கரிச்சான்
கரிச்சான் (ⓘ) (Drongo) என்பது சிறிய வகைப் பறவையாகும். இது பரவலாக தென் மற்றும் தென்கிழக்காசிய பிரதேசங்களில் காணப்படுகின்றது. வளர்ந்த கரிச்சான் பறவைகள் கடும் சாம்பல் நிறம் கொண்டு, ஆழமாக பிரிக்கப்பட்ட (இரட்டை வால் தோற்றம்) நீண்ட வாலைக் கொண்டது. இதனால் இதை ஊர்ப்புறங்களில் இரட்டைவால் குருவி எனவும் அழைப்பர். இவ்வினங்களில் துணையினங்கள் சாம்பல் நிற இறகு நிறத்தில் காணப்படுகின்றன. சில இனங்கள் தலையில் வெள்ளை குறியுடன் காணப்படுகின்றன. இளம் பறவைகள் மங்கலான பழுப்பு சாம்பல் நிறத்தில் காணப்படும். கரிச்சான்கள் கரையான், வெட்டுக்கிளிகள், குளவி, எறும்பு, புழுக்கள் போன்றவற்றை விரும்பி உண்ணும்.
Drongo | |
---|---|
டைக்ரூரசு பிராக்டியேட்டசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
Superfamily: | |
குடும்பம்: | விகோரசு, 1825
|
பேரினம்: | வயோலாட், 1816
|
மாதிரி இனம் | |
கோர்வசு பலிகேசியசு (பலிகேசியோ) லின்னேயஸ், 1766 |
கரிச்சான் பறவைகள் தங்கள் வாழ்விட எல்லையை இனப்பெருக்கக் காலத்தில் மிக விழிப்புடன் பாதுகாக்கும். இவற்றின் உத்தரவாதமான இந்தப் பாதுகாப்பினால் வலிமை குறைந்ந பறவைகளான புறாக்கள், தவிட்டுக்குருவிகள், கொண்டைக்குருவிகள் போன்றவை கரிச்சான்களின் கூடுகளுக்கு அருகில் தம்முடைய கூட்டை பாதுகாப்புக் கருதி அமைத்துக்கொள்ளும். தன் எல்லைக்குள் வரும் உருவில் பல மடங்கு பெரிய பறவைகளையும் தாக்கக் இவை தயங்காது.[1]
வகைப்பாட்டியல்
தொகுடைகுரசு பேரினமானது 1816ஆம் ஆண்டில் கரிச்சான்களுக்காக பிரெஞ்சு பறவையியல் வல்லுனரான லூயிசு பியர் வைலோட்டால் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] 1841ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் வல்லுனரான ஜார்ஜ் ராபர்ட் கிரே என்பவரால் மாதிரி சிற்றினம் பாலிகாசியாவோ (டைகுரசு பலிகாசியசு) என பெயரிடப்பட்டது.[3][4] பேரினத்தின் பெயரானது பண்டைய கிரேக்க வார்த்தைகளான டிக்ரோஸ் "பிளவு" மற்றும் ஓரா "வால்" ஆகியவற்றை இணைத்து உருவானது.[5] "டிரோங்கோ" என்றச் சொல்லானது மடகாசுகரின் பூர்வீக மொழியிலிருந்து வந்தது. இது உள்ளூர் சிற்றினங்களைக் குறிக்கிறது. இப்போது இச்சொல்லானது இக்குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[6]
கரிச்சான் குடும்பத்தில் இப்போது டைகுரசு பேரினம் மட்டுமே உள்ளது. இருப்பினும் கிறிஸ்டிடிசு மற்றும் போல்சு (2007) இக்குடும்பத்தை விரிவுபடுத்தி ரைபிதுரிடே (ஆத்திரேலிய விசிறிவால்), மொனார்கினே (அரச மற்றும் சொர்க்க ஈபிடிப்பான்) மற்றும் கிராலினினே (மேக்பை-வானம்பாடி) ஆகியவை அடங்கும். டைகுரசு பேரினத்தில் 30 சிற்றினங்கள் உள்ளன. அவை:[7]
- பொதுவான சதுர வால் கரிச்சான், டைகுரசு லுட்விகி - முன்பு சதுர வால் ட்ரோங்கோ
- மேற்கத்திய சதுர வால் கரிச்சான், டைகுரசு ஆக்சிடென்டலிசு - முதலில் 2018-ல் விவரிக்கப்பட்டது
- சார்ப்பி கரிச்சான், டைகுரசு சார்பி - டை. லுட்விகியிலிருந்து பிரிந்தது
- ஒளிரும் கரிச்சான், டைகுரசு அட்ரிபெனிசு
- முட்கரண்டி-வால் ட்ரோங்கோ, டைகுரசு அட்சிமிலிசு
- பளபளப்பான-முதுகு கொண்ட கரிச்சான், டைகுரசு டிவரிகேடசு - முட்கரண்டி-வால் ட்ரோங்கோவில் இருந்து பிரிக்கப்பட்டது
- வெல்வெட்-மேண்டட் கரிச்சான், டைகுரசு மாடசுடசு
- பேன்டி கரிச்சான், டைகுரசு டைகுரசு - வெல்வெட்-மேண்டட் ட்ரோங்கோவில் இருந்து பிரிந்தது
- கிராண்ட் கொமொரோ கரிச்சான், டைகுரசு புசிபென்னிசு
- அல்டாப்ரா கரிச்சான், டைகுரசு அல்டாப்ரானசு
- க்ரெஸ்டட் கரிச்சான், டைகுரசு போர்பிகேடசு
