சாமுண்டா தேவி கோயில்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்து கோயில்

சாமுண்டா நந்திகேசுவர் தாம் என்றும் அழைக்கப்படும் சாமுண்டா தேவி கோயில் என்பது துர்க்கையின் வடிவமான சாமுண்டி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலாகும். இது வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தின் தர்மசாலா தெக்சில் பாலம்பூர் நகரத்திலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது. இது இமாச்சல பிரதேசத்தில் உள்ள மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாகவும், இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ள கோயிலாகும். இங்கு எந்த பிரார்த்தனை செய்தாலும் அது நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. [1] மிகவும் பழமையான ஆதி இமானி சாமுண்டா மூலவர் சந்நிதி, மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், யாத்ரீகர்கள் சென்றடைவது கடினம். எனவே, இந்த கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டது.

சாமுண்டா தேவி கோயில்
கோயிலின் முழுமையான முன் தோற்றம்
சாமுண்டா தேவி கோயில் is located in இமாச்சலப் பிரதேசம்
சாமுண்டா தேவி கோயில்
இமாச்சலப் பிரதேசம்-இல் உள்ள இடம்
சாமுண்டா தேவி கோயில் is located in இந்தியா
சாமுண்டா தேவி கோயில்
சாமுண்டா தேவி கோயில் (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்:Kangra
அமைவு:பதார், தரம்சாலா
ஆள்கூறுகள்:32°8′54″N 76°25′9″E / 32.14833°N 76.41917°E / 32.14833; 76.41917
கோயில் தகவல்கள்

தொன்மம் தொகு

இந்த பழமையான கோயில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கணிசமான ஆன்மீக தொன்மங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டுப்புறக் கதையின்படி, 16 ஆம் நூற்றாண்டின் அரசரும் ஒரு பூசாரியும் சாமுண்டா தேவியிடம் பிரார்த்தனை செய்து, சிலையை மிகவும் அணுகக்கூடிய இடத்திற்கு மாற்றுவதற்கு அவளது சம்மதத்தைக் கேட்டனர். பூசாரியின் கனவில் அம்மன் தோன்றி, சிலை எங்கே கிடைக்கும் என்று அவருக்குத் தெரிவித்ததாக செவிவழிக் கதை கூறுகிறது. மன்னருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது ஆட்கள் பழங்கால சிலையைக் கொண்டுவந்து தற்போது கோவில் கட்டப்பட்டுள்ள இடத்தில் நிறுவினர்.[2]

பிரபலம் தொகு

இது இந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். சாமுண்டா தேவி கோயில் பாலம்பூருக்கு வருகை தரும் மக்களுக்கு ஒரு சுற்றுலா தலமாக எப்போதும் இருந்து வருகிறது. இக்கோயில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பயணிகளை ஈர்க்கிறது, ஏனெனில் இதனுடன் நிறைய ஆன்மீக தொன்மங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் கோயிலின் பழமையும் அதன் இமாச்சலக் கட்டிடக்கலையும் காரணங்களாக உள்ளன. பாலம்பூரின் முக்கிய சுற்றுலாத்தலமான சாமுண்டா தேவி கோயிலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர, மலை நகரத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் இப்பகுதியில் உள்ள புனிதமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இதைக் கருதுகின்றனர். குறிப்பாக இதன் பல தொன்மகதைகள் மற்றும் வரலாறு காரணமாக. அதனுடன் இணைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர்வசிகளும் அண்டை மலை வாழிடங்களில் இருந்து வரும் பக்தர்களும் அம்மனை பிரார்த்தனை செய்வதற்காக இந்த கோவிலுக்கு வருகிறனர்.

ஜக்னி மாதா கோயில் என்ற சிறிய கோயில் பள்ளத்தாக்கை ஒட்டிய மலை உச்சியில் அமைந்துள்ளது. இது ஒரு குறுகிய மலைப் பாதை மூலம் அடையமுடியும். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "चैत्र नवरात्र की तैयारियों पर चामुंडा मंदिर की बैठक आज" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  2. "Popular nine Durga temples in India | famous goddess temples in India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  3. Service, Tribune News. "Govinda, wife Sunita pay obeisance at Himachal temples; see pictures" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுண்டா_தேவி_கோயில்&oldid=3823877" இலிருந்து மீள்விக்கப்பட்டது