சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர்


சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர் (CPA ) என்பது அமெரிக்காவில், சீரான சான்றளிக்கப்பட்ட பொது கணக்கியல் தேர்வில் (Uniform Certified Public Accountant Examination) தேர்ச்சி பெற்று, CPA ஆக இருப்பதற்குத் தேவையான கூடுதல் நிலைக் கல்வி மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பெற்றுள்ள தகுதிபெற்ற கணக்கர்களின் சட்டப்பூர்வ தலைப்பாகும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆனால் தேவையான பணி அனுபவம் பெற்றிருக்காமல் இருப்பவர்கள் அல்லது முன்னர் அதைப் பூர்த்தி செய்திருந்து ஆனால் அந்த நேரத்தில் தொடர்ச்சியான தொழில்முறைக் கல்வியை இழந்திருப்பவர்கள், பல மாகாணங்களில் "செயலிலா CPA" அல்லது அதற்கு சமமான வாக்கியத்தால் குறிப்பிடப்படும் தலைப்பு வழங்கப்படுகின்றனர்.[1] பெரும்பாலான அமெரிக்க மாகாணங்களில், உரிமம் பெற்ற CPAக்கள் மட்டுமே நிதி அறிக்கைகள் மீதான பொது சான்றொப்பமிடல் (தணிக்கை உட்பட) கருத்துகளை வழங்க முடியும். அரிசோனா, கான்சஸ், வடக்கு கரோலினா மற்றும் ஓஹியோ ஆகிய மாகாணங்கள் இந்த விதிக்கு விலக்காகும், இவற்றில் "CPA" பதவியானது தடைசெய்யப்பட்டாலும் தணிக்கை செய்தல் செயலானது தடுக்கப்படவில்லை.

Certified Public Accountant (CPA)
வகைQualified accountants
நிறுவுகைஐக்கிய அமெரிக்கா United States
தலைமையகம்ஐக்கிய அமெரிக்கா United States
தொழில்துறைAccountancy and Finance

பல மாகாணங்கள் குறை நிலையான (CPAக்கானதை விடக் குறைவான) கணக்கர் தகுதியமைப்பைக் கொண்டுள்ளன அவர்களை பொதுவாக "பொதுக் கணக்கர்" (பதவிக்கான எழுத்துச்சுருக்கம் "PA" ஆகும்) என்றழைப்பர். இருப்பினும் பெரும்பாலான மாகாணங்களில் புதிதாக வருபவர்களுக்கு "பொதுக் கணக்கர்" என்ற பதவி இப்போது இல்லை, ஆனால் 10 மாகாணங்கள் மட்டும் இந்தப் பதவியை இன்னும் தொடர்ந்து வழங்கிவருகின்றன. பல PAக்கள் (பொது) கணக்கர்களின் தேசிய சங்கத்தினைச் சேர்ந்தவர்களாவர்.

பல மாகாணங்கள், தம் மாகாணத்தில் CPA அல்லது PA என சான்றளிக்கப்படாத ஒரு நபர் "சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர்" அல்லது "பொதுக் கணக்கர்" (அல்லது "CPA" அல்லது "PA" ஆகிய சுருக்கங்கள்) பதவிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்துள்ளன.[2] இதன் விளைவாக, பல சூழ்நிலைகளில் வெளி மாகாண CPA ஒருவர் அந்த மாகாணத்திலிருந்து வழங்கப்படும் உரிமம் அல்லது சான்றிதழைப் பெறும் வரை CPA பதவியை அல்லது பதவிக்கான சுருக்க எழுத்துகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

பல பிற நாடுகளும் உள்ளூர் பொதுக் கணக்கர்களின் பதவியைக் குறிப்பிட CPA எனும் தலைப்பைப் பயன்படுத்துகின்றன. இதற்கு இணையாக பிரித்தானிய நாடுகளில் முன்னர் இருந்த பதவி பட்டயக் கணக்கர் என்பதாகும்.

CPAக்கள் வழங்கும் சேவைகள்

தொகு

CPA பூர்த்தி செய்தவர்கள் வழங்கும் முதன்மையான செயல்கள் உத்தரவாத சேவைகள் அல்லது பொதுக் கணக்கியல் ஆகியன தொடர்பானவையாகும். நிதித் தணிக்கை சேவைகள் என்றும் அழைக்கப்படும் உத்தரவாத சேவைகளில், நிதி அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் நேர்மைத் தகுதி, தவறான தகவல்கள் இல்லாமல் இருக்கும் தரம் மற்றும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் தத்துவங்களுக்கு (GAAP) இணங்கியுள்ள தன்மை ஆகியவற்றை உத்தரவாதமளிக்க CPAக்கள் சான்றொப்பமிடுகின்றனர். CPAக்கள் பெரு நிறுவனங்களாலும் பணியமர்த்தப்படுகின்றனர்— இது "தனியார் துறை" என்று அழைக்கப்படுகிறது—நிதித்துறையின் தலைமை நிதி அலுவலர் (CFO) அல்லது நிதி மேலாளர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரிகளின் செயல்கள் அனைத்தும் இவர்களின் முழு வணிக அறிவுக்கும் செயல்பாடுகளுக்கும் உட்பட்டதாகும். இந்த CPAக்கள் நேரடியாக பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில்லை.

