சான்ஹாய் கணவாய்

சான்ஹாய் கணவாய் அல்லது சான்ஹைகுவான் (Shanhai Pass or Shanhaiguan) என்பது சீனப் பெருஞ் சுவரில் உள்ள முக்கிய கணவாய்களில் ஒன்றாகும். இது ஏபெய் மாகாணத்தின்கின்குவாங்டாவோவின் சான்ஹைகுவான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1961 ஆம் ஆண்டில், இந்தக் கணவாய் சீன மக்கள் குடியரசின் அரச மன்றத்தால் தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட முக்கிய வரலாற்று மற்றும் கலாச்சார தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. [1] மேலும் இது, 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக பெருஞ்சுவரின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்டது. [2]

சான்ஹைகுவானின் பிதான வாயிலில் "பரலோகத்தின் கீழ் முதல் கணவாய்" எனப் பொறிக்கப்பட்டிருக்கும் தகடு

இந்தக் கணவாய் மிங் வம்சத்தின் பெருஞ்சுவரின் கிழக்கு முனையத்தில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். பெருஞ்சுவர் போஹாய் கடலைச் சந்திக்கும் இடத்திற்கு " பழைய டிராகனின் தலை " என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. [3] இந்தக் கணவாய் கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் (190 மைல்) பெய்ஜிங்கின் கிழக்கேயும், சென்யாங் அதிவேக நெடுஞ்சாலை வழியாக வடகிழக்கு நோக்கி சென்யாங் வரை இணைக்கப்பட்டுள்ளது .

சீன வரலாறு முழுவதும், கணவாயானது, கிதான், சுரசன், மஞ்சு,மஞ்சூரியா போன்ற பகுதியிலிருந்து வந்த இனக்குழுக்களுக்கு எதிரான ஒரு முன்னணி தற்காப்பு இடமாக செயல்பட்டது. இந்தக் கணவாய் பெருஞ்சுவரின் கிழக்கு முனையின் தொடக்க புள்ளியாகும். மேலும் இது எல்லைப்புறத்தை பாதுகாப்பதற்கான முதல் தடையாகும். எனவே இது "பரலோகத்தின் கீழ் முதல் கணவாய்" என்று அழைக்கப்படுகிறது. [4]

வரலாறு

தொகு

சிங் அரசர்கள் காலத்தில், சென்யாங் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையில் அமைந்துள்ள இந்தக் கணவாய், "தலைநகரங்களுக்கான திறவுகோல்" என்று குறிப்பிடப்பட்டது. குடியரசுக் கட்சியின் காலத்திலும், எட்டு நாடுகளின் கூட்டணி மற்றும் இரண்டாம் உலகப் போரின்போதும், இந்தக் கணவாய் பல மோதல்களைக் கண்டது.

சூலை 1900 இல், 15,000 சப்பானிய துருப்புக்கள் இங்கு தரையிறங்கினர். குத்துச்சண்டை வீரர்கள் முற்றுகையிட்டதை விடுவிப்பதற்காக பீக்கிங்கில் அணிவகுத்துச் சென்றனர். சில சீன துருப்புக்கள் இருந்ததால் இப்பகுதியில் தரையிறங்கும் முன் தேவையற்ற ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. [5] சப்பானிய மற்றும் பிரெஞ்சு துருப்புக்களுக்கு இடையில் குடிபோதையில் ஏற்பட்ட மோதல்களின்போது, நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் ஏற்பட்டன. சண்டையில் மூன்று பிரெஞ்சு மற்றும் ஏழு சப்பானிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பிரெஞ்சு மற்றும் 12 சப்பானியர்கள் காயமடைந்தனர்.

நவம்பர் 1945 இல், வடகிழக்கு மக்கள் விடுதலை இராணுவம் தெற்கிலிருந்து தாக்குதல் நடத்தும் கோமிண்டாங் படைகளுக்கு எதிராக சான்ஹைகுவானை நடத்த முயன்றது. சியாங் கை செஇக்கை மஞ்சூரியாவிலிருந்து வெளியேற்ற அவர்கள் முயன்றனர். 10,000 பேர் கொண்ட மக்கள விடுதலை இராணுவப் படைகள் ஆயுதம் ஏந்தியிருந்தன. அந்த நிலையை பாதுகாக்க அவருடைய படைகள் பின்வாங்கின.

இந்தக் கணவாய், நான்கு கிலோமீட்டர் (2.5 மைல்) சுற்றளவில் ஒரு சதுரமாக கட்டப்பட்டுள்ளது. ஏழு மீட்டர் (23 அடி) தடிமன் கொண்ட இதன் சுவர்கள் 14 மீட்டர் (46 அடி) உயரத்தை கொண்டுள்ளது. கிழக்கு, தெற்கு மற்றும் வடக்குப் பக்கங்கள் ஆழமான, அகலமான அகழியால் சூழப்பட்டுள்ளன. கணவாயின் நடுவில் ஒரு உயரமான மணி கோபுரம் நிற்கிறது.

இதன் நான்கு பக்கங்களும் மனிதர்களின் பெய்ரைக் கொண்டுள்ளன. கிழக்கு சுவர் ஜெண்டோங் வாயில் எனவும், மேற்கில் யாங்கன் வாயில் எனவும், தெற்கில் வாங்யாங் வாயில் எனவும் மற்றும் வடக்கில் வெயுவான் வாயில் எனவும் அழைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக பழுதுபார்ப்பு இல்லாததால், ஜென்டோங் வாயில் மட்டுமே இன்றும் எஞ்சியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. https://books.google.com/books?id=Jx9KAQAAIAAJ. {{cite book}}: Missing or empty |title= (help)
  2. . 25 January 2018 https://books.google.com/books?id=RuJIDwAAQBAJ&pg=PP1. {{cite book}}: Missing or empty |title= (help)
  3. "Old Dragon's Head—where the Great Wall of China meets the sea". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Sep 8, 2014.
  4. Editorial Department of Zhonghua Book Company (9 April 2018). Chinese Ancient Culture Common Sense for Elementary School Students. Zhonghua Book Company. pp. 88-. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-101-13020-1.
  5. Straits Times, 18 July 1900, p.2

நூலியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்ஹாய்_கணவாய்&oldid=3356945" இலிருந்து மீள்விக்கப்பட்டது