சாபர் இபின் அய்யான்
கெபெர் என்றும் அறியப்படும் அபு மூசா சாபர் இபின் அய்யான் (Abu Mūsā Jābir ibn Hayyān) என்பவர், வேதியியலாளரும், வானியலாளரும், சோதிடரும், பொறியாளரும், புவியியலாளரும், மெய்யியலாளரும், இயற்பியலாளரும், மருந்தியலாளரும், மருத்துவருமான ஒரு பல்துறை அறிஞர். துஸ் என்னுமிடத்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்ற இவர் பின்னர் கூஃபாவுக்குச் சென்றார். சில வேளைகளில் இவர் தொடக்ககால வேதியியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.[4][5][6]
சாபர் இபின் அய்யான் | |
---|---|
"கெபெரின்" 15ம்-நூற்றாண்டு ஐரோப்பிய உருவப்படம், கொடிசி ஆசுபர்ணாமியானி 1166, லோரென்சியான மருத்துவ நூலகம், புளோரன்சு | |
பிறப்பு | அபு மூசா ஜாபிர் இப்னு ஹைய்யான் c. கிபி 721 துஸ், பாரசீகம், உமய்யாட் கலீபகம்[1] |
இறப்பு | c. கிபி 815 |
இனம் | அராபியர்[2][3] அல்லது பாரசீகர். |
காலம் | இசுலாமிய பொற்காலம் |
முதன்மை ஆர்வம் | இரசவாதமும் வேதியியலும், வானியல், சோதிடம், மருத்துவமும் மருந்தியலும், மெய்யியல், இயற்பியல், வள்ளல் |
ஆக்கங்கள் | கித்தாப் அல்-கிம்யா, கித்தாப் அல்-சாபீன், இராச்சிய நூல், Book of the Balances , Book of Eastern Mercury, etc. |
செல்வாக்கு செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
கிபி 10 ஆம் நூற்றாண்டிலேயே இவரது அடையாளம் குறித்தும், இவரது ஆக்கங்கள் எவை என்பது குறித்தும் இசுலாமிய உலகில் கருத்து முரண்பாடுகள் நிலவின.[7] கிறித்தவ மேற்குலகில் இவரது பெயர் கெபெர் என இலத்தீனாக்கம் பெற்றிருந்ததுடன், 13 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் பொதுவாக போலி கெபெர் என அழைக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாதவர் இரசவாதம், உலோகவியல் என்பன சார்ந்த ஆக்கங்களை கெபெர் என்னும் பெயரில் எழுதியிருந்தார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Tus, V. Minorsky, The Encyclopaedia of Islam, Vol. X, ed. P.J. Bearman, T. Bianquis, C.E. Bosworth, E. van Donzel and W.P. Heinrichs, (Brill, 2000), 741.
- ↑ Kraus, P. (1962). "Djābir B. Ḥayyān". Encyclopaedia of Islam (2nd) 2. Brill Academic Publishers. 357–359. “As for Djābir's historic personality, Holmyard has suggested that his father was "a certain Azdī called Hayyan, druggist of Kufa... mentioned... in connection with the political machinations that were used by many people, in the eighth century, finally resulted in the overthrow of the Umayyad dynasty.”
- ↑ Holmyard, Eric John, "Introduction" to The Works of Geber, translated by Richard Russell (London: Dent, 1928), p. vii: "Abu Musa Jabir ibn Hayyan, generally known merely as Jabir, was the son of a druggist belonging to the famous South Arabian tribe of Al-Azd. Members of this tribe had settled at the town of Kufa, in Iraq, shortly after the Muhammadan conquest in the seventh century A.D., and it was in Kufa that Hayyan the druggist lived."
- ↑ Derewenda, Zygmunt S. (2007), "On wine, chirality and crystallography", Acta Crystallographica A, 64: 246–258 [247], எண்ணிம ஆவணச் சுட்டி:10.1107/s0108767307054293
- ↑ John Warren (2005). "War and the Cultural Heritage of Iraq: a sadly mismanaged affair", Third World Quarterly, Volume 26, Issue 4 & 5, p. 815-830.
- ↑ Dr. A. Zahoor (1997). JABIR IBN HAIYAN (Geber) பரணிடப்பட்டது 2008-06-30 at the வந்தவழி இயந்திரம். University of Indonesia.
- ↑ Brabner, Tod (2005). "Jabir ibn Hayyam (Geber)". In Thomas F. Glick; Steven John Livesey; Faith Wallis (eds.). Medieval Science, Technology, and Medicine: An Encyclopedia. Psychology Press. pp. 279–281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-96930-7.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - ↑ Principe, Lawrence (2013). "2". The Secrets of Alchemy. Chicago: University of Chicago. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-68295-1.