சாரதா ஆறு (ஆந்திரா)

சாரதா ஆறு (Sarada River) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நடுத்தர அளவிலான ஆறாகும்.[1]

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபல்லியில் உள்ள சாரதா ஆற்றுப் பாலம்.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனகாபள்ளி அருகே சாரதா ஆற்றில் சூரியன் மறைவு

விளக்கம்

தொகு

சாரதா ஆற்றின் புவியியல் ஒருங்கிணைப்புகள் வடக்கு அட்சரேகை 17 25 முதல் 18 17 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 82 32 முதல் 83 06 ஆகும்.

ஆற்றுப் படுகையில் நீர்பிடிப்பு பகுதி 2,665 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலையில் 1,000 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது. சாரதா ஆறு கிழக்கு நோக்கி 122 கிலோமீட்டர் தூரம் ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.

சாரதா ஆற்றுப்படுகையானது வடக்கே நாகவள்ளி ஆறு, கோசுதானி ஆறு, கம்பீரம்கெட்டா, தெற்கில் கிழக்கு வங்காள விரிகுடாவில் மெகாட்ரிகெட்டா மற்றும் மேற்கில் கோதாவரி நதியின் மச்சகுண்ட் துணைப் படுகை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் இந்த ஆற்றுப் படுகையில் உள்ள முக்கிய நகரமாகும். எலமஞ்சிலி மற்றும் அனகாபள்ளி ஆகியவை படுகையில் உள்ள முக்கியமான நகரங்கள்.

வரலாற்று முக்கியத்துவம்

தொகு

புகழ்பெற்ற போஜ்ஜன்னகொண்டா மற்றும் லிங்கலகொண்டா பௌத்த குகை மடாலயம் அனகாபள்ளிக்கு அருகில் உள்ளது. கோகிவாடா வன நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கோட்ரூரு தனதிப்பலு ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. விசாகா மாவட்டத்தின் பாசன முக்கிய ஆதாரமாகச் சாரதா ஆறு உள்ளது.

நீர்ப்பாசன திட்டங்கள்

தொகு

இராவிபாலம் கிராமத்திற்கு அருகில் சாரதா ஆற்றின் கிளை ஆறான பெத்தேருவில் பெத்தேறு நீர்ப்பாசனத் திட்டம் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் 13,334 ஏக்கர்கள் (53.96 km2) ) நீர்ப்பாசனம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மாடுகுலா மற்றும் ராவிகமதம் மண்டலங்களில் நீர்த்தேக்கத் தளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதி 160 சதுர கிலோமீட்டருக்கு மேல் நீட்டிக்கப்பட்டுள்ளது. யெல்லமஞ்சிலி, ராம்பள்ளி, அச்சுதாபுரம் மண்டலங்களில் பாசனத்திற்கு அதிகபட்ச நீரைப் பயன்படுத்துவதற்காக கோகிவாடா கிராமத்தின் அருகே ஆற்றின் மீது இரண்டு பெரிய வாயில்களுடன் கூடிய அணைக்கட்டு கட்டப்பட்டது.

சுமார் 93 மில்லியன் கன மீட்டர் நேரடி சேமிப்புத் திறன் கொண்ட ரைவாடா அணை 1981ஆம் ஆண்டு நீர்பாசனத்திற்காகக் கட்டப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Sarada River.CWC
  2. "Raiwada D02223". பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_ஆறு_(ஆந்திரா)&oldid=3968253" இலிருந்து மீள்விக்கப்பட்டது