சாய் அபயங்கர்

இந்திய இசையமைப்பாளர் மற்றும் பாடகர்

சாய் அபயங்கர் (Sai Abhyankkar) சென்னையைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளரும் நிரலாளரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தானே வெளியிட்ட "கட்சி சேர" என்கிற தனியொரு அறிமுகப் பாடலின் மூலம் நன்கு அறியப்படுகிறார்.[1]

சாய் அபயங்கர்
பிறப்பு4 நவம்பர் 2004 (20 ஆண்டுகள்)
பணி
  • பாடகர்
  • இசையமைப்பாளர்
  • நிரலாளர்
செயற்பாட்டுக்
காலம்
2023– முதல்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
வெளியீட்டு நிறுவனங்கள்
  • திங் மியூசிக் இந்தியா

பெற்றோர்

தொகு

சாய் அபயங்கர் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்களான திப்பு, ஹரிணி ஆகியோரின் மகனாவார். [2]

இசை வாழ்க்கை

தொகு

2024 சனவரி 21 அன்று, சாய் 'கட்சி சேர' என்கிற தனியொரு பாடலை வெளியிட்டார். இது சமூக ஊடகத் தளங்களில் பிரபலமடைந்தது. யூடியூபில் 135 + மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்தது.[3][4] சூன் 12 அன்று, இவரது அடுத்த தனிப்பாடலான 'ஆச கூட' வெளியானது. இதற்கும் சமூக ஊடகங்களில் 150+ மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்து பிரபலமானது. இதே நாளில், பாக்யராஜ் கண்ணன் இயக்க, லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்சு என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சின் நான்காவது திரைப்படமாகும். இச்செய்தியை, நவம்பர் 4ஆம் தேதி சாயின் பிறந்தநாளை முன்னிட்டு, பென்சு திரைப்படத் தயாரிப்பாளர் முறையாக அறிவித்தார்.

இசைவரிசை

தொகு

தனிப்பாடல்கள்

தொகு
ஆண்டு பாடல். குறிப்புகள் மேற்கோள்கள்
2023 வலம் வரவேண்டும் வலம் வரவேண்டும் என்ற இசைத்தொகுப்பிலிருந்து [5]
2024 கட்சி சேர திங் மியூசிக் இந்தியா [2]
ஆச கூட [6]

திரைப்படங்கள்

தொகு
இசையமைப்பாளராக சாய் அபயங்கரின் திரைப்பட பட்டியல்
ஆண்டு படம் மொழி குறிப்புகள் மேற்கோள்கள்
அறிவிக்கப்படும் பென்சு   தமிழ் அறிமுகப் படம் [7]
அறிவிக்கப்படும் சூர்யா 45   ஏ. ஆர். ரகுமான் மாற்றப்பட்டார் [8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Grateful I've got such a reception for my first song: Sai Abhyankkar" (in en-US). The Times of India. 2024-05-08. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/grateful-ive-got-such-a-reception-for-my-first-song-sai-abhyankkar/articleshow/109122124.cms. 
  2. 2.0 2.1 Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified
  3. "Sai Abhyankkar Plans More Releases and Film Music After 'Katchi Sera' Success" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-05-08. பார்க்கப்பட்ட நாள் 2024-07-15.
  4. "Sai Abhyankkar makes a smashing debut with Katchi Sera" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-05-08. பார்க்கப்பட்ட நாள் 2024-07-15.
  5. "Valam Varavendum (Full Song) - Sai Abhyankkar, Sriram Parthasarathy", JioSaavn (in அமெரிக்க ஆங்கிலம்), 2023-08-06, பார்க்கப்பட்ட நாள் 2024-07-09
  6. Aasa Kooda from Think Indie Song: Aasa Kooda from Think Indie MP3 Tamil Song by Sai Abhyankkar Online Free on Gaana.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-07-09
  7. Sreejith Mullappilly (2024-11-03). "Sai Abhyankkar to make his debut as a composer with Lokesh Kanagaraj's Benz". Cinema Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-03.
  8. M, Narayani (2024-12-09). "Sai Abhyankkar replaces AR Rahman in RJ Balaji's Suriya 45". Cinema Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-09.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_அபயங்கர்&oldid=4164347" இலிருந்து மீள்விக்கப்பட்டது