துத்தநாக அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

துத்தநாக அசிட்டேட்டு (Zinc acetate) என்பது Zn(CH3CO2)2, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். பொதுவாக ஓர் இரு நீரேற்றாகவே Zn(CH3CO2)2•2H2O இச்சேர்மம் இயற்கையில் தோன்றுகிறது. நீரற்ற துத்தநாக அசிட்டேட்டு மற்றும் துத்தநாக இருநீரேற்று என்ற இரண்டு வடிவங்களும் நிறமற்ற திண்மங்களாக உள்ளன. இருநீரேற்று வடிவம் எண்முக கட்டமைப்பில் படிகமாகிறது. கொதிநிலையான 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது சிதைவடையும். இலேசான நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகவும் இது கருதப்படுகிறது.அசிட்டிக் அமிலத்தின் துத்தநாக உப்பு,அசிட்டிக் அமில(II) உப்பு, டைகார்போமெத்தாக்சி துத்தநாகம், துத்தநாக ஈரசிட்டேட்டு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. வேதித் தொகுப்பு வினைகளில் இத்திண்மங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுக் கூட்டுசேர் பொருள்களாகவும் பயன்படுகின்றன. துத்தநாக உலோகம் அல்லது துத்தநாக கார்பனேட்டு மீது அசிட்டிக் அமிலம் வினைபுரிவதால் துத்தநாக அசிட்டேட்டு உருவாகிறது. உணவுக் கூட்டுப் பொருளாக பயன்படுகையில் இதன் ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ650 என்று அடையாளப் படுத்தப்படுகிறது.

துத்தநாக அசிட்டேட்டு
துத்தநாக அசிட்டேட்டு படிகங்கள்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
துத்தநாக அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
அசிட்டிக் அமில துத்தநாக உப்பு
அசிட்டிக் அமில(II) உப்பு
டைகார்போமெத்தாக்சி துத்தநாகம்
துத்தநாக ஈரசிட்டேட்டு
இனங்காட்டிகள்
557-34-6 Yes check.svgY
5970-45-6 Yes check.svgY
ChEMBL ChEMBL1200928 N
ChemSpider 10719 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image

ஒருங்கிணைவுச் சேர்மம்

பப்கெம் 11192
வே.ந.வி.ப எண் ZG8750000
UNII H2ZEY72PME Yes check.svgY
பண்புகள்
Zn(CH3COO)2(H2O)2 (இருநீரேற்று)
வாய்ப்பாட்டு எடை 219.50 கி/மோல் (இருநீரேற்று)
183.48 கி/மோல் (நீரிலி)
தோற்றம் வெண் திண்மம் (அனைத்து வடிவங்களும்)
அடர்த்தி 1.735 கி/செ.மீ3 (இருநீரேற்று)
உருகுநிலை
கொதிநிலை சிதைவடையும்
43 கி/100 மி.லி (20 °செ, இருநீரேற்று)
கரைதிறன் 1.5 கி/100 மி.லி (மெத்தனால்)
−101.0•10−6 cm3/mol (+2 H2O)
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (இருநீரேற்று)
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் இலேசான நச்சு
R-சொற்றொடர்கள் R22 R36 R50/53
S-சொற்றொடர்கள் S26 S60 S61
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் துத்தநாக குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தாமிரம்(II) அசிட்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பயன்கள்தொகு

உணவு மற்றும் மருத்துவப் பயன்பாடுகள்தொகு

சாதாரண சளிக்கு துத்தநாக அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது [1]. துத்தநாகக் குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்க துத்தநாக அசிடேட்டு பயன்படுத்தப்படலாம் [2]. வில்சன் நோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக வாய்வழி தினசரியாக இது கொடுக்கப்படுகிறது. இது செம்பு உடலுக்குள் உறிஞ்சப்படுவதை தடுக்க பயன்படுகிறது [3].எரித்ரோமைசினுடன் சேர்க்கப்பட்டு களிம்பாக முகப்பரு சிகிச்சையில் துத்தநாக அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. துத்தநாக அசிட்டேட்டு பொதுவாக ஒரு நமைச்சல் எதிர்ப்பு களிம்பாக விற்பனை செய்யப்படுகிறது. துத்தநாக அசிட்டேட்டு உடலுக்குள் ஈர்க்கப்படுதல் விலங்குகளை விட மனிதர்களிடையே மிகவும் குறைவாக உள்ளது. கல்லீரல் மற்றும் கணையத்தில் சிறிதளவு துத்தநாக அசிட்டேட்டு திரள்கிறது. ஈர்க்கப்படும் அளவுகளால் உடல்நலத்திற்கு இச்சேர்மத்தால் எந்த விதமான தீங்குகளும் இல்லை.

