சாத்தே' (/[invalid input: 'icon']ˈsɑːt/ SAH-tay), சாத்தே என்பது இரும்பு அல்லது கம்பால் ஆன குச்சியில் இறைச்சிகளை குத்தி அவைகளை நெருப்பில் வாட்டி தாயாரிக்கும் ஒரு வகை உணவு. சாத்தே உணவு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கோழியிறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றிறைச்சி, மீன் போன்றவையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. மேலும் இவ்வாறு தயாரிக்கப்படுகின்ற உணவு கடலையில் செய்யப்பட்ட சட்னியை கொண்டு பரிமாறப்படுகிறது. இறைச்சிகளை குத்திவதற்கு இரும்பு கம்பிகளுக்குப் பதிலாக தென்னை மற்றும் மூங்கில் குச்சிகளும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சாத்தேவை வாட்டுவதற்கு ஒரு வகை அடுப்பும் கறிகட்டையும் பயன்படுத்தப்படுகிறது . எலும்புகள் நீக்கப்பட்ட இறைச்சியை சிறிய துண்டுகளாக வெட்டி பிறகு அதனுடன் வாசனைப் பொருட்களைக் கலந்து (அரைத்த இஞ்சி, மிளகு, வெங்காயம், மஞ்சள் மற்றும் சிலப் பொருட்கள் ) சிறிது நேரம் உற வைக்கப்படுகின்றது. அதன் பிறகு இவ்விறைச்சிகள் சிறுசிறு குச்சிகளில் குத்திப்பட்டு நெருப்பில் வாட்டப்படுகின்றது. இவ்வாறு வாட்டும் பொழுது அவ்விறைச்சிகளின் மேல் தேன் அல்லது வெண்ணெய் பூசப்படுகின்றது. சிலர் வேறு பொருட்களையும் பூசுவதற்குப் பயன்படுத்துகின்றனர் .

சாத்தே
பொனோரொகோ, ஜாவா தீவில் உள்ள ஒரு உணவகத்தில் பரிமாறப்பட்ட சாத்தே உணவு , இந்தோனேசியா.
மாற்றுப் பெயர்கள்சத்தாய்
தொடங்கிய இடம்இந்தோனேசியா
பகுதிஇந்தோனேசியா மற்றும் மலேசியா, சிங்கப்பூர் ,புரூணை, தாய்லாந்து, பிலிப்பின்ஸ், நெதர்லாந்து
ஆக்கியோன்இந்தோனேசிய உணவு வகை
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்இரும்பு அல்லது கம்பால் ஆன குச்சிகள் , இறைச்சி, வாசனைப் பொருட்களின் கலவை மற்றும் அதை தொட்டு உண்பதற்கு ஒரு வகை கடலை சட்னி
வேறுபாடுகள்ஒவ்வொரு நாட்டிற்கும் செய்யப் பயன்படுத்தப் படும் பொருட்கள் வேறுபடுகின்றன

நாடுகள்

தொகு

சாத்தே என்பது இந்தோனேசியா ,ஜாவா தீவின் பாரம்பரிய உணவாகும். சாத்தே இந்தோனேசியா முழுவதும் கிடைக்கக் கூடிய ஒரு உணவுப் பொருளாகும் . இதனை இந்தோனேசியாவின் தேசிய உணவு என கூறலாம் .[1] இந்தோனேசியா தவிர மலேசியா, சிங்கப்பூர், புரூணை, தாய்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளும் சாத்தே பிரபலாமான உணவாக திகழ்கின்றது .

மேற்கோள்

தொகு
  1. Indonesian Regional Food and Cookery By Sri Owen. பார்க்கப்பட்ட நாள் 2010-07-07.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தே&oldid=3641580" இலிருந்து மீள்விக்கப்பட்டது