இருப்பினும், சில CPAக்கள் வணிக ஆலோசகர்களாக சேவை புரிகின்றனர், இந்த ஆலோசகர்களின் பங்கானது என்ரான் விவகாரத்திற்கு பின்னர் நிலவிய பெருநிறுவன சூழலின் தொடர்ச்சியாக அதீத ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இதன் விளைவாக கணக்கியல் நிறுவனங்கள் பல தங்கள் ஆலோசனைப் பிரிவுகளை விற்க நேர்ந்தது. அப்போதிலிருந்து இந்தப் போக்கு மாறியது. தணிக்கைச் செயல்களின் போது, CPAக்கள் (உண்மையிலும் தோற்றத்திலும்) தாங்கள் சான்றொப்பமிடல் (தணிக்கை மற்றும் மறுஆய்வு) செயலில் ஈடுபட்டுள்ள நிறுவனத்திலிருந்து தனிச்சார்புடையவர்களாக இருக்க வேண்டும் என தொழில்முறை தரநிலைகள் மற்றும் மைய மற்றும் மாகாண சட்டங்கள் நிர்ப்பந்திக்கின்றன. இருப்பினும், ஆலோசகர்களாகப் பணிபுரியும் தனிநபர் CPAக்கள் தணிக்கையாளர்களாகப் பணிபுரிவதில்லை அல்லது நேர்மாறாகவும் இருப்பதில்லை.

வருமான வரியாக்கத் தொழில்துறைக்கு உள்ளேயும் கூட CPAக்களுக்கு தனியிடம் உள்ளது. பல சிறியது முதல் நடுத்தர அளவு வரையிலான நிறுவனங்கள் வரியாக்கம் மற்றும் தணிக்கை ஆகிய இரு துறைப் பிரிவுகளையும் கொண்டுள்ளன.

சேவைகளை நேரடியாக பொதுமக்களுக்கு வழங்குவதானாலும், நிறுவனங்கள் அல்லது பெருநிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டு வழங்கினாலும், CPAக்கள் பின்வருவன உட்பட நிதியியலின் எந்தத் துறையிலும் நடைமுறையில் இயங்க முடியும்:

  • உத்தரவாதம் மற்றும் சான்றொப்பமிடல் சேவைகள்
  • பெருநிறுவன நிதி (ஒன்றாக்குதல் & கையகப்படுத்தல், தொடக்க பொதுப் பங்கு வழங்கல்கள், பங்கு & கடன் வழங்குதல்கள்)
  • பெருநிறுவன ஆளுகை
  • சொத்துத் திட்டமிடல்
  • நிதியியல் கணக்கியல்
  • நிதியியல் பகுப்பாய்வு
  • நிதியியல் திட்டமிடல்
  • சட்டவியல் கணக்கியல் (நிதி மோசடிகளை தடுத்தல், கண்டுபிடித்தல் மற்றும் விசாரணை செய்தல்)
  • வருமான வரி
  • தகவல் தொழில்நுட்பம், குறிப்பாக கணக்கியல் மற்றும் தணிக்கையியலில் பயன்படுத்தப்படுவது
  • மேலாண்மை ஆலோசனை மற்றும் செயல்திறன் மேலாண்மை
  • வரியாக்கம் மற்றும் திட்டமிடல்
  • துணிவு மிக்க ஊக வணிக மூலதனம்

சில CPAக்கள் பொதுபடையாளர்களாக இருந்து பல்வேறு சேவைகளை வழங்குகின்றனர் (குறிப்பாக சிறு செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள்) ஆனால் பல CPAக்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் சிறப்பு நிபுணத்துவம் பெற்று செயல்படுகின்றனர், அவர்கள் மேலே பட்டியலிடப்பட்ட அனைத்து சேவைகளையும் வழங்குவதில்லை.