தொழிற்துறை பயன்பாடுகள்தொகு

மரத்தைப் பாதுகாத்தல், பிற துத்தநாக உப்புகளை உற்பத்தி செய்தல், பலபடிகள் தயாரித்தல், எத்தில் அசிடேட்டு தயாரித்தல், ஒரு சாய நிறமூன்றியாகப் பயன்படுதல் மற்றும் பகுப்பாய்வு முகவர் போன்ற பயன்பாடுகள் துத்தநாக அசிட்டேட்டின் தொழில்துறை பயன்பாடுகளில் அடங்கும் . இது வணிக அணு மின் நிலையங்களில் முதன்மை நீர் குழாய் மீது ஒரு மின் முலாம் தடுப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கட்டமைப்புதொகு

நீரற்ற துத்தநாக அசிடேட்டில் துத்தநாகம் ஒரு நான்முகிச் சூழலைக் கொடுக்க நான்கு ஆக்சிசன் அணுக்களுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது, இந்த நான்முகி பன்முகம் பின்னர் அசிடேட்டு ஈந்தணைவிகளுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு பலவகையான பல்பகுதிய கட்டமைப்புகளைக் கொடுக்கிறது. இதற்கு மாறாக, பெரும்பாலான உலோக டை அசிட்டேட்டுகள் இருபல் அசிடேட்டு குழுக்களுடன் எண்முக ஒருங்கிணைப்பில் உலோகங்களைக் கொண்டுள்ளன. துத்தநாக அசிடேட்டு இரு நீரேற்றில் துத்தநாகம் எண்முகத்தை கொண்டுள்ளது. , இதில் இரு அசிடேட்டு குழுக்களும் இருபல் அமைப்பில் உள்ளன.

Zn (CH 3 CO 2 ) 2 சேர்மத்தை ஒரு வெற்றிடத்தில் வெப்பப்படுத்துவதால் அசிட்டிக் நீரிலி இழப்பு ஏற்பட்டு, அடிப்படை துத்தநாக அசிடேட்டு வீழ்படிவாக எஞ்சியிருக்கும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு Zn 4 O (CH 3 CO 2 ) 6 ஆகும். இந்த கொத்துச் சேர்மம் கீழே காட்டப்பட்டுள்ள நான்முகிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்த இனம் தொடர்புடைய பெரிலியம் சேர்மத்துடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது, இருப்பினும் இது துத்தநாகம்- ஆக்சிசன் பிணைப்புகளுக்கு இடையிலான தூரத்தில் சற்று விரிவாக நீண்டுள்ளது [4]  .

மேற்கோள்கள்தொகு

  1. "Zinc – Fact Sheet for Health Professionals". Office of Dietary Supplements, US National Institutes of Health. February 11, 2016. November 15, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. Wegmüller, Rita; Tay, Fabian; Zeder, Christophe; Brnić, Marica; Hurrell, Richard F. (2014). "Zinc Absorption by Young Adults from Supplemental Zinc Citrate is Comparable with That from Zinc Gluconate and Higher than from Zinc Oxide". The Journal of Nutrition 144 (2): 132–136. doi:10.3945/jn.113.181487. பப்மெட்:24259556. 
  3. "Wilson Disease". NIDDK. July 2014. 2016-10-04 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 15, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Koyama, H.; Saito, Y. (1954). "The Crystal Structure of Zinc Oxyacetate, Zn4O(CH3COO)6". Bull. Chem. Soc. Jpn. 27 (2): 112–114. doi:10.1246/bcsj.27.112.