சீன மக்கள் குடியரசின் அரச மன்றம்
சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் என்பது சீன அரசின் முதன்மை நிர்வாக அலகு. பிரதமர் தலைமை தாங்கும் இந்த அமைப்பில் பல்வேறு அரச துறைகளைச் சார்ந்த 50 வரையான தலைமைப் பணியாளர்கள் உள்ளனர். சீன அரசியலில் சீனப் பொதுவுடமைக் கட்சி, மக்கள் விடுதலைப் படை ஆகியவற்றுடன் இணையாக இது ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.