சாம்பல் மரப் புறா
சாம்பல் காட்டுப் புறா (Ashy wood pigeon)(கொலம்பா புல்கிரிகோலிசு) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது தென்கிழக்கு ஆசியாவின் மிதவெப்ப காடுகளில் காணப்படுகிறது.
சாம்பல் மரப் புறா Ashy wood pigeon | |
---|---|
கேதார்நாத் வனவிலங்கு சரணாலயம், சமோலி, உத்தரகாண்ட், இந்தியா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கொலம்பா
|
இனம்: | C. pulchricollis
|
இருசொற் பெயரீடு | |
Columba pulchricollis பிளைத், 1846 |
பரவல்
தொகுபூட்டான், வட இந்தியா, தெற்கு திபெத், தெற்கு சீனா, வடக்கு லாவோஸ், வடக்கு முதல் மத்திய மியான்மர், வடக்கு தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய இடங்களில் காணப்படும் சாம்பல் காட்டுப் புறா தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரந்த அளவில் காணப்படுகிறது. இதன் மொத்த எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், தைவானில் 10,000 முதல் 100,000 இனப்பெருக்க இணைகள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]
இனப்பெருக்கம்
தொகுகூடுகளில் பொதுவாக ஒரு வெள்ளை முட்டை இருக்கும், இருப்பினும் இரட்டை முட்டைகள் இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புறா தோராயமாக 21-23 நாட்களுக்கு தன் முட்டைகளை அடைகாக்கும். குஞ்சு பொரித்த 28 நாட்களில் இளம் பறவைகள் கூட்டைவிட்டு வெளியேறும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Columba pulchricollis". IUCN Red List of Threatened Species 2016: e.T22690168A93263339. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22690168A93263339.en. https://www.iucnredlist.org/species/22690168/93263339. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ 2.0 2.1 "Ashy wood pigeon". International Dove Society. Archived from the original on 11 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)