CPA தேர்வு

தொகு

அமெரிக்க ஒன்றியத்தில் CPAயாக ஆவதற்கு, பங்கேற்பவர்கள் சீரான சான்றளிக்கப்பட்ட பொது கணக்கியல் தேர்வில் (சீரான CPA தேர்வு) பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும், அது சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கியலாளர்களின் அமெரிக்க நிறுவனத்தால் அமைக்கப்பட்டு கணக்கியலின் மாகாண மன்றங்களின் தேசிய சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. CPA பதவியை அமைத்த முதல் சட்டம் நியூ யார்க்கில் 1896 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி அன்று பிறப்பிக்கப்பட்டது.[3]

சீரான CPA தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி தனிப்பட்ட கணக்கியலின் மாகாண மன்றங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. கணக்கியல் மற்றும் வணிக நிர்வாகத்தில் குறைந்தபட்ச தர மதிப்பீட்டுடன் பெறப்பட்ட அமெரிக்க இளங்களைப் பட்டத்துடன் கூடுதல் 1 ஆண்டு கல்வியும் இதற்கான பொதுவான தகுதியாகும். 5 ஆண்டு படிப்பான இதற்கு தகுதியாக "150 மணிநேர விதி" என அழைக்கப்படுகிறது, மேலும் பெரும்பாலான மாகாண மன்றங்களால் பின்பற்றப்பட்டுள்ளது, இருப்பினும் சில விலக்குகளும் உள்ளன (எ.கா.கலிஃபோர்னியா). இந்தத் தேவையானது 150 மணி நேரக் கல்வியானது அவசியமாக்கப்பட வேண்டும் என்ற விதியை 45 மாகாணங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

கணக்கியலுக்கான கொலராடோ மாகாண வாரியமானது, தகுதியான சட்ட வரம்புகளிலுள்ள பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்கியலாளர்கள் (ACCA) மற்றும் பட்டயக் கணக்கியலாளர்களை CPA தேர்வில் ஒரு கொலரோடோ தேர்வு எழுதுபவராக பங்கேற்க அனுமதிக்கிறது.

அமெரிக்க ஒன்றியத்தில் CPAக்களாக விரும்பும் சில குறிப்பிட்ட வெளிநாட்டு தகுதி பெற்ற கணக்கியலாளர்கள், CPA தேர்வுக்கு ஒரு மாற்றாக சர்வதேச தகுதித் தேர்வில் பங்குபெறத் தகுதியுடையவர்களாவர்.

சீரான CPA தேர்வானது ஒப்பந்தங்கள் மற்றும் முகமைகளின் சட்டம் மற்றும் போன்ற மாகாண சட்டங்களின் பொது கோட்பாடுகளையும், அதே போல சில மைய சட்டங்களையும் சோதிக்கின்றன, (கேள்விகள் எந்த குறிப்பிட்ட மாகாணத்தைச் சார்ந்தும் இருப்பதில்லை).[4]

பிற உரிமம் மற்றும் சான்றளிப்புத் தேவைகள்

தொகு

CPA தேர்வானது சீரானது என்றாலும், உரிமம் மற்றும் சான்றளிப்புத் தேவைகள், ஒவ்வொரு மாகாணத்தின் சட்டங்களால் தனித்தனியாகவே செயல்படுத்தப்படுகின்றன என்பதால், ஒவ்வொரு மாகாணத்திற்கும் அது வேறுபடுகிறது.

CPA தகுதிக்கான மாகாணத் தேவைகள் மூன்று Eக்கள் —கல்வி(Education), தேர்வு(Examination) மற்றும் அனுபவம்(Experience) என்று சுருக்கமாக அழைக்கப்படலாம். சீரான CPA தேர்வில் பங்கேற்பதற்கான தகுதியின் ஒரு பகுதியாக, கல்வித் தேவையானது கட்டாயமாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும், மேலும் சீரான CPA தேர்வே, தேர்வின் அங்கமாகவும் விளங்குகிறது.

இரு நிலை மாகாணங்கள்

தொகு

சில மாகாணங்களில் இரு நிலை முறையைக் கொண்டுள்ளன, இதன் படி, ஒருவர் முதலில் CPA ஆக சான்றளிக்கப்படுவார்—வழக்கமாக CPA தேர்வில் தேர்ச்சி பெற்றே சான்றளிக்கப்படுவார். அந்த நபர் குறிப்பிட்ட அளவு பணியனுபவம் பெற்றப் பின்னர் உரிமம் வழங்கப்படத் தகுதியானவராவார். பிற மாகாணங்கள் ஒற்றை நிலை முறையைக் கொண்டுள்ளன, அதன் படி, ஒரு நபர் CPA தேர்வில் தேர்ச்சியும் தேவையான பணியனுபவக் காலமும் பெற்றிருந்தால் ஒரே நேரத்தில் சான்றளிக்கப்பட்டு உரிமம் பெறுவார்.

