சாபர் அகமத் நிசாமி

சாபர் அகமத் நிசாமி (Zafar Ahmad Nizami, 25 நவம்பர் 1939 — 23 ஏப்ரல் 2009) ஓர் இந்திய எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியர் ஆவார். இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பேராசிரியராக 30 வருடங்கள் பணி செய்தார். மேலும் மெமாரன்-இ-ஜாமியா, இந்துஸ்தான் கே சந்த் சியாசி ரஹ்னுமா, மௌலானா ஆசாத் கி கஹானி மற்றும் தாரிக்-இ-ஹிந்த்: அஹ்-இ-ஜதீத் ஆகிய புத்தங்களை எழுதியுள்ளார்.[1]

பேராசிரியர்
சாபர் அகமத் நிசாமி
பிறப்பு25 நவம்பர் 1939
பிரதாப்கர், இராசத்தான்
இறப்பு23 ஏப்ரல் 2009(2009-04-23) (அகவை 69)
தில்லி
தேசியம்இந்தியா
பணிபேராசிரியர்
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்விக்ரம் பல்கலைக்கழகம், உஜ்ஜைன்
கல்விப் பணி
Main interestsஅரசறிவியல், வரலாறு

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

நிசாமி 1933, நவம்பர் 25 அன்று இராஜஸ்தானின் பிரதாப்கர் என்ற இடத்தில் பிறந்தார். இவர் உஜ்ஜைனில் உள்ள விக்ரம் பல்கலைகழகத்தில் ஆங்கில மொழியில் முதுகலைப் பட்டமும் (1959), அரசறிவியலில் முதுகலைப் பட்டமும் (161) பெற்றுள்ளார்.[2] இவர் ஜோரா, ரத்லம், சேஹோர், தடியா கல்லூரிகளில் விரிவுரையாளராக பணி செய்தார். பிறகு ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழகத்தில் அரசறிவியலில் துறையில் பேராசிரியராக பணி செய்தார். பின்பு அந்த துறையின் தலைவராக பொறுப்பேற்றார்.

மேலும் இவர் டெல்லியில் உள்ள குறிக்கோள் படிப்புக்கான ஆய்வு மையத்தின் இயக்குனராகவும் பணி செய்துள்ளார்.2001 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வுப் பெற்றார். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று டெல்லியில் இறந்தார்.[1]

இலக்கியப் படைப்புகள்

தொகு

நிசாமியின் படைப்புகள் பின்வருமாறு: [3] [4]

மரபு

தொகு

பின்வரும் ஆராய்ச்சி ஆய்வுகள் நிசாமியால் வழிநடத்தப்படுகின்றன:

  • வெகுஜன மக்களை அணிதிரட்டலின் காந்திய நுட்பம் - மதன் மோகன் வர்மாவால். [5]
  • இஸ்லாமிய இராஜதந்திரம் - முகமது அலி நசீர் ஹோமூத். [6]
  • சுமன் சவுத்ரி எழுதிய ஆசியான் எண்ணிக்கையுடன் இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய ஆய்வு . [7]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Indian Muslims' apex body deliberates on national and international issues". The Milli Gazette. 14 June 2009. http://www.milligazette.com/IndMusStat/2009a/0991_Indian_Muslims_on_national_international_issues.htm. பார்த்த நாள்: 22 May 2020. 
  2. "Profile of Prof. Zafar Ahmad Nizami". Urdu Youth Forum. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  3. "Nizami, Zafar Ahmad". Library of Congress. அமெரிக்கக் காங்கிரசு நூலகம். பார்க்கப்பட்ட நாள் 22 May 2020.
  4. "Nizami, Zafar Ahmad". worldcat.org. WorldCat. பார்க்கப்பட்ட நாள் 22 May 2020.
  5. "Gandhis technique of mass mobilization". shodhganga. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, Shodhganga. பார்க்கப்பட்ட நாள் 22 May 2020.
  6. "Diplomacy in Islam". shodhganga. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, Shodhganga. பார்க்கப்பட்ட நாள் 22 May 2020.
  7. "A study of Indias political and economic co operation with Asean count". shodhganga. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, Shodhganga. பார்க்கப்பட்ட நாள் 22 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபர்_அகமத்_நிசாமி&oldid=3852786" இலிருந்து மீள்விக்கப்பட்டது