சாம்சுல் அக்கு

இந்திய அரசியல்வாதி

சாம்சுல் அக்கு (Shamsul Hoque) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வங்காள அரசியல்வாதியான இவர் மேகாலயா சட்டப் பேரவையில் மகேந்திரகஞ்ச் தொகுதியின் தொடக்கத் தலைவராக இருந்தார்.

சாம்சுல் அக்கு
Shamsul Hoque
உறுப்பினர், மேகாலயாவின் சட்டமன்றம்
பதவியில்
1972–1978
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்மாணிக் சா தாசு
தொகுதிமகேந்திரகஞ்சு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமச்சர்சார், மகேந்திரகஞ்சு சட்டமன்றத் தொகுதி, மேகாலயா
அரசியல் கட்சிசுயேட்சை

வாழ்க்கை

தொகு

மேகாலயாவின் கரோ மலைப்பகுதியில் உள்ள மச்சர்சார் கிராமத்தில் ஒரு வங்காள இசுலாமிய குடும்பத்தில் சாம்சுல் அக்கு பிறந்தார். ஒரு சுயேச்சை வேட்பாளராக இருந்த போதிலும், இவர் மாநிலத்தின் முதல் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கெளராம் பர்மனை தோற்கடித்தார், இதனால் தென் மேற்கு கரோ இல்சு மாவட்டத்தின் மகேந்திரகஞ்ச் தொகுதியில் ஓர் இடத்தை வென்றார். சாம்சுல் அக்கின் பங்களிப்பில் மகேந்திரகஞ்ச் மின்மயமாக்கல் கோரிக்கையும் இருந்தது. [1] 1974 ஆம் ஆண்டு சூலை மாதம் 14 ஆம் தேதியன்று அன்று, எல்லைப் பாதுகாப்புப் படை மச்சர்சார் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அட்டூழியங்களைச் செய்தது. சாம்சுல் அக்கு தனது உறுப்பினர்களைப் பாதுகாக்க முயன்றார், ஆனால் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டார் மற்றும் அவர்களின் அருகிலுள்ள சோதனைச் சாவடியில் அடைக்கப்பட்டார். உள்ளூர் காவல்துறையினர் அடுத்த நாள் இவரை விடுவித்தனர். [2]

1978 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தல்களிலும் சாம்சுல் அக்கு போட்டியிட்டார். ஆனால் இரண்டு தேர்தல்களிலும் இரண்டாவது இடத்தை மட்டுமே பெற்றார். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Meghalaya Legislative Assembly Debates. Meghalaya Legislative Assembly. 1977. p. 70. 
  2. Lok Sabha Debates. 42. 1974. p. 210. https://archive.org/details/dli.bengal.10689.15569/page/n113/mode/2up. 
  3. {{cite web}}: Empty citation (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்சுல்_அக்கு&oldid=3823351" இலிருந்து மீள்விக்கப்பட்டது