இரு நிலை முறையைப் பின்பற்றும் மாகாணங்களில் அலபாமா, ஃப்ளோரிடா, இல்லினாய்ஸ், மாண்டேனா மற்றும் நெப்ராஸ்கா ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இரு நிலை முறை கொண்ட மாகாணங்கள் சிறிது சிறிதாக ஒரு நிலை முறைக்கு மாறி வரும் போக்கு காணப்படுகிறது. 2002 ஆம் ஆண்டிலிருந்து, வாஷிங்டன் மற்றும் தெற்கு டக்கோட்டா ஆகிய மாகாண மன்றங்கள் CPA "சான்றிதழ்களை" வழங்குவதை நிறுத்திவிட்டன, அதற்கு பதிலாக CPA "உரிமங்களை" வழங்கின, மேலும் இல்லினாய்ஸ் மாகாணம் 2010 ஆம் ஆண்டில் இதனைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளது.[5]

பல மாகாணங்கள் இரு நிலை முறையைப் பின்பற்றுபவை, ஓஹியோ போன்றவற்றில் CPA சான்றிதழ் பெற பணியனுபவம் அவசியமாகும்.

பணியனுபவத் தேவை

தொகு

பணி அனுபவத்தில் அடங்கியுள்ள பகுதி ஒவ்வொரு மாகாணத்திற்கும் வேறுபடுகிறது:

  • இரு நிலை முறையைப் பின்பற்றும் மாகாணங்களில் பொதுவாக, CPA சான்றிதழுக்கு பணியனுபவம் தேவைப்படுவதில்லை (செயல்படுத்துவதற்கான உரிமத்திற்கு அது அவசியம்).
  • கொலராடோ மற்றும் மாசாசூசெட்ஸ் போன்ற சில மாகாணங்கள் சீரான CPA தேர்வில் பங்கேற்பதற்கான மாகாண அளவில் தேவைப்படும் கல்வித் தகுதியுடன் ஒப்பிடுகையில் அதிகமான கல்வித் தகுதி உடையவர்களுக்கு பணியனுபவம் என்னும் தேவையைத் தள்ளுபடி செய்துவிடுகின்றன
  • பெரும்பாலான மாகாணங்கள் பொதுக் கணக்கியலில் இயல்பாகச் செயல்படபணியனுபவத்தை முக்கியமாக இன்னும் கருதுகின்றன. இருப்பினும், ஓரேகான், விர்ஜினியா, ஜியார்ஜியா மற்றும் கெண்ட்டக்கீ உட்பட பல மாகாணங்கள் கணக்கியல் துறையில் அனுபவத்தை அவசியமான அம்சமாக ஏற்றுக்கொள்கின்றன, இவ்வாறு ஏற்றுக்கொள்ளும் மாகாணங்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. இதனால் பலர் ஒரு பெரு நிறுவனத்தின் நிதித் துறை செயல்பாடுகளில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அதே வேளையில் CPA பதவியையும் பெற முடிகிறது.
  • பெரும்பாலான மாகாணங்களில் பணியனுபவமானது உரிமம் பெற்ற CPA ஒருவரால் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இது அமெரிக்காவிற்கு வெளியிலிருந்து வரும் விண்ணப்பதாரர்களுக்கு சிரமமாக உள்ளது. இருப்பினும், கொலராடோ மற்றும் ஓரேகான் போன்ற சில மாகாணங்கள் பணியனுபவத்தை ஒரு பட்டயக் கணக்கர் உறுதிப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்கின்றன.

நன்னெறி

தொகு

40 ற்கும் மேற்பட்ட மாகாணங்களில் இப்போது விண்ணப்பதாரர்கள் CPA நிலையை அடைவதற்கு நன்னெறியில் ஒரு சிறப்புத் தேர்வினைப் பூர்த்தி செய்ய வேண்டும், இது CPA பதவியை அடைவதற்குத் தேவையானவற்றில் நான்காவது E என விளங்குகிறது. இவற்றில் பெரும்பாலான மாகாணங்கள் CPAக்களுக்கான தொழில் தர்மங்கள் (AICPA) சுயக் கல்வி என்னும் CPE படிப்பை ஏற்றுக்கொள்கின்றன, இருப்பினும் சில மாகாணங்கள் (குறிப்பாக கலிஃபோர்னியா) அவற்றுக்கென சிறப்பான படிப்புகளை அல்லது வேறுபட்டத் தேவைகளைக் கொண்டுள்ளன.

