சார்ப்பி கரிச்சான்

சார்ப்பி கரிச்சான் (Sharpe's drongo-டைக்ரூரசு சார்ப்பி) என்பது சகாரா கீழமை ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு கரிச்சான் சிற்றினமாகும். இது தெற்கு தெற்கு சூடான் மற்றும் மேற்கு கென்யா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு வரை நைஜர் ஆற்றின் கிழக்கே நைஜீரியா மற்றும் பென்யூ ஆற்றின் தெற்கே பரவியுள்ளது.[1]

சார்ப்பி கரிச்சான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. sharpei
இருசொற் பெயரீடு
Dicrurus sharpei
ஒவுசுடாலெட், 1879
வேறு பெயர்கள்

டைக்ரூரசு லுட்விக்கி சார்ப்பி

சார்ப்பி கரிச்சான் 1879ஆம் ஆண்டில் பிரான்சு விலங்கியல் நிபுணர் எமிலி ஓசுடலெட் என்பவரால் காபோனில் உள்ள ஓகோவ் ஆற்றில் தும் என்ற இடத்தில் கொல்லப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து விவரிக்கப்பட்டது. இவர் டைக்ரூரசு சார்ப்பி என்ற இருசொற் பெயரை உருவாக்கினார்.[2] சிற்றினப் பெயரானது இங்கிலாந்து பறவையியலாளர் ரிச்சர்ட் பாட்லர் சார்ப் என்பவரைக் கௌரவிக்கின்றன.[3] இது நீண்ட காலமாகச் சதுர வால் கரிச்சானின் (டைக்ரூரசு லுட்விஜி) ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2018ஆம் ஆண்டு மரபணு வேறுபாடுகள் குறித்த ஆய்வு இரண்டும் தனித்துவமான சிற்றினங்கள் என்பதைக் குறிக்கிறது. அச்சுத்தண்டுகளில் வெள்ளை நுனிகள் இல்லாததாலும், டை. லுட்விஜியின் பச்சை நிற நீல-கருப்பு ஒளிரும் தன்மையைக் காட்டிலும் மந்தமான ஊதா-நீல ஒளிரும் தன்மை கொண்டிருப்பதனாலும் இதை டை. லுட்விக்டிலிருந்து வேறுபடுத்தலாம்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dicrurus ludwigii sharpei (Square-tailed Drongo (Sharpe's)) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
  2. Émile Oustalet (1879). "Catalogue méthodique des oiseaux recueillis par M. Marche dans son voyage sur l'Ogooué avec description d'espèces nouvelles". Nouvelles archives du Muséum d'histoire naturelle. 2nd series 2: 53–148 [97]. https://biodiversitylibrary.org/page/36847674. 
  3. Jobling, J.A. (2019). del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A.; de Juana, E. (eds.). ""sharpei": Key to Scientific Names in Ornithology". Handbook of the Birds of the World Alive. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 2 February 2019.
  4. Fuchs, J.; Douno, M.; Bowie, R.; Fjeldså, J. (2018). "Taxonomic revision of the Square-tailed Drongo species complex (Passeriformes: Dicruridae) with description of a new species from western Africa". Zootaxa 4438 (1): 105–127. doi:10.11646/zootaxa.4438.1.4. பப்மெட்:30313158. https://www.researchgate.net/publication/325879693. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ப்பி_கரிச்சான்&oldid=3944775" இலிருந்து மீள்விக்கப்பட்டது