அந்தமான் கரிச்சான்
அந்தமான் கரிச்சான் (Andaman drongo)(டைக்ருரசு ஆண்டமனென்சிசு) என்பது டைக்ருரிடே குடும்பத்தில் உள்ள கரிச்சான் பறவை சிற்றினமாகும். இது இந்தியப் பெருங்கடல் அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இரண்டு துணையினங்கள் முதன்மை தீவுக்கூட்டத்தின் முக்கிய தீவுகளில் காணப்படுகிறது. தீவுச் சங்கிலியின் வடக்கே கிரேட் கோகோ தீவு மற்றும் டேபிள் தீவில் துணையினம் டைகுருருரிஃபார்மிசு ஆகும்.
அந்தமான் கரிச்சான் Andaman drongo | |
---|---|
ஹேவ்லோக் தீவில் கரிச்சான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. andamanensis
|
இருசொற் பெயரீடு | |
Dicrurus andamanensis Beavan, 1867 |
அந்தமான் கரிச்சான் சுமார் 29 செ.மீ. நீளமுடையது. துணையினமான பெரிய டைகுருரிஃபார்மிசு சுமார் 35 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. இதனுடைய வால் நன்கு பிளவுபட்டும், அலகானது கருப்பு நிறமாகக் காணப்படுகிறது. சிறகுகள் கருப்பு (பழுப்பு நிற முதன்மையானவை தவிர) நிறத்துடன் பசுமையாக பளபளவெனக் காணப்படும். பால் ஈருருமை தன்மைக் காணப்படுகிறது. பெண் பறவையானது சிறியதாகவும், வால் பிளவானது குறுகியதாகவும் காணப்படும்.
இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காடுகளாகும். கரிச்சான் குருவி வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International. 2017. டைக்ருரசு ஆண்டமனென்சிசு. The IUCN Red List of Threatened Species 2017: e.T22707002A118539254. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22707002A118539254.en. Downloaded on 31 December 2018.