தொடர் தொழில்முறைக் கல்வி (CPE)

தொகு

CPAக்கள் அவர்களின் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள தொடர் கல்விப் படிப்புகளைப் படிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கான தேவைகள் மாகாணத்தைப் பொறுத்து வேறுபடுகின்றன, ஆனால் பெரும்பாலானவற்றில் ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் 120 மணிநேர CPE படிப்பு அவசியமாகிறது, மேலும் இதில் ஒவ்வொரு ஆண்டிற்கும் குறைந்தபட்சம் 20 மணிநேர படிப்பு காலம் அவசியமாகும். இந்தத் தேவைகளை நேரடி ஆய்வரங்குகள், வலைவீடியோ ஆய்வரங்குகள் அல்லது சுயக்கல்வி (உரைநூல்கள், வீடியோக்கள், ஆன்லைன் படிப்புகள், தரங்களைப் பெறத் தேவையான தேர்வைக் கொண்டுள்ள அனைத்து கல்வி முறைகளும்) ஆகியவற்றில் பங்கேற்பதன் மூலம் பூர்த்தி செய்யலாம். CPE தேவையின் பகுதியாக பெரும்பாலான மாகாணங்களில் அவர்களின் CPAக்கள் ஒவ்வொரு புதுப்பிப்புக் காலத்தின் போதும் ஒரு நன்னெறிப் படிப்பை முடிப்பது அவசியமாகிறது. நன்னெறிப் படிப்புத் தேவையும் மாகாணங்களுக்கேற்ப வேறுபடுகிறது, ஆனால் இதன் கல்விக் காலங்கள் 2–8 மணிநேரங்கள் வரை உள்ளன.[6]

மாகாணங்களுக்கிடையேயான செயல்பயிற்சி

தொகு

ஒரு கணக்கர் தொழில்பயிற்சி செய்யும் மாகாணத்திலுள்ள எந்த சட்டப்பூர்வ தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும். "பொதுக் கணக்கியல் தொழில்பயிற்சி" மற்றும் அதே போன்ற மற்ற சொற்களுக்கும் ஒவ்வொரு மாகாணத்திலும் கொடுக்கப்படும் வரையறையும் வேறுபடுகிறது. மாகாண சட்டங்களின் கீழ், பொதுக் கணக்கியல் தொழில்பயிற்சியில், ஒருவர் CPA ஆக செயல்படும் அதே நேரத்தில் வரி அல்லது ஆலோசனை போன்று தணிக்கை அறிக்கைகளில் கையொப்பமிடல் மற்றும் அவர் வழங்கும் பிற சேவைகளின் செயல்பாடுகள் ஆகியனவும் உள்ளடங்கும்.

பெரும்பாலான மாகாணங்கள் மற்றொரு மாகாணத்தில் உரிமம் பெற்ற CPA விற்கு பரஸ்பர முறையின் அடிப்படையில் CPA பதவியை வழங்குகின்றன. குறைந்தளவு கடுமையான கல்வித் தேவை பெற்றுள்ள பிற மாகாணங்களைச் சேர்ந்த CPAக்கள் இந்த சலுகைகளால் பயனடைய முடியாது. இது பொதுமக்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்க திட்டமிடாத CPAக்களைப் பாதிக்காது. அனைத்திற்கும் மேலாக, பெரும்பாலான மாகாணங்கள் மற்ற மாகாண CPA க்கு தற்காலிக தொழில்பயிற்சிக்கான உரிமையை வழங்குகின்றன.

தொழில்பயிற்சியில் இடம் மாறும் தன்மை

தொகு

சமீபத்திய ஆண்டுகளில், CPAக்களுக்கான தொழில்பயிற்சியின் இடம் மாறும் தன்மையானது முக்கிய விவகாரமாக எழுந்துள்ளது. CPAக்களுக்கான தொழில்பயிற்சியின் இடம் மாறும் தன்மையென்பது, ஒரு மாகாணத்தில் உரிமம் பெற்ற ஒரு CPA, தனது மாகாணமல்லாத பிற மாகாணங்களில் கூடுதல் உரிமம் அல்லது அனுமதிகள் பெறும் அவசியமின்றி ஒரு வாடிக்கையாளருக்கு சேவையளிப்பதாகும்.

மின்னணு யுகத்தில் நாடுகளைக் கடந்து வணிகங்கள் செல்வதை சாத்தியப்படுத்தி அதை தினசரி நிகழ்வாக்கியுள்ள நிலையினால், உரிமம் பெற்ற CPAக்கள் பொதுமக்களின் நலன்களை பாதுகாக்காத தேவையற்ற சுமைகளின்றி, மாகாண எல்லைகளைக் கடந்து தங்கள் சேவைகளை வழங்குவதை அனுமதிக்கக்கூடிய விதத்திலான சீரான இடம் மாறும்தன்மை முறைமையைப் பின்பற்றுவது மாகாணங்களுக்கு அவசியமாகிறது.

