இலங்கை கரிச்சான்

இலங்கை கரிச்சான் (Sri Lanka drongo)(டைக்ரூரசு லோபோரினசு) அல்லது சிலோன் கிரீட கரிச்சான் என்பது டிக்ரூரிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு வகை சிற்றினப் பறவையாகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது முன்னர் துடுப்பு வால் கரிச்சான் சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்பட்டது. இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில மற்றும் மலைக் காடுகள் ஆகும்.

Sri Lanka drongo
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. லோபோரினசு
இருசொற் பெயரீடு
Dicrurus லோபோரினசு
(வெயலோட், 1817)

வகைபிரித்தல்

தொகு

டைக்ரூரசு லோபோரினசு வெயிலோட் , 1817, கடந்த காலத்தில் ஒற்றைச் சிற்றினமாக டைசெமுரூலசு பேரினம் அல்லது டைசெமுராயிடில் வைக்கப்பட்டது. வால் வடிவம் அல்லது குரல் வேறுபாடு அடிப்படையில் துடுப்பு வால் கரிச்சானுடன் ஒரு பெரும் பேரினத்தினை உருவாக்கலாம். வகைபாட்டியல் நிலையைத் தெளிவுபடுத்துவதற்கு மூலக்கூறு-மரபியல் ஆய்வுகள் தேவை.

பரவல்

தொகு

இந்த கரிச்சான் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில், தெதரு ஆறு முதல் வளவை ஆறு வரை ஈர மண்டலம் முழுவதும் காணப்படுகின்றன.

அடையாளம்

தொகு
  • உலோக நீலம் அல்லது பச்சை-நீலம் பளபளப்புடன் கூடிய கருப்பு இறகுகள்
  • வளைவு, தலைக்கவசம் போன்ற முகடு
  • நன்கு பிளவுபட்ட முட்கரண்டி வால்
  • செந்நிற கண்
  • பாலினங்கள் ஒத்தவை

நடத்தை

தொகு

காடுகளின் ஓரங்கள், தோட்டங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த தோட்டங்கள் ஆகியவற்றில் மட்டுப்படுத்தப்பட்ட மற்ற கரிச்சான்கள் போலவே காணப்படும் வனப் பறவையாகும். பெரும்பாலான கரிச்சான்கள் போலவே, இது திறந்த வெளிகளில் காணப்படும் பூச்சிகளை உண்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International. 2017. Dicrurus lophorinus (amended version of 2016 assessment). The IUCN Red List of Threatened Species 2017: e.T103711132A111467183. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103711132A111467183.en. Downloaded on 11 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_கரிச்சான்&oldid=3927863" இலிருந்து மீள்விக்கப்பட்டது