வெண்வயிற்றுக் கரிச்சான்

வெண்வயிற்றுக் கரிச்சான் [White-bellied drongo (Dicrurus caerulescens)] என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் காணப்படும் ஒரு கரிச்சான் இனக் குருவியாகும். மற்ற கரிச்சான்களைப் போலவே இது பூச்சிகளை உண்ணும் வழக்கம் கொண்டிருந்தாலும், சில வகைப் பூக்களின் தேனை விரும்பி உண்பதால் மகரந்தச் சேர்க்கையிலும் இது உதவுகிறது[2].

வெண்வயிற்றுக் கரிச்சான்
White-bellied Drongo Ghatgarh Nainital Uttarakhand India 02.02.2015.jpg
உத்தராகந்தில்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கரிச்சான்
பேரினம்: டைகுருசு
இனம்: D. caerulescens
இருசொற் பெயரீடு
Dicrurus caerulescens
லின்னேயசு(1758)
Subspecies

D. c. caerulescens
D. c. leucopygialis Blyth, 1846
D. c. insularis Sharpe, 1877

வேறு பெயர்கள்
  • Lanius caerulescens Linnaeus, 1758
  • Balicassius caerulescens (Linnaeus, 1758)
  • Buchanga caerulescens (Linnaeus, 1758)

உடலமைப்பும் கள அடையாளங்களும்தொகு

உடலமைப்புதொகு

சின்னானை விட அளவில் பெரியது [நீளம் = 24 cm] கரிக்குருவியை விட சிறியது. வாலின் பிளவு கரிக்குருவியின் வால் பிளவை விடவும் குறைவாக இருக்கும். மார்பின் அடிப்பகுதியிலிருந்து வெள்ளையாக இருக்கும். கண்விழிப் படலம் அரக்கு நிறம். ஆண் பெண் இரண்டும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும்[3].

கள அடையாளங்கள்தொகு

இரண்டு அல்லது மூன்று குருவிகள் மற்ற பூச்சியுண்ணும் பறவைகளுடன் சேர்ந்தே காணப்படும்; அந்தி நேரத்திலும் நன்கு இருட்டிய பிறகும் கூட இரையைத் தேடும்.

பரவலும் வாழ்விடமும்தொகு

பரவல்தொகு

மேற்கு குஜராத், மேற்கு ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகள்[4]. இனப்பெருக்கம் செய்யாத காலங்களில் இவை மத்திய குஜராத் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன[5].

வாழ்விடம்தொகு

இலையுதிர், மூங்கிற் காடுகளின் புதர்வெளிகள், தேயிலை, இரப்பர் தோட்டங்கள்.

உணவுதொகு

சிதடி எனப்படும் பாச்சை, வெட்டுக்கிளி, விட்டில், சிறகுடைய கறையான் உள்ளிட்ட பூச்சிகள்; திடீர்த் தாக்குதல் மூலம் உணவை பிற பறவைகளிடமிருந்து அபகரிப்பதும் உண்டு. எப்போதாவது, நாணல் கதிர்குருவிகளைத் தாக்கி உண்ணும்; Bombax, Erythrina- தாவரங்களுடைய மலர்களின் தேனை உண்ணும்.

ஒலிதொகு

பூங்குருவிகள், தினைக்குருவிகள் போன்றவற்றின் தொனியில் ஒலியெழுப்பும்; கரிக்குருவியைப் போன்றே பாடும். குறிப்பாக, தையல் சிட்டு, காட்டுக் கீச்சான், மாம்பழச் சிட்டு ஆகிய குருவிகளைப் போன்றே போலிக்குரல் எழுப்பும்[6][7].

படத்தொகுப்புதொகு

மேற்கோள்கள்தொகு

  1. BirdLife International (2012). "Dicrurus caerulescens". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22706967/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Ali. S, Ripley. S.D. (1972). Handbook of the Birds of India and Pakistan. p. 123. OUP
  3. "birdsoftheworld-White-bellied Drongo-அடையாளம் (Identification)". 24 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. "பரவல் வரைபடம் (Range Map)". 24 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Distribution of the White-bellied Drongo (வரைபடம்)". 24 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
  6. "xeno-canto". 24 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Sounds and Vocal Behavior - birdsoftheworld - White-Bellied Drongo". 24 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.