தற்போது, ஒவ்வொரு மாகாணமும் பிற மாகாண CPAக்கள் தங்கள் மாகாணத்தில் சேவைகளை வழங்குவதற்காக, அதற்கென்று ஒரு விதி ஒழுக்கமுறைகள் மற்றும் தேவைகளைக் கொண்டுள்ளது. இதனால் செயல்திறனற்றதும் பின்பற்றுவதற்கு சிக்கலை அதிகரிக்கக்கூடியதுமான ஒட்டுபோடும் தன்மையுடையஒரு சீரற்ற முறை காணப்படுகிறது.

சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கியலாளர்களின் அமெரிக்க நிறுவனம் (AICPA) மற்றும் கணக்கியலின் மாகாண மன்றங்களின் தேசிய சங்கம் (NASBA) ஆகியவை மாகாணங்களைக் கடந்து தொழில்பயிற்சிக்கான அனுமதி பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் தற்போதுள்ள முறைமைகளைப் பகுப்பாய்வு செய்து அவை பயன் தராதவை என்ற முடிவுக்கு வந்துவிட்டன.

தற்போதுள்ள முறைமையின் இணக்கத்தன்மையும் செயல்படுத்தலும் அநேகமாக சாத்தியமற்றதே, ஏனெனில் அதில் பல சிக்கலான செயலாக்கங்களும் தேவைகள் மற்றும் கட்டணங்களில் சமமற்ற தன்மையும் காணப்படுகிறது. மாகாணங்களுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் காட்சித் தொழில்நுட்பங்களின் அதிகரிப்பு உள்ளிட்ட வணிக யதார்த்தங்களின் காரணமாகமாகாண எல்லைகளைக் கடந்து தடையற்ற தொழில்பயிற்சியை அனுமதிக்கக்கூடிய ஒரு சீரான முறைமை அவசியமாகியுள்ளது.

சீரான செயல்படுத்தலை வழங்கும் முறைமையானது நுகர்வோர்கள் தேவைக்கு சிறப்பாகப் பொருந்தும் CPAக்களிடமிருந்து சரியான நேரத்தில் தேவையான சேவைகளைப் பெற அனுமதிக்கும், அவர்கள் எங்கிருந்தாலும் அது பொருட்டாக இருக்காது, இதில் தேவையற்ற ஆவணங்களின் தாக்கல், படிவங்கள் மற்றும் அதிகரிக்கப்பட்ட செலவுகள் போன்ற பொதுமக்களின் ஆர்வத்தைப் பாதுகாக்காத எதுவும் இருக்காது.

இன்றைய வணிகமானது பெரும்பாலும் பல மாகாணங்களிலேயே அமைந்துள்ளன, மேலும் அவை பல்வேறு அதிகார வரம்புகளில் பொருந்துவதற்கான இணக்கத்தன்மைக்கான பொறுப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் CPAக்களுக்கு இந்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவைகளை வழங்க இந்த சீரான செயலாக்கம் உதவுகிறது.

சீரான கணக்கியல் சட்டத்தில் (AICPA மற்றும் NASBA இணைந்து எழுதி இயக்கிய CPA ஒழுக்கமுறைக்கான நவீன சட்டம்) சேர்க்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க அளவு சமமான தன்மையுள்ள சீரான பின்பற்றுதலானது நாட்டின் ஓட்டுநர் உரிமத்தைப் போன்றதேயான ஒரு முறைமையை உருவாக்கும், அது மாகாண மன்றங்கள் பொதுமக்களின் நலன் பாதுகாக்கும் திறனைப் பெற்றுள்ள அதே வேளையில் CPAக்களுக்கு இடம் மாறும் தன்மைக்கான உரிமையையும் வழங்கும்.

