வாலேசியன் கரிச்சான்

வாலேசியன் கரிச்சான் (Wallacean drongo) அல்லது பெரும் வாலேசியன் கரிச்சான் (டைக்ரூரசு டென்சசு) என்பது கரிச்சான் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோர் நாடுகளில் காணப்படுகிறது. இது முன்னர் டைக்ரூரசு காட்டெண்டோட்டசின் இணையினமாகக் கருதப்பட்டது.

வாலேசியன் கரிச்சான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. densus
இருசொற் பெயரீடு
Dicrurus densus
போனாபர்தி, 1850

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .

பாதுகாப்பு நிலை

தொகு

வாலேசியன் கரிச்சான் மிகப் பெரிய பரப்பிடத்தினைக் கொண்டுள்ளது. இது 20,000 சதுர கிமீக்கும் அதிகமான பரப்பளவில் காணப்படுகிறது. ஆனால் இதன் மக்கட்தொகை வேகமாகக் குறைந்து வருவதாக அறியப்படவில்லை. இருப்பினும் மக்கள்தொகை அளவு அளவுகோலைப் பயன்படுத்தி அழிவாய்ப்பு இனமாகத் தகுதி பெற வில்லை. இந்தக் காரணங்களுக்காக இந்த சிற்றினம் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தினால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[2]

துணைச்சிற்றினங்கள்

தொகு

பின்வரும் ஆறு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[3]

  • டை. டென்சசு டென்சசு (போனபார்டே, 1850) வாலேசியன் கரிச்சான்
  • டை. டென்சஸ் விசினசு (ரென்ஷ், 1928) சிறு சுண்டாத் தீவு கரிச்சான்
  • டை. டென்சசு பிமான்சிசு (வாலசு, 1864) பிமா கரிச்சான்
  • டை. டென்சசு சும்பே (ரெஞ்ச், 1931) சும்பா கரிச்சான்
  • டை. டென்சசு குயேனி (ஈஜேஓ ஹார்டர்ட், 1901) தனிம்பார் கரிச்சான்
    • தனிம்பார் தீவுகள்
  • டை. டென்சசு மெகலோர்னிசு (ஜிஆர் கிரே, 1858) மொலுக்கன் கரிச்சான்

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Dicrurus densus". IUCN Red List of Threatened Species 2017: e.T22706990A118759558. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22706990A118759558.en. https://www.iucnredlist.org/species/22706990/118759558. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "BirdLife Data Zone".
  3. "Wallacean Drongo (Dicrurus densus) | the Internet Bird Collection". ibc.lynxeds.com. Archived from the original on 2010-04-16.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலேசியன்_கரிச்சான்&oldid=3477002" இலிருந்து மீள்விக்கப்பட்டது