சாத்தாவாரி

சாத்தாவாரி அல்லது தண்ணீர் விட்டான் (Asparagus racemosus) என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம். ஒன்று அல்லது இரண்டு மீட்டர் வளரும் இது சரளைக்கல், கற்கள் கொண்ட மணலில், கடல்மட்டத்திலிருந்து 1,300–1,400 மீட்டர் சமவெளிகளில் வளரும்.[2][3] இது 1799இல் விபரிக்கப்பட்டது.[1] இது மூலிகை மருந்து உட்பட பல பயன்களைத் தரவல்லது.

Satavar
Shatawari plant photographed at Pune
உயிரியல் வகைப்பாடு e
திணை: தாவரம்
உயிரிக்கிளை: பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை: ஒருவித்திலையி
வரிசை: அசுபாராகேல்சு
குடும்பம்: அசுபராகேசியே
Subfamily: Asparagoideae
பேரினம்: சாத்தாவாரியினம்
இனம்: A. racemosus
இருசொற் பெயரீடு
Asparagus racemosus
Willd.[1]
வேறு பெயர்கள்
தண்ணீர் விட்டான் கிழங்கும் கொடியும்

பெயர்கள் தொகு

இது தண்ணீர்விட்டான், சதாவேரி, சதாவரி, நாராயணி, உதகமூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி ஆகிய பல்வேறு பெயர்களைக் கொண்டது ஆகும். இதன் ஊசி போன்ற இலைகளும் கிளைகளும் வரிவரியாக மேலேறுவதால் ‘வரிவரி’ எனும் பெயரும் உண்டு. இந்தக் கொடியில் இருந்து கிடைக்கும் கிழங்கானது வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மைக் கொண்டது என்பதால், ‘நீர்’விட்டான், ‘நீர்’வாளி ஆகிய பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். நூறு (சதா) நோய்களைத் தீர்க்கும் மூலம் (வேர்) என்பதால் ‘சதாமூலம்’ என்ற பெயரும் இதற்குண்டு.

விளக்கம் தொகு

இது முட்கள் கொண்ட கொடி வகைத் தாவரமாகும். இதன் இலைகள் மெல்லியதாகவையாகவும், ஊசி போல் சிறுசிறுயதாகவும் இருக்கும். இது வெள்ளை நிறத்தில் வாசனை மிக்கப் பூக்களைக் கொண்டதாகவும், இதன் பழங்களின் சிவப்பு நிறம் கொண்டவையாகவும் இருக்கும். இது தன் வேர்களில் விரல் வடிவ வெண்ணிறத்திலான கிழங்குகளைக் கொண்டிருக்கும். இதில் தனக்கான நீரையும், உணவையும் சேமித்து வைத்திருக்கும். இந்த கிழங்கானது பலவகையில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.[4]

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Asparagus racemosus information from NPGS/GRIN". Germplasm Resources Information Network (USDA). 6 August 2002. http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?5540. பார்த்த நாள்: 25 April 2009. 
  2. Robert Freeman (February 26, 1998). "LILIACEAE - Famine Foods". Centre for New Crops and Plant Products, Department of Horticulture & Landscape Architecture (Purdue University). http://www.hort.purdue.edu/newcrop/faminefoods/ff_families/liliaceae.html. பார்த்த நாள்: 25 April 2009. 
  3. "Asparagus racemosa" இம் மூலத்தில் இருந்து 19 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090419163534/http://www.herbalcureindia.com/herbs/asparagus-racemosus.htm. பார்த்த நாள்: 25 April 2009. 
  4. டாக்டர் வி.விக்ரம் குமார் (6 அக்டோபர் 2018). "நலம் வளர... ‘தண்ணீர்விட்டான்!’". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/general/health/article25142178.ece. பார்த்த நாள்: 7 அக்டோபர் 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தாவாரி&oldid=3577166" இருந்து மீள்விக்கப்பட்டது