2007 ஆம் ஆண்டிற்கு முன்பு, நான்கு மாகாணங்கள் (ஓஹியோ, மிசௌரி, விர்ஜினியா மற்றும் விஸ்கான்சின்) CPAக்களுக்கான நகர்தன்மை தொடர்பான சட்டங்களைப் பின்பற்றியிருந்தன. 2007 ஆம் ஆண்டில், மேலும் ஏழு மாகாணங்கள் (டென்னிசீ, டெக்சாஸ், இல்லினாய்ஸ், இண்டியானா, மேய்ன், ரோட் தீவு மற்றும் லூசியானா) CPAக்களுக்கான தொழில்பயிற்சி இடம் மாறும்தன்மைத் தொடர்பான புதிய சட்டங்களைச் செயல்படுத்தின.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வரை மொத்தம் 39 மாகாணங்கள் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்தியிருந்தன. அவை: ஆர்க்கன்சாஸ், அரிசோனா, கொலராடோ, கன்னெக்டிக்குட், டெலவேர், ஃப்ளோரிடா, ஜியார்ஜியா, இடாஹோ, இல்லினாய்ஸ், அயோவா, இண்டியானா, கான்சஸ், கெண்ட்டக்கீ, லூசியானா, மேய்ன், மேரிலேண்ட், மிச்சிக்கன், மின்னிசௌட்டா, மிசிசிப்பி, மிசௌரி, மாண்டேனா, நெப்ராஸ்கா, நியூ ஜெர்ஸி, நியூ மெக்ஸிக்கோ, வடக்கு டக்கோட்டா, ஓஹையோ, ஒக்லஹௌமா, பென்சில்வேனியா, ரோட் தீவு, தெற்கு கரோலினா, தெற்கு டக்கோட்டா, டென்னிசீ, டெக்சாஸ், உடா, விர்ஜினியா, வாஷிங்டன், மேற்கு விர்ஜினியா, விஸ்கான்சின் மற்றும் வ்யோமிங் ஆகியனவாகும். கூடுதலாக, 8 பிற மாகாணங்களும் அவற்றுக்கு முன்பு இதே போன்ற சட்ட அமலாக்க நிலுவை கொண்டுள்ளன (அலபாமா, ஹவாய், மாசாசுசெட்ஸ், நெவேடா, நியூ ஹேம்ப்ஷைர், வடக்கு கரோலினா, ஓரேகோன் மற்றும் வெர்மோந்த்). 2009 ஆம் ஆண்டின் முடிவுக்குள், 45 மாகாணங்கள் இடம் மாறும் தன்மைத் தொடர்பான சட்டங்களை அமலாக்கிவிடும் என முன்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணைப்பு: [4] பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம்

AICPA உறுப்பினர் தகுதி

தொகு

CPA பதவியானது தனிப்பட்ட முறையில் மாகாண வாரியங்களால் வழங்கப்படுகிறது, அது சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கியலாளர்களின் அமெரிக்க நிறுவனத்தால் (AICPA) வழங்கப்படுவதில்லை. AICPA இன் உறுப்பினர் தகுதி என்பது CPAக்களுக்கு கட்டாயமில்லை, இருப்பினும் சில CPAக்கள் இதில் இணைகின்றனர். AICPA இன் முழு உறுப்பினராவதற்கு, விண்ணப்பதாரர் ஐம்பத்தைந்து அமெரிக்க மாகாண/பிரதேச கணக்கியலுக்கான வாரியங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வழங்கப்பட்ட, செல்லக்கூடிய CPA சான்றிதழ் அல்லது உரிமம் கொண்டிருக்க வேண்டும்; சில கூடுதல் தகுதித் தேவைகளும் பொருந்தலாம்.

மாகாண CPA சங்கத்தின் உறுப்பினர் தகுதி

தொகு

CPAக்கள் அவர்களது சொந்த மாகாண சங்கம் அல்லது சமூகத்திலும் உறுப்பினராக இருக்கத் தேர்வு செய்துகொள்ளலாம் (இதுவும் விருப்பத்திற்குட்பட்டதாகும்). ஒரு மாகாண CPA சங்கத்தில் உறுப்பினராக இருப்பதால், தொடர் கல்வித் தரங்களுக்கு தகுதித் தன்மை வழங்கக்கூடிய, ஆய்வரங்குகளிலான அதிக தள்ளுபடி முதல் சொந்த மாகாண வரி மற்றும் நிதியியல் திட்டமிடலைப் பாதிக்கக்கூடிய விவகாரங்களைக் கண்காணித்தல் மற்றும் அவற்றைப் பற்றி விவாதித்தல் ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் மற்றும் தொழில்முறை நபர்களின் நலனைப் பாதுகாப்பது வரையிலான பல நன்மைகள் கிடைக்கின்றன.

மாகாண CPA சமூகத்தின் உறுப்பினர் தகுதி கொண்ட CPAக்கள் (மாகாண ஒழுங்குபடுத்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்ட நெறிமுறைகளுடன் கூடுதலாக) தொழில்முறை நன்னெறி நடத்தை நெறிகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது, மேலும் இது ஒரு CPA ஆனவர், இரகசியமான தனிப்பட்ட மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களைக் கையாள நம்பகமானவரும், நன்னெறி பின்பற்றும் சட்டப்பூர்வ வணிக தொழில்முறை நபருமாவார் என வாடிகையாளர்களுக்கு உறுதியளிக்கிறது. மாகாண CPA சங்கங்களும் சமூகத்திற்கு CPA தொழில்முறை வல்லுநர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் வளங்களை வழங்கி உதவுகின்றன, மேலும் மாணவர்கள், வணிக தொழில்முறை நபர்கள் மற்றும் அதிக அளவிலான பொது மக்களிடமிருந்து விசாரணைகளுக்கும் தகவல்கள் வழங்குகின்றன.

