சாய்சிரோ மிசுமி

சாய்சிரோ மிசுமி (Saichiro Misumi) சப்பான் நாட்டைச் சேர்ந்த ஓர் உளவியலாளர் ஆவார். சப்பான் – இந்தியா நட்புறவு சங்கத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனராகவும் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.[1] 1916 ஆம் ஆண்டு சூன் மாதம் மிசுமி பிறந்தார்.[2] இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை ஆய்வு செய்த மிசுமி இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட வீர்ராவார், முன்னாள் இந்திய தேசிய இராணுவ அதிகாரி மற்றும் புகழ்பெற்ற இந்திய தேசியவாதியான சுபாசு சந்திரபோசுடன் நட்பு கொண்டிருந்தார்.[3][4][5] இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி 2014 செப்டம்பர் மாதம் 2 ஆம் நாள் சப்பானுக்கு உத்தியோகபூர்வமாகச் சென்றபோது மிசுமியைச் சந்தித்தார்.[3][4][5][6] இந்த சந்திப்பு இந்திய ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சகம், மிசுமியின் வாழ்க்கைக் காலத்தை ஓர் ஆவணப்படத்தின் மூலம் பதிவுசெய்யும் திட்டத்தை வகுத்துள்ளது.[7] இந்திய – சப்பான் நட்புறவுக்கு மிசுமி ஆற்றிய பணிகளுக்காக இந்திய அரசு மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்மபூசண் விருதை 2015 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி சிறப்பித்தது.[8] 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று சாய்சிரோ மிசுமி காலமானார்.[9]

சாய்சிரோ மிசுமி
Saichiro Misumi
பிறப்பு(1916-06-16)16 சூன் 1916
சப்பான்
இறப்பு23 பெப்ரவரி 2018(2018-02-23) (அகவை 101)
தோக்கியோ, சப்பான்
பணிஇரண்டாம் உலகப் போர் வீரர், ஆலோசகர்
அறியப்படுவதுஇந்தியா-ஜப்பான் உறவுகள்
விருதுகள்பத்ம பூசண்

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "JIA". JIA. 2015. பார்க்கப்பட்ட நாள் February 6, 2015.
  2. https://m.facebook.com/notes/ameya-patki/padma-bhushan-mr-saichiro-misumi-a-living-encyclopedia-on-india-japan-relations/701084946671495/
  3. 3.0 3.1 "India Today". India Today. 2 September 2014. பார்க்கப்பட்ட நாள் February 6, 2015.
  4. 4.0 4.1 "TOI". Times of India. 3 September 2014. பார்க்கப்பட்ட நாள் February 6, 2015.
  5. 5.0 5.1 "NDTV". NDTV. 2014. பார்க்கப்பட்ட நாள் February 6, 2015.
  6. "When PM Modi Met Netaji's Oldest Living Associate". YouTube video. Express News Channel. 2 September 2014. பார்க்கப்பட்ட நாள் February 6, 2015.
  7. "MEA" (PDF). Ministry of External Affairs. 2014. பார்க்கப்பட்ட நாள் February 6, 2015.
  8. "This Year's Padma Awards announced". Ministry of Home Affairs. 25 January 2015. பார்க்கப்பட்ட நாள் February 2, 2015.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்சிரோ_மிசுமி&oldid=3860746" இலிருந்து மீள்விக்கப்பட்டது