- மயோட் கரிச்சான், டைகுரசு வால்டெனி
- கருப்பு கரிச்சான், டைகுரசு மேக்ரோசெர்கசு
- சாம்பல் கரிச்சான், டைகுரசு லிகோபேயசு
- வெண்வயிற்றுக் கரிச்சான், டைகுரசு கேருலெசென்சு
- காக அலகு கரிச்சான், டைகுரசு அனெக்டென்சு
- வெண்கல கரிச்சான், டைகுரசு ஏனியசு
- சிறிய துடுப்புவால் கரிச்சான், டைகுரசு ரெமிபர்
- பாலிகாசியாவோ, டைக்ரூரசு பாலிகாசியஸ்
- முடி-கிரெஸ்டட் கரிச்சான், டைகுரசு ஹாட்டென்டோட்டசு
- தப்லாசு கரிச்சான், டைகுரசு மெனகேய் - முடி முகடு கரிச்சானிலிருந்து பிரிந்தது
- பலவான் கரிச்சான், டைகுரசு பாலாவானென்சிசு - முடி-முகடு கரிச்சானிலிருந்து பிளவு
- சுமத்ரா கரிச்சான், டைகுரசு சுமத்ரானசு - முடி முகடு கரிச்சானிலிருந்து பிரிந்தது
- வாலேசியன் கரிச்சான், டைகுரசு டென்சசு - முடி முகடு கரிச்சானிலிருந்து பிரிந்தது
- சுலாவெசி கரிச்சான், டைகுருசு மாண்டனசு
- Spangled கரிச்சான், டைகுரசு பிராக்டியேடசு
- சொர்க்க கரிச்சான், டைகுருசு மெகர்கிஞ்சசு
- அந்தமான் கரிச்சான், டைகுரசு அந்தமனென்சிசு
- துடுப்பு வால் கரிச்சான், டைகுரசு பாரடைசியசு
- இலங்கை கரிச்சான், டைகுரசு லோபோரினசு - சொர்க்க கரிச்சானிலிருந்து பிரிந்தது
டைக்ரூரிடே குடும்பம் பெரும்பாலும் இந்தோ-மலாயன் வம்சாவளியைச் சேர்ந்தது. சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் காலனித்துவம் பெற்றது. சுமார் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக வாலசுக் கோட்டின் குறுக்கே ஆத்திரேலியாவில் பரவுவது சமீபத்திய ஆய்வின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.[8]
உசாத்துணை
தொகு- ↑ "கரிச்சான்களின் வீரம்!". தி இந்து (தமிழ்). 7 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2016.
- ↑ Vieillot, Louis Jean Pierre (1816). Analyse d'Une Nouvelle Ornithologie Élémentaire (in பிரெஞ்சு). Paris: Deterville/self. p. 41.
- ↑ Gray (1841). A List of the Genera of Birds : with their Synonyma and an Indication of the Typical Species of Each Genus (2nd ed.). London: R. and J.E. Taylor. p. 47.
- ↑ Mayr, Ernst; Greenway, James C. Jr, eds. (1962). Check-list of birds of the world. Vol. 15. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 138.
- ↑ Jobling, J.A. (2018). del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A.; de Juana, E. (eds.). "Key to Scientific Names in Ornithology". Handbook of the Birds of the World Alive. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.
- ↑ Lindsey, Terence (1991). Forshaw, Joseph (ed.). Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. pp. 223–224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85391-186-0.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2018). "Orioles, drongos, fantails". World Bird List Version 8.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.
- ↑ Pasquet, Eric; Pons, Jean-Marc; Fuchs, Jerome; Cruaud, Corinne; Bretagnolle, Vincent (2007). "Evolutionary history and biogeography of the drongos (Dicruridae), a tropical Old World clade of corvoid passerines". Molecular Phylogenetics and Evolution 45 (1): 158–167. doi:10.1016/j.ympev.2007.03.010. பப்மெட்:17468015.
வெளியிணைப்புக்கள்
தொகு- Ashy Drongo videos, photos & sounds on the Internet Bird Collection