றன என்று செயற்கைக் கலமுறை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.[5]

திறன்

தொகு

துத்தநாக அசிடேட்டு-லொசெஞ்சசு குறைநிரப்பியை உபயோகித்த சாதாரண சளியால் பாதிக்கப்பட்ட 199 நோயாளிகளிடம் 2016 ஆம் ஆண்டு மெட்டா பகுப்பாய்வு எனப்படும் அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலான புள்ளிவிவரப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.[6] இக்குறைநிரப்பியை பயன்படுத்தியவர்களுக்கு சளி 2.7 நாட்கள் குறைவாக இருந்ததை அறிய முடிந்தது. இம்மதிப்பீட்டைப் பெற மூன்று சோதனைகளும் 7 நாள் சராசரி சளி காலமும் ஒப்பிடப்பட்டது. துத்தநாகம் மற்றும் சாதாரண சளி குறித்து மேற்கொள்ளப்பட்ட 2015 ஆம் ஆண்டு புள்ளிவிவரப் பகுப்பாய்வில் துத்தநாக குறைநிரப்பி பயன்பாட்டால் அடித்தொண்டையில் துத்தநாகத்தின் செறிவு மிகுதியானது என்றாலும் பல்வேறு சுவாச அறிகுறிகளில் எந்த வித்தியாமும் காணப்படவில்லை. தொடர்ந்து அதிக அளவிலான துத்தநாக அசிடேட் லோசன்சசு கொடுக்கப்பட்டு விளைவுகள் அடுத்தடுத்த புள்ளிவிவரப் பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. அடித்தொண்டை மற்றும் நாசி அறிகுறிகள் கணிசமாக ஏதும் வேறுபடவில்லை என்பது உணரப்பட்டது.

நாசிகளில் சளி வெளியேற்றத்தின் காலம் 34% , மூக்கடைப்பு 37% , தும்மல் 22% , தொண்டை கரகரப்பு 33%, தொண்டைப் புண் 18% , தொண்டை வலி 43%, இருமல் 46% என்ற அளவுகளுக்கு குறைக்கப்பட்டது என்பதை இப்பகுப்பாய்வு முடிவுகள் அளித்தன. தசை வலியின் காலமும் 54% அளவுக்கு குறைந்தது என்றாலும் தலைவலி, காய்ச்சலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.[7] சாதாரண சளிக்கு துத்தநாகம் உதவும் என்று கூறப்பட்ட 2013 ஆம் ஆண்டின் மதிப்பாய்வை பிரித்தானிய கோக்ரேன் அமைப்பு திரும்பப் பெற்றது.[8]

இடைவினைகள்

தொகு

சில லோசென்சசு குறைநிரப்பிகளில் சளியின் காலத்தை திறம்பட குறைக்கப் போதுமான துத்தநாகம் இல்லை; அவற்றில் சில துத்தநாகம் வேலை செய்வதைத் தடுக்கும் சிட்ரிக் அமிலம் போன்ற பிணைக்கும் பொருட்களை கொண்டுள்ளன[6].

பாதுகாப்பு

தொகு

துத்தநாக நாசி தெளிப்பான்களைப் பயன்படுத்தியால் வாசனை உணர்வை இழந்த மக்கள் பலர் உள்ளனர்.[1] இதனால் 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் துத்தநாகம் கொண்ட நாசி தெளிப்பான்களை மக்கள் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தது.[1] துத்தநாகத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் வாசனை, மற்றும் சுவை இழப்புகள் உண்டாகும்.[1][8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Zinc – Fact Sheet for Health Professionals". Office of Dietary Supplements, US National Institutes of Health. February 11, 2016. பார்க்கப்பட்ட நாள் January 7, 2018.
  2. 2.0 2.1 "Zinc for the treatment of the common cold: a systematic review and meta-analysis of randomized controlled trials". CMAJ 184 (10): E551-61. July 2012. doi:10.1503/cmaj.111990. பப்மெட்:22566526. 
  3. "Common Cold and Runny Nose". United States Centers for Disease Control and Prevention. September 26, 2017. பார்க்கப்பட்ட நாள் January 7, 2018.
  4. "Zinc 'can cut length of common cold'". NHS Choices. May 8, 2012. Archived from the original on ஜூன் 12, 2017. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. te Velthuis, Aartjan J. W.; van den Worm, Sjoerd H. E.; Sims, Amy C.; Baric, Ralph S.; Snijder, Eric J.; van Hemert, Martijn J. (4 November 2010). "Zn2+ Inhibits Coronavirus and Arterivirus RNA Polymerase Activity In Vitro and Zinc Ionophores Block the Replication of These Viruses in Cell Culture". PLOS Pathogens 6 (11): e1001176. doi:10.1371/journal.ppat.1001176. பப்மெட்:21079686. 
  6. 6.0 6.1 "Zinc acetate lozenges for treating the common cold: an individual patient data meta-analysis". British Journal of Clinical Pharmacology 82 (5): 1393–1398. November 2016. doi:10.1111/bcp.13057. பப்மெட்:27378206. 
  7. "The effectiveness of high dose zinc acetate lozenges on various common cold symptoms: a meta-analysis". BMC Family Practice 16: 24. February 2015. doi:10.1186/s12875-015-0237-6. பப்மெட்:25888289. 
  8. 8.0 8.1 "Zinc for the common cold". The Cochrane Database of Systematic Reviews (6): CD001364. June 2013. doi:10.1002/14651858.CD001364.pub4. பப்மெட்:23775705.  வார்ப்புரு:Retracted