CPAக்களுக்கு அவர்கள் வசிக்கும் அல்லது உரிமம் பெற்ற மாகாணத்திலுள்ள CPA சமூகத்தில் மட்டுமே உறுப்பினராக வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. மாகாண வாரியங்களுக்கு அருகில் வசிக்கும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களில் CPA பதவி பெற்றுள்ள பல CPAக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாண CPA சமூகத்தில் உறுப்பினராகலாம்.

சர்வதேச சூழல்

தொகு

அமெரிக்காவிற்கு வெளியிலிருந்து பல நபர்கள் சீரான CPA தேர்வு அல்லது சர்வதேச தகுதித் தேர்வில் (IQEX) பங்கு பெற்று அமெரிக்க CPA பதவியைப் பெறுகின்றனர். அமெரிக்க கணக்கியல் துறையின் அளவு மற்றும் அமெரிக்க கணக்கியல் விதிகளின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணத்தால், பல நாடுகளிலுள்ளவர்களும் தங்கள் நாட்டின் தகுதிக்கு பதிலாக அல்லது அதனுடன் கூடுதல் தகுதியாக அமெரிக்காவின் CPA பதவியைப் பெற விரும்புகின்றனர்.

சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர் என்ற பதவியானது பல நாடுகளில் பொதுக் கணக்கியல் பதவியாகவும் CPA பதவிக்கு தொடர்பில்லாததாகவும் இருக்கிறது. பின்வருவன இந்த நாடுகளில் அடங்கும்:

மேலும் காண்க

தொகு
  • கணக்கர்
  • பட்டயக் கணக்கர்
  • சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்கர் (ACCA)
  • சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர் (கனடா)
  • சான்றளிக்கப்பட்ட மேலாண்மைக் கணக்கர்
  • சான்றளிக்கப்பட்ட செயல்பயிற்சி கணக்கர் (ஆஸ்திரேலியா)

குறிப்புகள்

தொகு
  1. இரு நிலை முறையைப் பின்பற்றும் மாகாணங்கள் என்பதையும் காண்க.
  2. எடுத்துக்காட்டுக்கு டெக்சாஸ் மாகாண சட்டம் ஒன்று இவ்வாறு வரையறுக்கிறது: "இந்தப் பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்ட படி சான்றிதழைப் பெற்றிருக்காதபட்சத்தில், ஒரு நபர் சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர் எனக் குறிப்பிடும் வகையில் 'சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர்,' என்ற பதவி அல்லது 'CPA' அல்லது பிற பதவித் தலைப்பு அல்லது பதவி, சொல், எழுத்து, சுருக்கம், கையொப்பம், அட்டை அல்லது சாதனம் ஆகிய எதனையும் பயன்படுத்தக்கூடாது." உரை. ஆக்கப். நெறி பிரிவு. 901.451(a).
  3. ஃப்ளெஷர், டி.எல்., பெர்விட்ஸ், ஜி.ஜெ. & ஃப்ளெஷர், டி.கெ.,ப்ரொஃபைலிங் த நியூ இண்டஸ்ட்ரியல் ப்ரொஃபஷனல்ஸ்: த ஃபஸ்ட் CPAஸ் ஆஃப் 1896-97 (பிஸினஸ் & எக்கனாமிக் ஹிஸ்டரி, தொகுதி 25, 1996)[1]
  4. பொதுவாகக் காண்க யூனிஃபார்ம் CPA எக்சாமினேஷன்: எக்சாமினேஷன் கண்டெண்ட் ஸ்பெசிஃபிகேஷன்ஸ் , அமெரிக்கன் இன்ஸ்ட். ஆஃப் பப்ளிக் அக்கௌண்ட்டண்ட்ஸ், ப. 11-12 (orig. வெளியிடப்பட்டது - ஜூன் 14, 2002; குறிப்புகள் புதுப்பிக்கப்பட்டது - அக்டோபர் 19, 2005), முகவரி: [2] பரணிடப்பட்டது 2009-03-20 at the வந்தவழி இயந்திரம்
  5. இல்லினாய்ஸ் ட்ரான்சிஷன்ஸ் டு ஒன்-டையர் லைசென்சிங் ஸ்டேட் இன் 2010 (இல்லினாய்ஸ் CPA சொசைட்டி) [3]
  6. www.mypescpe.com, ஜூன் 11, 2009 அன்று அணுகப்பட்டது.