சாம்பல் நிற மடவை

மீன் இனம்
சாம்பல் நிற மடவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
முகிலிபார்ம்சு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மு. செபாலசு
இருசொற் பெயரீடு
முகில் செபாலசு
லின்னேயஸ், 1758

சாம்பல் நிற மடவை (Mugil cephalus) என்பது மடவை இனத்தைச் சேர்ந்த முக்கியமான மீன் இனம் ஆகும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய கடலோர நீர்ப்பகுதிகளில் காணப்படுன்றன.[2] இவை சராசரியாக 30 முதல் 75 செ.மீ.கள் வரை வளரக்கூடியவை ஆகும். இவற்றின் உடலில் ஆறு முதல் ஏழு நேர்க்கோடுகள் வரை காணப்படும்.

விளக்கம் தொகு

சாம்பல் நிற மடவை மீனின் பின்புறம் ஆலிவ்-பச்சை நிறமாகவும், பக்கங்கள் வெள்ளி நிறமாகவும், வயிற்றுப் பகுதி வெண்மை நிறமாகவும் இருக்கும்.[2] மீனில் ஆறு முதல் ஏழு தனித்துவமான பக்கவாட்டு கிடைமட்ட கோடுகள் இருக்கலாம். உதடுகள் மெல்லியதாக இருக்கும்.[2] இந்த மடவையில் பக்கவாட்டு கோடு இல்லை. பொதுவாக இதன் நீளம் சுமார் 50 சென்டிமீட்டரும் (20 அங்குலம்), அதிகபட்ச நீளம் 100 சென்டிமீட்டரும் (39 அங்குலம்) ஆகும். இது அதிகபட்சமாக எட்டு கிலோகிராம் (18 பவுண்ட்) எடை வரை வளரும்.[3]

 

பரவல் தொகு

அத்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிசுகே விரிகுடா மற்றும் நோவா இசுகோடியா வரையும்,[1] அனைத்து கடல்களின் வெப்பமண்டல, மிதவெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலம் உள்ளிட்ட அனைத்து கடலோர நீரில் இந்த சாம்பல் நிற மடவை காணப்படும்.[2] இது 0–120 மீட்டர் (0–394 அடி) வரை ஆழத்திலும், 8–24 °C (46–75 °F) வெப்பநிலையிலும் நன்னீர், உவர்நீர் மற்றும் கடல் வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ளது.[3]

மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு தொகு

சாம்பல் நிற மடவை என்பது உலகெங்கிலும் உள்ள ஒரு முக்கியமான உணவு மீனாகும். மேலும் இவை மீன்பிடி மற்றும் வளர்ப்பு மூலம் பெறப்படுகிறது. 2012ஆம் ஆண்டில் உலகளவில் மீன்பிடித்தலில் 130,000 கிலோ மீன்வளம் மூலமும் மீன்வளர்ப்பு உற்பத்தியில் 142,000 கிலோ பெறப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Camara, K.; Carpenter, K.E.; Djiman, R. et al. (2017). "Mugil cephalus". The IUCN Red List of Threatened Species 2017: e.T135567A20682868. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T135567A20682868.en. பார்த்த நாள்: 31 October 2018. 
  2. 2.0 2.1 2.2 2.3 "{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} 2014 version. N.p.: FishBase, 2014.
  3. 3.0 3.1 Minckley, W.L. 1973. Fishes of Arizona. Arizona Game and Fish Department, Phoenix. pp. 257-258.
  4. "FAO Fisheries & Aquaculture - Species Fact Sheets - Mugil cephalus (Linnaeus, 1758)". fao.org. Archived from the original on 2015-11-05. பார்க்கப்பட்ட நாள் 2016-04-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_நிற_மடவை&oldid=3461805" இலிருந்து மீள்விக்கப்பட்டது